November 16, 2007

முஷாரஃப் பதவி விலக வேண்டும் என்கிறார் பேநசிர்

  • தமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்கள் அமெரிக்காவில் முடக்கப்பட்டது குறித்து கொழும்பு அமெரிக்கத் தூதர் விளக்கம்
    தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பாக செயல்பட்டு அதற்கு ஆதரவாக நிதி சேகரித்ததாக் கூறி அமெரிக்க அரசின் கருவூலத் துறை நேற்று வியாழனன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்காவில் முடக்கி வைப்பதாக அறிவித்தது. இது தொடர்பில் வெள்ளிக்கிழமையன்று கொழுபிலுள்ள அமெரிக்கத் தூதர் ரொபர்ட் ஓ பிளேக் விரிவான விளக்கத்தினை அளித்துள்ளார். தமிழர் புனர்வாழ்வுக் கழகம், அறக்கட்டளை என்கிற பெயரில் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, அவர்களுக்கு நிதி மற்றும் ஆயுதங்கள் உட்பட இதர கொள்வனவுகளை மேற்கொண்டு வந்தது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என்று கூறினார்.
    மேலும் இந்த நடவடிக்கை விடுதலைப் புலிகளுக்கு எதிரானதுதான் என்றும் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். அமெரிக்கா, இலங்கையில் தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூக மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய வகையில் முன்னெடுக்கப்படும் நியாயமான சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வுக்கு அனைத்து ஆதரவையும் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார். இராணுவ வழிமுறைகள் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும் அமெரிக்க திடமாக நம்புகிறது என்றும் கொழுபிலுள்ள அமெரிக்கத் தூதர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்தார். இதனிடையே இது குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் திட்ட இயக்குநர் ஜான் கிறிஸ்டி, அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தமது அமைப்பின் நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படையாகவும், அனைவருக்கும் திருப்தியளிக்கக் கூடிய வகையிலும் உள்ளன என்றும் அவர் கூறினார். அமெரிக்கத் தூதர் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் திட்ட இயக்குநர் ஆகியோரது பேட்டிகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/2115.ram
  • வான்வழித் தாக்குதலில் புலிகளின் படகு கட்டுமான நிலையம் அழிக்கப்பட்டுள்ளது: இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தின் மீது இன்று வெள்ளிக்கழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படகு கட்டுமான நிலையம் அழிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
    கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுவுக்கு மேற்கே முறிகண்டி பகுதியில் நேர்த்தியான மறைவிடம் ஒன்றில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் படகுக் கட்டுமான தளத்தின் மீதே இந்த விமான குண்டுத் தாக்குதல் காலை 6.30 மணியளவில் நடத்தப்பட்டதாகவும், இங்கு விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினர் படகு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • முஷாரஃப் பதவி விலக வேண்டும் என்கிறார் பேநசிர் : பேனசிர் பூட்டோபாகிஸ்தானில் புதிதாக பதவிப் பிரமாணம் செய்துள்ள காபந்து நிர்வாகத்தை புறக்கணிப்பதாகக் கூறியுள்ள முன்னாள் பிரதமர் பேனசிர் பூட்டோ, அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் பதவி விலகவேண்டும் என்று கோருகிறார். வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டு சில மணி நேரங்களே கடந்த நிலையில் பேசிய அவர், இந்த புதிய நிர்வாகம் ஆளும் கட்சியின் ஒரு உறுப்புதான் என்றும், அதிபர் முஷாரஃப் தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் ஒரு தந்திரம்தான் இது என்றும் கூறினார். ஜனவரி மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டுள்ள தேர்தல்களை புறக்கணிப்பதா, வேண்டாமா என்று தானும் இன்னொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் பரிசீலித்துவருவதாக அவர் தெர்வித்தார்.
    அரசியல் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்காக அமெரிக்கத் தூதர் ஜொன் நெக்ரொபொண்டே பாகிஸ்தான் வந்திறங்கிய வேளை பேனசிர் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
  • வங்கதேச சூறாவளியினால் பெரும் சேதம் : நூற்றுக்கணக்கானோர் பலி
    வங்கதேசத்தின் தென்மேற்குக் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய சக்திமிக்க சூறாவளியினால், பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது
  • ரஷ்யாவுக்கு தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டது : ரஷ்ய நாடாளுமன்றம்ரஷ்யாவில் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு கண்காணிப்பாளர்களை அனுப்புவது என்ற திட்டத்தை ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கைவிட்டுள்ளது
  • குர்து ஆதரவுக் கட்சியைத் தடை செய்ய துருக்கி அரசு நடவடிக்கை : குர்து கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவு வழங்குவதாக குற்றஞ்சாட்டப்படும், முக்கிய குர்து ஆதரவு அரசியல் கட்சியான DTP கட்சியை தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை துருக்கி நாட்டு அரச சட்டவாதிகள் ஆரம்பித்துள்ளனர்
  • தடைமீறி பர்மா உள்ளிருந்து வெளிநாட்டு செய்தியாளர் அனுப்பியுள்ள சிறப்புப் பெட்டகம் : பர்மா வந்துள்ள ஐ.நா.மன்ற மனித உரிமைகள் தூதர் பொலொ செர்ஜியோ பின்ஹெய்ரோ, உண்மை கண்டறியும் அவரது இந்த சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டத்தில், நேற்று வியாழக்கிழமை, இரண்டு அரசியல் கைதிகளை அவர் சந்திக்க பர்மீய அதிகாரிகள் அனுமதித்திருந்தார்கள்

No comments: