November 23, 2007
தமிழகத்தின் சமீபத்திய வன்முறைகள் : ஓர் ஆய்வு - 2
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:24 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
தமிழகத்தின் சமீபத்திய வன்முறைகள் : ஓர் ஆய்வு - 3
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:22 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவாளர் - 1
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:29 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவாளர்- 2
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:24 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:21 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 168 - ம் குறள்
சிலபேரு மண்வாசனைக்காகப் பண்றோம்னு பண்றாங்க
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:16 PM
0
comments (நெற்றிக்கண்)
உத்திரப் பிரதேசத்தில் வழக்கறிஞர்களை இலக்குவைத்து தொடர் குண்டுவெடிப்புகள்
- இந்தியாவின் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், வாரணாசி, ஃபைசாபாத் மற்றும் தலைநகர் லக்னவ் ஆகிய மூன்று நகரங்களில் ஏறத்தாழ ஒரே நேரத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.25 மணிக்கும் 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்துக்குள், மூன்று இடங்களிலும் குண்டுவெடிப்புக்கள் நடந்திருக்கின்றன. நீதிமன்ற வளாகங்களிலோ அல்லது அதற்கு வெளியிலோ, நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்களில் வைத்து இந்த குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டிருக்கின்றன.
வாரணாசி மற்றும் ஃபைசாபாத்தில் தலா இரண்டு வெடிகுண்டுகளும், லக்னவ்வில் ஒரு இடத்திலும் குண்டுவெடித்திருப்பதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் மாயாவதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வாரணாசியில் 9 பேரும், ஃபைசாபாத்தில் 4 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள். உயிரிழந்த 13 பேரில் நான்கு பேர் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில், செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச மாநில உள்துறைச் செயலர் செம்பர், இந்தக் குண்டுவெடிப்புக்கள் அனைத்தும், திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கின்றன. அனைத்தும், குறித்த நேரத்தில் வெடிக்கக்கூடிய டைமர் கருவிகள் பொருத்தப்பட்டவைஎன்றார். குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி, மத்திய புலனாய்வுத்துறை மீது குற்றம் சாட்டினார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் நடந்த குண்டுவெடிப்பு்ச் சம்பவங்களை அடுத்து, பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது - காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் இடைநீக்கம் : முஷாரஃபுக்கு இது பெரும் பின்னடைவுபாகிஸ்தானை காமன்வெல்த் அமைப்பிலிருந்து இடைநீக்கியதாக நேற்று வியாழக்கிழமை இரவு காமன்வெல்த் அமைப்பு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அறிவித்தது ஒரு நியாயமற்ற, முறையற்ற முடிவு என பாகிஸ்தான் கூறியுள்ளது.
காமன்வெல்த் அமைப்பின் அடிப்படை அரசியல் விழுமியங்களை கடுமையாக மீறுவதாக பாகிஸ்தானில் தற்போதைய சூழல் அமைந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். உகாண்டா தலைநகர் கம்பாலாவில் காமன்வெல்த் அமைச்சர்கள் செயற்குழு பாகிஸ்தானை அமைப்பிலிருந்து இடைநீக்குவதாக அறிவித்தது. அவசரநிலை சட்டத்தை விலக்கவும், இராணுவத் தலைவர் பதவியை துறக்கவும் ஜெனரல் முஷாரஃப் தவறிவிட்டார் என்பன இவ்வறிவிப்புக்கான காரணங்கள். காமன்வெல்த் தன்னிடம் நியாயமற்ற முறையில் நடந்துகொண்டுள்ளது என்று முஷாரஃப் கருதுகிறார் என்றாலும் அவசரநிலை இறுதியாக அகற்றப்படாதவரை பாகிஸ்தானை மீண்டும் சேர்த்துக்கொள்ளமுடியாது என்பதில் காமன்வெல்த் தீர்மானமாய் இருக்கிறது - பாகிஸ்தானை இடைநீக்கும் முடிவை இலங்கை ஆதரிக்கவில்லை
பாகிஸ்தானை காமல்வெல்த நாடுகள் அமைப்பிலிருந்து இடை நீக்கம் செய்யும் முடிவுக்கு இலங்கை அரசு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
நேற்று இரவு பாகிஸ்தானை காமல்வெல்த் நாடுகள் அமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்யும் முடிவை எடுத்த குழுவில் இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகமவும் இடம்பெற்றிருந்தார்.
அப்போது இந்த முடிவுக்கு ஆதரவாக அவர் வாக்களிக்கவில்லை என்று தெரிகிறது. - பேசாலையில் இராணுவத்தினர் புலிகள் இடையில் மோதல் : இலங்கையின் வடமேற்கே மன்னார் பேசாலையில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மோதலில் 17 விடுதலைப் புலிகளும், வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது
- மத்தியகிழக்கு பற்றிய அமெரிக்க மாநாட்டில் பங்கேற்க சௌதியரேபியா சம்மதம் : அமெரிக்காவின் அன்னாபொலிஸ் நகரில் அடுத்த வாரம் நடத்தப்படவுள்ள மத்தியகிழக்கு பற்றிய மாபெரும் மாநாட்டில் சௌதியரேபியா கலந்துகொள்ளும் என்று அந்நாடு அறிவித்துள்ளது
- புதிய அதிபரை தெரிவுசெய்ய லெபனான் நாடாளுமன்றம் மீண்டும் தவறியுள்ளது : லெபனானில் புதிய அதிபரை தெரிவுசெய்ய நாடாளுமன்றம் மீண்டும் தவறியிருப்பதால் தலைநகர் பெய்ரூட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது
- பாக்தாத்தில் குண்டுவெடிப்பு, 13 பேர் பலி: இராக்கிய தலைநகர் பாக்தாத்தில் கடந்த சில மாதங்களாக காணப்படாத கொடிய குண்டுத் தாக்குதல் ஒன்று ஜனநெருக்கடிமிக்க சந்தை ஒன்றில் நடத்தப்பட்டபோது 13 பேர் கொல்லப்பட்டார்கள். பலருக்கு காயம்பட்டது
- இராக்கிலுள்ள தமது துருப்பினரை திருப்பியழைக்க புதிய போலந்து பிரதமர் திட்டம் : இராக்கில் இப்போது எஞ்சியுள்ள போலந்து படையினரை இவ்வாண்டின் இறுதிக்குள் திருப்பியழைக்க தாம் திட்டமிட்டிருப்பதாக போலந்தின் புதிய பிரதமர் டோனல்ட் டஸ்க் உறுதிப்படுத்தியிருக்கின்றார்
- இன்றைய (நவம்பர் 23 வெள்ளிக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:56 PM
0
comments (நெற்றிக்கண்)
November 22, 2007
பாகிஸ்தானில் அடுத்து என்ன? - ஒரு ஆய்வு
எனினும் அரசியல் சூட்டைத் தணிக்கும் நடவடிக்கையில் அதிபர் முஷாரஃப் வெற்றியடைவார் என்றே தோன்றுகிறது.
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:49 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
இன்றைய குறள்
அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:13 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 167 - ம் குறள்
காவல்துறை = மனிதாபிமானம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:03 PM
0
comments (நெற்றிக்கண்)
முஷாரஃப் காட்டில் மழை
- முஷாரஃப் அதிபராக மீண்டும் தேர்வுசெய்யப்பட்டதை எதிர்க்கும் இறுதி வழக்கையும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர் : பாகிஸ்தானில் அதிபர் முஷாரஃபுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்த நீதிபதிகளை அவர் விலக்கிய பிறகு அமைக்கப்பட்ட புதிய உச்சநீதி மன்றத்தின் நீதிபதிகள் குழு அவர் மீண்டும் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டது தொடர்பாக தாக்கல்செய்யப்பட்ட இறுதி வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது. இது அவர் இராணுவத் தலைவர் பதவியிலிருந்து விலக அளித்திருக்கும் உறுதிமொழியை நிறைவெற்ற வழிவகுக்கிறது. அவர் இராணுவத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவேண்டும் என்பது அவரது எதிரிகள் மற்றும் பாகிஸ்தானின் மேற்குலக கூட்டணி நாடுகளின் முக்கிய வலியுறுத்தலாக இருந்தது. தமக்கெதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பினை வெளியிடக்கூடும் என்கிற ஊகத்தில் அவர் இந்த மாதத்தின் முற்பகுதியில் அமல்படுத்திய நெருக்கடி நிலை இன்னமும் தொடருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நெருக்கடி நிலையை விலக்க தன்னால் ஆன அனைத்தையும் செய்ய விருப்பததாக அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கூறுகிறார்
- இராக் மோதல்கள்: முப்பதுக்கும் அதிகமானோர் பலி : இராக்கில் பாதுகாப்புப் படையினருக்கும் அல்கைதா போராளிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் முப்பது பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்
- ஐரோப்பாவில் கொகெய்ன் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கிறது - கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை : கொகெய்ன் போதைமருந்து பயன்பாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினர் நாடுகளிலும் வேகமாக அதிகரித்துவருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது
- ஜிம்பாப்வே விவகாரம்: தென்னாப்பிரிக்கா சமரச முயற்சி : தென்னாப்பிரிக்க அதிபர் தாபோ ம்பெகி ஜிம்பாப்வே சென்றுள்ளார்.
காமன்வெல்த் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக உகாண்டா செல்லும் முன்னர் ஜிம்பாப்வே அரசாங்கத்துடனும் எதிர்கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்காக அவர் அங்கு சென்றார் - சோமாலியாவில் புதிய இடைக்கால பிரதமர் : நூர் ஹசன் ஹுசைன் சோமாலியாவின் செம்பிறைச் சங்கத்தின் தலைவரான அந்நாட்டின் புதிய இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்
- தொடரும் மோதல்களில் மேலும் பலர் பலி : இலங்கையின் வடக்கே வவுனியா மன்னார் மாவட்டங்களின் எல்லைப்புறமாகிய முள்ளிக்குளம் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் தொடர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பெய்யும் மழைக்கு மத்தியிலும் இந்த இரு தரப்பினரும் சண்டையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:37 PM
0
comments (நெற்றிக்கண்)
November 21, 2007
இன்றைய குறள்
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்
உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும் கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்
அறத்துப்பால் : அழுக்காறாமை
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:19 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 166 - ம் குறள்
பத்மஸ்ரீ கமலின் கவிதை வரிகளில் புல்லரித்துப்போனேன்! நானும் ஒரு தமிழன் என்ற கர்வத்துடன்!!
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:50 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
தராசு சொல்லுகிறது
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:28 PM
0
comments (நெற்றிக்கண்)
இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் அச்சு இயந்திரங்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தீக்கிரை
- இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான இரத்மலானை பகுதியில் அமைந்திருக்கும் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்துக்குள் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவொன்று, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அச்சு இயந்திரங்களுக்கு தீவைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது
- ஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு : இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள்
- இராக்குக்குள் மீண்டும் திரும்பும் மக்கள் : இராக்கிற்குள் ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் மக்கள் மீண்டும் திரும்ப வந்துகொண்டிருப்பதாக தாங்கள் கணிப்பதாக, இராக்கிய அதிகாரிகள் கூறுகிறார்கள்
- இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு : வவுனியா தவசிகுளத்தில் அண்மையில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 34 இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்
- ஷிராக் மீது நிதி முறைகேட்டு விசாரணை : பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபரான ஜாக் ஷிராக் அவர்கள், 1977 முதல் 1995 வரையிலான காலப்பகுதியில், பாரிஸ் நகர மேயராக இருந்த வேளை நகர நிதியை மோசடி செய்தது பற்றிய குற்றச்சாட்டுக் குறித்து முறையான புலன் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளனர்
- தனது போட்டியாளர்களை வெளிநாட்டு அரசுகள் ஆதரிப்பதாக புட்டின் குற்றச்சாட்டு : ரஷ்ய அதிபர் புட்டின் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், தனது அரசியல் எதிரிகளை வெளிநாட்டு அரசுகள் ஆதரிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்
- பெட்ரோலிய விலை அதிகரிப்பு : சர்வதேச அளவிலான பெட்ரோலின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகபட்சமாக ஒரு பீப்பாய் சுமார் நூறு அமெரிக்க டாலர்களைத் தொட இருக்கிறது. நியூயார்க்கில் ஒரு பீப்பாய் பெட்ரோலின் விலை தொண்ணூற்றி ஒன்பது டாலர்கள் மற்றும் ஐம்பத்தி ஒன்பது செண்ட்களைத் தொட்டிருக்கிறது
- காசாவில் ஆயுதகுழுக்களின் உறுப்பினர்களுக்கு மனித நேயச்சட்டங்கள் பற்றிய பயிற்சி : ஆயுத மோதல்கள் நடைபெறும் இடங்களில் சர்வதேச மனிதநேயச் சட்டங்களை கற்பிக்கும் தனது உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் காசாவில் உள்ள பாலத்தீன ஆயுதக்குழுக்களுக்கான பயிற்சியை ஆரம்பித்துள்ளது
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:18 PM
0
comments (நெற்றிக்கண்)
November 20, 2007
சாகித்ய அகாடமி விருதுபெற்ற கவிஞர் புவியரசுக்கு பத்மஸ்ரீ கமலின் விழா - 1
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:40 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:20 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 165 - ம் குறள்
சிறந்த மேடைப் பேச்சு என்பதே ஒரு ஏமாற்று வேலை
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:02 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம்
- தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் மீண்டும் தொடங்கியது : மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டுமென்று இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் விதிக்கு எதிராக தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களின் போராட்டத்தினை மீண்டும் தொடங்கியுள்ளார்கள். இது தொடர்பில் மருத்துவ மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வெவ்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள். அரசின் இந்தத் திட்டமானது உண்மையான கிராப்புற சேவையல்ல என்பது மாணவர்களின் வாதமாகவுள்ளது.
இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் பல இடங்கள் காலியாகவுள்ள நிலையில் மருத்துவப் படிப்பை ஆறு ஆண்டுகளாக அதிகரித்தால் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருவது குறைந்துவிடும் எனவும் மாணவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவில்தான் உலக அளவில் குழந்தைகள் இறப்பு அதிமாக இருக்கிறது என்றும் 73 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்ற காரணத்தினாலும், கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு எண்ணுகிறதாலும்தான் இவ்வாறான ஒரு திட்டத்தை அரசு முன்னெடுத்துவருகிறது என்று இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதஸ் தமிழோசையிடம் தெரிவித்தார். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணிசெய்யவேண்டும் என்பது இருந்தது என்றும், காலகட்டத்தில் அது இல்லாமல் போனது என்றும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் கூட இன்னமும் ஐந்து அல்லது பத்தாண்டுகள்தான் இருக்கும் எனவும் அமைச்சர் அன்புமணி கூறுகிறார். இந்த சர்ச்சை குறித்து சுகாதார அமைச்சர், மருத்துவ மாணவர்கள் மற்றும் பலரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/2115.ram - உலக எயிட்ஸ் நோயாளர்களின் மதிப்பீட்டு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது : உலகில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மதிப்பீட்டு எண்ணிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை பெரும் குறைப்பைச் செய்துள்ளது. எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 4 கோடி என்று கடந்த வருடத்தில் கூறியதற்குப் பதிலாக, உலகெங்கிலும் 3.3 கோடிப் பேரே எயிட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக யு என் எயிட்ஸ் நிறுவனம் தற்போது கூறியுள்ளது
- பாகிஸ்தானில் மூவாயிரம் பேர் விடுதலை : பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்பினால் கொண்டுவரப்பட்ட அவசர நிலையின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் அதிகமானோரை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது. மேலும் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் கூறியுள்ளார். ஆனால், தென்பகுதி நகரான கராச்சியில், நெருக்கடி நிலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற சுமார் 150 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் பலவந்தத்தைப் பிரயோகித்தனர். முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் உறுதி செய்தார். இந்த தேர்தலை புறக்கணிப்பதா, இல்லையா என்பது குறித்து பேனசீர் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கராச்சியில், கூடி கலந்தாலோசித்தனர் - ஆப்கானின் செப்புச் சுரங்க ஏலத்தை சீன பெற்றது : ஆப்கானிஸ்தானில் உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கம் ஒன்றை அமைப்பதற்கான ஏலத்தை சீன சுரங்க நிறுவனம் ஒன்று வென்றுள்ளது. காபூலுக்கு தெற்கே அய்நக் என்ற இடத்தில் அமைந்திருக்கும் இந்த சுரங்கத்தில், சுமார் 300 கோடி டொலர்கள் முதலீடு செய்யப்போவதாக சீன அரசுக்கு சொந்தமான சீனா மெட்டலர்ஜிக்கல் குழுமம் கூறுகிறது
- பிரான்ஸில் பெரும் வேலை நிறுத்தம் : பிரான்ஸில் ஆயிரக்கணக்கான அரசாங்க ஊழியர்கள், வேதனம் தொடர்பாக ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது ஓய்வூதிய நலன்களின் வெட்டுச் செய்யும் அரசாங்கத் திட்டத்தை எதிர்த்து ஏழு நாட்களாக போக்குவரத்துத் துறையினர் நடத்தும் போராட்டமும், இந்த வேலை நிறுத்துடன் இணைந்துள்ளது
- இலங்கையின் வடக்கே மோதல்கள் தொடருகின்றன 25 பேர் பலி : இலங்கையின் வடக்கே நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற சண்டைகளில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது
- இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு : மனித உரிமை மீறல் சம்வங்கள் குறித்து பல்வேறுபட்ட சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் மிகமோசமான 15 மனித உரிமை சம்பவங்களை விசாரித்தறியும் பொருட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடித்திருப்பதாக இலங்கை ஜனாதிபதி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார்
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மார்வன் அத்தப்பத்து இளைப்பாறினார் : ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மிகவும் சிறப்பான, நேர்த்தியான துடுப்பாட்ட வீரராகக் கருதப்படும் முன்னாள் அணித்தலைவர் மார்வன் அத்தப்பத்து இன்று தான் இலங்கை சார்பில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து இளைப்பாறுவதாக அறிவித்திருக்கிறார்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:31 PM
0
comments (நெற்றிக்கண்)
