December 09, 2007

ஆர்ச்பிஷப் ஜான் செண்டாமூ, தனது போதகர் அங்கியின் கழுத்துப்பட்டையை நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெட்டி எறிந்துள்ளார்

ராபர்ட் முகாபே மீது ஆர்ச்பிஷப் ஜான் செண்டாமூ கடும்கோபம் : இங்கிலாந்தில் இருக்கின்ற யார்க் ஆங்கிலிக்கன் திருச்சபையின் ஆர்ச்பிஷப் ஜான் செண்டாமூ, தனது போதகர் அங்கியின் கழுத்துப்பட்டையை நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெட்டி எறிந்துள்ளார். அவ்வாறு வெட்டி எறிந்த பின்னர், ஜிம்பாவே அதிபர் ராபர்ட் முகாபே ஆட்சியை விட்டு அகலும் வரையில் தான் கழுத்துப்பட்டையை அணியப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ராபர்ட் முகாபேவும் அவரது நிர்வாகமும், ஜிம்பாவே மக்களை பட்டினி மற்றும் பயத்தில் தள்ளியுள்ளனர் என்பதை ஆப்ரிக்க தலைவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் உகாண்டாவில் பிறந்தவரான ஆர்ச்பிஷப் ஜான் செண்டாமூ கூறியுள்ளார்.

இதற்கிடையே, லிஸ்பனில் நடைபெற்று வரும் ஆப்ரிக்க ஐரோப்பிய மாநாட்டில் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ராபர்ட் முகாபே, ஐரோப்பா முரட்டுத்தனமாக நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ஜிம்பாவே நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர பிரிட்டனும், அமெரிக்காவும் முயலுவதாகவும் அவர் தெரிவித்தார்

No comments: