July 31, 2008

ரஜினி இரட்டை வேடம் : தமிழ் திரை உலகம் கண்டனம்

நடிகர் ரஜினிகாந்த் கன்னட மக்களிடம் மன்னிப்புக் கோரி இருக்கும் செயலுக்கு தமிழ் திரை உலகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒக்கனேக்கல் தொடர்பாக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட பேசிய நடிகர் ரஜினி, ‘ஒக்கனேக்கல் திட்டத்துக்கு எதிராக இருப்பவர்களை உதைக்க வேண்டாமா? என்று ஆவேசப்பட்டார். அவரின் இந்த ஆவேசப் பேச்சு கன்னட மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரஜினிக்கு எதிரான போக்கு கர்நாடகத்தில் தலைதூக்கியது. அவருடைய படங்கள் உட்பட எந்த தமிழ் படங்களையும் கர்நாடகாவில் திரையிடுவதில்லை என்று அங்குள்ளவர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் (வெள்ளிக் கிழமை) ரஜினி நடித்த குசேலன் படம் உலகமெங்கும் நாளை திரையிட உள்ளது. ஆனால் பெங்களூரில் குசேலனை வெளியிட பெரும் எதிர்ப்புக் கிளம்பயது. ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்டால் மட்டுமே வெளியிடப்படும் என்று சில கன்னட அமைப்புக்கள் எச்ச்ரித்திருந்தன.
இதனை அடுத்து கன்னட தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “நான் தவறு செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்” என்று கன்னட மக்களிடம் மன்றாடி உள்ளார். ரஜினியின் இந்த மன்னிப்பு தமிழ் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி இருக்கிறது. இதுகுறித்து தமிழ் திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறி இருப்பதாவது :-

"ரஜினி எதை தவறு என்று சொல்கிறார்? தமிழ்நாட்டில் உள்ள ஒக்கனேக்கலிலிருந்து தமிழ் நாட்டுக்கு தண்ணீர் வேண்டும் என்று தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததை தவறு என்று சொல்கிறாரா? தமிழ்நாட்டு ரசிகர்களை கவர இங்கே ஒரு பேச்சு; கன்னடர்களிடம் ஆதாயம் அடைய அங்கே ஒரு பேச்சா? ரஜினிகாந்தின் மன்னிப்பு ஏற்றுக் கொள்ளமுடியாது" என்று கூறி உள்ளார். அதே போல் லட்சிய திமுக கட்சியின் தலைவரும், இயக்குநருமான விஜய டி.ராஜேந்தர் ரஜினிகாந்தின் மன்னிப்பு நடவடிக்கையை இரட்டை வேடம் என்று விமர்சித்துள்ளார். அவர்(ரஜினி) எப்பொழுதும் தன்னை கன்னடர் என்று காட்டிக் கொள்ளத் தவறியதே இல்லை. இதிலிருந்து அவரின் சுயரூபம் வெளிச்சத்துக்கு வந்து விட்டது என்று டி.ஆர்.தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தமிழ் அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.

1 comment:

ஆ.ஞானசேகரன் said...

ரஜினி ஒரு நல்ல வியாபாரி, நம்மக்கள்தான் தலைவராக்கி பார்க்கின்றனர். நல்ல மூடர்கள் இவர்களை திருந்தச்சொல்லுங்கள்....
தலைவர்களுக்கு பொருமையும் நிதானமும் அவசியம்.. அதை இழந்த ரஜினி வேடிக்கையானவர், தனுசுக்காக எப்படியெல்லாம் மக்களை மூடர்களாக்கி சம்மாரிக்கின்றார் பாருங்கள்... இவர் மன்னிப்பு கேட்டது சரியென்றால் வியாபாரியாக ஒப்புகொள்ளலாம்... ஒக்கனேக்கல் பிரச்சனையில் பேசியது தவறென்றால், தலைமைக்கும் பொதுப்பிரச்சன்னைக்கும் லாயிக்குயில்லை என்பதும் உண்மைதானே.. எப்படியானாலும் மக்களை முட்டாளாக்கி நல்ல வியாபாரியாகின்றார்...