வைத்தார்கள் ஆப்பு
அமெரிக்காவில் 'ஸ்பைக்' (Spike) என்றொரு தொலைக்காட்சிச் சேனல் இருக்கிறது. அதில் "The World's Amazing Videos and The World's Wildest Police Videos” என்றொரு நிகழ்ச்சி. உலகத்தில் நடந்த மிக அபூர்வமான விசயங்களை யாராவது வீடியோவில் திட்டமிட்டோ, எதிர்பாரா விதமாகவோ பதிவு செய்து வைத்திருந்தால் அதனை இவர்கள் விலைக்கு வாங்கித் தொகுத்து வழங்குகிறார்கள். இதில் சாதாரணமாக திருடு, கொலை, கொள்ளை, கத்திமுனையில் கடத்தல், வாகன விபத்து, போலீஸ் விரட்டிப்பிடிப்பது, மழை, வெள்ளம் மற்றும் தீ விபத்துக்களின் போது சிக்கிக்கொண்டவர்களை தீயணைப்பு வீரர்கள் எப்படியெல்லாம் சிரமப்பட்டுக் காப்பாற்றுகிறார்கள் என்பதையெல்லாம் பார்க்க முடியும். மேலும் பல நாடுகளில் நடந்த அரசியல் கட்சிகளின் வேலைநிறுத்தம், ஊர்வலம், கலவரம், அவ்வப்போது நடைபெற்ற அடிதடி, பாராளுமன்ற, சட்டமன்ற வளாகங்களுக்குள் நடக்கும் கோமாளித்தனம் அனைத்தும் பார்க்க முடியும்.
இந்த நிகழ்ச்சியின் முக்கியக் காரணங்கள் : குற்றங்களைக் குறைப்பதும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்தான். இதில் பல நாடுகளின் பாராளுமன்ற சண்டைக்காட்சிகள் இடம்பெறுவதுண்டு. நான் இந்தியாவில் இருக்கும்போது நமது சட்டமன்ற, பாராளுமன்றக் காட்சிகளை சில வருடங்களுக்கு முன் செய்தித்தாள்களில் படித்ததோடு சரி, திரைப்படங்களில் சில காட்சிகளையும் பார்த்ததுண்டு. ஆனால் நடந்த உண்மைச் சம்பவங்களை நான் பார்த்ததில்லை. “நல்லவேளை! நமது இந்தியா இப்படியெல்லாம் இல்லை! நடந்திருக்கும! ஆனால் இவ்வளவு மோசமாக இருக்காது என்று சில காட்சிகளைப் பார்க்கும்போது நினைத்துப் பெருமைப்பட்டிருக்கிறேன். வைத்தார்கள் ஆப்பு. சமீபத்தில் வேறொரு ஊடகத்தின் வாயிலாக நான் அந்த வீடியோவைப் பார்த்து ஆடிப்போனேன்! உங்களுக்கு "எந்த விதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல” என்பது போல் இருந்தது. நீங்களும் பாருங்கள்!!
No comments:
Post a Comment