April 30, 2007
ஏ இந்தியனே!
“ஒவ்வொரு இந்தியனும் வேதனைப்படக்கூடிய விசயமும் கூட”
காரணம் அதற்குச் சூட்டியிருக்கக்கூடிய பெயர் “ஆதாம் பாலம்” (ADAM BRIDGE).
ஏ இந்தியனே!
இதுவரை நீ
இளிச்சவாயனாக இருந்தது போதும்!
இனிமேலாவது விழித்துக்கொள்!!
'லண்டன் பாலம்' (LONDON BRIDGE) மற்றும் அமெரிக்காவில் உள்ள 'கோல்டன் கேட் ஆப் அமெரிக்கா' (GOLDEN GATE) போன்றவற்றை "இராமர் பாலம்" என்றோ அல்லது "லட்சுமணர் பாலம்" என்றோ நாம் பெயர் சூட்டினால் அவர்கள் ஒத்துக்கொள்வார்களா? இன்னொரு உலக யுத்தம் வெடிக்கும்.
இந்தியனே!
தமிழனே!! சிந்தித்துப்பார்!!!
இதற்காக நீ செய்யப்போவது என்ன?
குறைந்தபட்சம் இந்த விசயத்தை
உனக்குத் தெரிந்த வட்டத்துக்குச் சொல்
காலம் பதில் சொல்லும்!
பாலம் யார் கட்டியது? யார் மேஸ்திரி வேலை பார்த்தார்? எத்தனை சித்தாள் வேலை செய்தார்கள்? அதில் எந்தெந்த சாதிக்காரன் என்ன பங்கு வகித்தான் என்பதெல்லாம் அடுத்த விசயம்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்த இராமாயணம், மஹாபாரதம் போன்ற மானுடம் போற்றும் இதிகாசங்களைக் கற்பனை என்று கேலி பேசிக்கொண்டிருக்கும் அரைவேக்காடுகளைக் கண்ணத்தில் அறைந்தாற்போல் விஞ்ஞானம் இன்று பல உண்மைகளைக் கண்டுபிடித்திருக்கிறது, "கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்தகுடி" என்று பேசுவது எத்தனை தூரம் உண்மை? நம் பாரம்பரியம் என்ன? நம் வரலாறு என்ன? அதில் எத்தனை புதிர்கள் அடங்கியிருக்கின்றன? எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இந்திய மண்ணில் தோன்றிய மனிதனின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது? மனிதன் எப்படி வாழ்ந்தான்? நமது கலாச்சாரம் என்ன? நமக்கும் இலங்கைக்கும் உள்ள உறவுகள் எப்படி? இப்படி எத்தனையோ கேள்விகளுக்கு விடை சொல்லப்போகும் இந்த விண்வெளிப் புகைப்படங்களைப் பாருங்கள்.
நமது பாரம்பரியம், வரலாறு, கலாச்சாரம் இவைகளெல்லாம் ஆராய்ச்சியாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் வேண்டுமானால் வேண்டாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் இந்த ப்ரபஞ்சத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும், ஆன்மீகப்பாதையில் ஆர்வம் கொண்ட ஒவ்வொரு ஜீவராசிக்கும் இந்தியக் கலாச்சாரம் எப்படிப்பட்டது, நமது தொடக்கம் என்ன? நமது மூலம் யார்? இந்த உலகத்தின் ஒவ்வொரு அசைவிலும் நம் இந்தியப் பங்கீடு என்ன? நாம் எப்படிப்பட்ட பாரம்பரியம் மிக்கவர்கள் என்றெல்லாம் புரியும். ஆக,
உங்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!
நமது சக சகோதரர்களுக்கும் இதனைச்சொல்லுங்கள்!!
விதைத்து வைப்போம், முளைக்கும்போது முளைக்கட்டும்
ஆனால் நாம் விதைக்கக்கூடிய ஒவ்வொரு விதையும் ஆலவிருட்சங்களாக அணி வகுக்கட்டும்.
நவநீ
Posted by Manuneedhi - தமிழன் at 9:05 PM 0 comments (நெற்றிக்கண்)
நல்லவர்கள் நினைப்பது ஒன்றுதான் நடப்பதில்லை..
நம் தமிழ்நாட்டில்....- ஆம் அது இன்றும் பொருந்தும். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் சிம்மக்குரல் கொடுத்த ஒரு மாவீரனை நாம் எல்லாம் மறந்திருக்கமாட்டோம்.
Posted by Manuneedhi - தமிழன் at 3:59 PM 0 comments (நெற்றிக்கண்)
வீரபாண்டியக் கட்டபொம்மன் - ஜாக்சன் துரை வீரவசனம்
Posted by Manuneedhi - தமிழன் at 3:55 PM 0 comments (நெற்றிக்கண்)
பாஞ்சாலங்குறிச்சிப் போர்ப்படை - வீரபாண்டியக் கட்டபொம்மன்
Posted by Manuneedhi - தமிழன் at 3:47 PM 0 comments (நெற்றிக்கண்)
சுதந்திரத்தைச் சும்மா வாங்கிவிடவில்லை
Posted by Manuneedhi - தமிழன் at 1:24 PM 0 comments (நெற்றிக்கண்)
"தமிழகமே ஒரு பெரிய கள்ளுக்கடையாக மாறுகிறபோது"
மேடைப் பேச்சாளர் தன் புலமைக் கொடியை நிலைநாட்டத் திருக்குறளைச் சற்று விரிவாகக் கற்றிருக்க வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. ஆங்காங்கே வாகாகச் சில குறள்களைப் பொறுக்கி நெட்டுரு செய்திருந்தாலே போதுமானது.பல்வேறு சந்தர்ப்பங்களுக்கும் பொருந்தி வருவதுபோல் அக்குறள்களின் தேர்வு அமைந்திருந்தால் சொற்பொழிவாளர் கெட்டிக்காரர்தான். அரசியல் மேடைகளில் எந்தெந்த குறள்கள் ஜொலிக்கும் என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும். கைவசம் இருக்கும் குறளுக்குத் தோதாகப் பேச்சின் தலைப்பு அமையவில்லை என்றால் அதை இழுத்து மடக்கிக் கைவசப்படுத்திக் கொள்வதும் மேடைப் பேச்சுக்குரிய சாமர்த்தியங்களில் ஒன்றுதான். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பத்தில் சிறிது கூச்சமாகவே இருக்கும். கூச்சம் மனித ஜன்மங்களுடன் இணைந்து வந்துகொண்டிருக்கும் ஒரு பழைய வியாதி. ஆனால் கைதட்டல் தரும் பரவசம் அக்கூச்சத்தை இருந்த இடம் தெரியாமல் அடித்துவிடும்.திருக்குறள் சார்ந்த புலமையை மெய்யாகவே தேடிச் செல்வது மற்றொரு வகையினரின் இயல்பு. இவர்களின் நோக்கம் சமுதாய நலன் சார்ந்தது. வள்ளுவரின் கருத்துகளைச் சமுதாயத்தில் பரப்பினால் மக்கள் மேல்நிலையை அடைந்துவிடுவார்கள் என்பது இவர்கள் நம்பிக்கை. தமிழ் வாசகர்கள், படைப்பாளிகள், படிப்பாளிகள் ஆகியோரின்ஏகோபித்த பாராட்டைப் பெற்று வருகிறவர்கள் இவர்கள். திருக்குறளைத் தமிழ்ச் சமூகத்தில் பரப்பும் தொண்டைத் தலைப் பொறுப்பாக வைத்துக் கொண்டிருக்கும் இவர்களுடைய செயலபாடுகள் பொதுவாக இரண்டு தளங்களில் நிகழ்கின்றன. எழுத்து வடிவத்திலும், பேச்சு வடிவத்திலும். மேடைப் பேச்சாளர்கள் நூலாசிரியராகவும், நூலாசிரியர்கள் மேடைப் பேச்சாளராகவும் இயங்குவது இயற்கை.இரண்டு ஆற்றல்களையும் சரிசமமாகக் கொண்ட இரட்டைத் துப்பாக்கிகளும் நம்மிடையே உண்டு.திருக்குறளைச் சமுதாயத்தில் பரப்ப விரும்புகிறவர்களின் ஆவேசங்கள் கட்டுக் கடங்காதவை. இவர்களை நாம் அவ்வப்போது சந்திக்கிறேன். தமிழ்ச் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் - ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடு இன்றி - குறளை முழுமையாக மனப்பாடம் செய்ய வேண்டும், திருக்குறளைக் கட்டாயப் பாடமாக்கினால்கூடத் தவறில்லை என்றார் ஒரு நண்பர். திருக்குறளை முழுமையாகக் கற்றவர்களையே தமிழ் அறிஞர்கள் என ஒப்புக்கொள்வேன் என்றார் மற்றொருவர். திருக்குறளை முழுமையாகக் கற்றறியாதவர்களின் டாக்டர் பட்டங்களைத் தான் மதிப்பதில்லை என்றும் சேர்த்துக்கொண்டார்.
தமிழர்களுக்கு வேதம், குரான், பைபிள், பகவத் கீதை, தம்மபதம் எல்லாம் குறள்தான் என்றார். இவர்களுடைய ஆவேசங்கள் மீது எனக்கு மதிப்பு உண்டு. 1330 குறள்களையும் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒப்பிக்கத் தெரிந்து விட்டால் தமிழ்ச் சமூகம் மேல்நிலையை அடைந்துவிடுமா என்று நான் என் ஆவேச நண்பரிடம் கேட்டேன். உறுதி, உறுதி, உறுதி என்று மூன்று முறை சொன்னார்.நமக்குத் தேவை மனப்பாடத் தகுதியா அல்லது முற்றாக நம்பி ஏற்கும் குறள்களின் கருத்துகளையேனும் வாழ்வில் புகுத்தி அவற்றின் வலிமையை நடைமுறையில் உணர்ந்துகொள்வதா என்று கேட்டேன். இந்த உணர்வு வலுவடையும்போதுதானே திருவள்ளுவர் மீது அதிக நம்பிக்கை கொள்வோம் என்றும் சொன்னேன். குறள் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு நூல். இன்றும் நம்மைச் செம்மைப் படுத்திக்கொள்ளவும் செழுமைப்படுத்திக்கொள்ளவும் அந்நூல் உதவும் என்று நம்பத் தொடங்கும்போதுதான் குறளுக்கும் நமக்குமான உறவு துளிர்க்கத் தொடங்குகிறது. வாழ்வுக்கு வழிகாட்டும் நு‘லை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்? மேடைப் பேச்சுக்கு உபயோகப்படும் கருவியாகவா? நினைவாற்றலை வளர்க்க ஒரு பயிற்சியாகவா? புலமைப் பிரகடனத்திற்கான முகாந்தரமாகவா?நாம் வாழ்வின் தளத்தில் ஏழ்மைப்பட்டு நிற்கிறோம். பொருள் சார்ந்த ஏழ்மையும் கலாச்சாரம் சார்ந்த ஏழ்மையும் இக்காலத்தில் நம்மை வாட்டுகின்றன. பொது வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது காலாவதியாகி விட்டது. பண உறவுகள் வாழ்க்கைக்கு அடிப்படையான சகல உறவு களையும் கபளீகரம் செய்துகொண்டிருக்கின்றன. மனித நேயம் என்ற சொல்தான் எழுத்திலும் பேச்சிலும் அதிகம் அடிபடும் சொல். வாழ்க் கையில் அருகிப் போயிருப்பதும் இந்த மனிதநேயம்தான்.
உலகியல் சார்ந்து கால்களை மண்ணில் ஊன்றி நிற்க வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். இந்த உலகத்துக்குரிய இன்பங்களைத் துறக்காமல், பொறிகளை ஒடுக்காமல், மற்றொரு உலகத்தை எண்ணி ஏங்காமல், மனைவி, குழந்தைகளுடன் வாழ விரும்புகிறோம்.இந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள சில அடிப்படை நியதிகளை இளமையிலேயே நாம் தெரிந்துகொண்டுவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு செயலுக்குத் துணையாக நிற்பது மற்றொரு சந்தர்ப்பத்தில் பொய்த்துப் போய்விடுகிறது. நிரந்தரமான நியதிகள் என்று எதுவுமே கிடையாதா? இருந்தால் அவற்றைத் தொகுத்துக்கொள்வது வாழ்க்கைக்கே ஊன்றுகோல் போல அமையுமே.
இவ்வாறான தேடல் உருவாகும் மனங்களுக்குத்தான் பொது நெறிகளை வற்புறுத்தும் பேரிலக்கியம் தேவையாக இருக்கிறது. நாம் உலகியலில் பற்றுகொண்டிருப்பதால் திருவள்ளுவரின் உறவு மிக இணக்கமாக அமைந்துவிடுகிறது. ஒரு ஊரின் வரைபடம் ஒன்று நம் கைவசம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அது சரியான வரைபடம்தானா? அந்த வரைபடம் சார்ந்து பயணத்தை மேற் கொள்ளும்போது அது சுட்டும் இடங்களுக்கு நாம் போய்ச் சேர்ந்தால் அந்த வரைபடம் சரியானதுதான்.
சில நோய்களுக்குச் சுயமாகச் சிகிச்சை செய்துகொள்ள வழிவகைகள் கூறும் நு‘ல்கள் இருக்கின்றன. அவற்றின் உதவியால் நோய்களைக் குணப்படுத்திக்கொள்ளும்போது அந்த நு‘ல் களின் மீது நம்பிக்கை கொள்கிறோம்.வாழ்க்கையின் அடிப்படையையே கற்றுத் தர முற்பட்ட நு‘ல் வள்ளுவம். அது தமிழ் வாழ்வுக்குரிய நெறியை வகுத்திருக்கிறது. மதிப்பீடுகளை மொழிக்குள் துல்லியப்படுத்தித் தருகிறது. திருவள்ளுவர் 2000 வயதான இளைஞர்.இன்றும் அவர் உயிர்ப்புடனே இருக்கிறார்.அந்த உயிர்ப்பை நமக்கு உணர வைப்பது அவருடைய மொழி ஆற்றலும் சிந்தனையின் கூர்மையும். அதில் பழமையின் பாசி இன்னும் படியவில்லை.வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக்கொள்ளத் திருக்குறளைப் பயன்படுத்தும் போதுதான் அந்தப் பெருநு‘லுக்குரிய மதிப்பை உண்மையாகவே அதற்கு அளிக்கிறோம். 1330 குறள்களையும் நாம் மனப்பாடமாகக் கற்றுவிடலாம். குறுகிய நேரத்தை ஒதுக்கி ஓராண்டில் முடித்துவிடலாம். ஆனால் அந்த மனப்பாடத் தகுதி நம் வாழ்க்கையில் கடுகளவு மாற்றத்தைக்கூட உருவாக்காது. குறளைக் கற்று அதன் பொருளை நாம் நுட்பமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
புரிந்துகொள்ளப் பல உரைகள் இருக்கின்ன. அந்த உரைகள் நமக்கு உபயோகமானவை தான். ஆனால் குறளுக்கு நாம் அளிக்கும் பொருள் உரைகள் சார்ந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உரையாசிரியர்களுக்குள் கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. உரைகளை ஏற்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும்கூட எந்த உரையைத் தேர்ந்தெடுப்பது என்ற முடிவை நாம்தாம் எடுக்க வேண்டியிருக்கிறது.
நாம் நமக்குச் சொந்தமான உரைகளை விவேகத்துடன் உருவாக்கிக்கொள்ள முடியும். உரைகளின் உதவியுடன் நாம் உருவாக்கும் அர்த்தங்கள் மூலப் பாடத்துக்கு முரண்பட்டு நிற்கக்கூடாது. இதன் பொருள் திருவள்ளுவர் ஒன்று சொல்ல நாம் அதை மற்றொன்றாகப் புரிந்துகொள்ளக்கூடாது என்பதுதான். திருவள்ளுவரை நாம் நண்பராகத்தான் பாவிக்க வேண்டும். இதற்குமுன் எந்த நூற்றாண்டிலும் இல்லாத இளமையை அவர் சென்ற நூற்றாண்டில் - இப்போது நாம் தாண்டி வந்திருக்கும் நூற்றாண்டில் - பெற்றிருக்கிறார்.
அவர் மிகப் பெரிய பெருமையை அடைந்தததும் சென்ற நூற்றாண்டில்தான். எந்த அறிவையும் புனிதப்படுத்தினால் அது அந்நியப்பட்டுப் போய்விடும். நடைமுறையிலிருந்து பின்னகர்ந்து சடங்குக்குள் சென்று விழும். சடங்கும் சம்பிரதாயமும் தோன்றிவிட்டால் பூசாரிகள் தோன்றிவிடுவார்கள்.திருக்குறள் மக்களுக்கான நூல். அது நிரந்தரமான உண்மைகளைக் கூறுகிறது என்றாலும்கூடக் காலத்துக்கு காலம் அவற்றில் சில குறள்கள் அழுத்தம் கொள்கின்றன. கால மாற்றத்தில் முன்னகர்ந்திருப்பவை பின்னகர்ந்தும் பின்னகர்ந்தவை முன்னகர்ந்தும் வரக்கூடும். காலத்தை வென்று நிற்கும் செவ்விலக்கியங்களின் குணம் இது.
இன்றைய காலத்துக்கு ஏற்ப பகுத்தறிவுப் பார்வையும் சமத்துவம், சம நீதி சார்ந்த பார்வையும் திருக்குறள் மீது ஏறுகின்றன. அந்நிலை இயற்கையானது தான். பொது ஒழுக்கம் சீரழிந்து இவ்வொழுக்கத்தை மீண்டும் வென்றெடுக்க வேண்டும் என்ற உணர்வு தலைதூக்குகிறபோது திருவள்ளுவரின் ஒழுக்கம் சார்ந்த கருத்துகள் மேலோங்கும்.சுதந்திரப் போராட்ட காலத்தில் அரசியல்வாதிகள் "கள்ளுண்ணாமை" என்ற அதிகாரத்தை மேடையில் பல குறள்களைச் சுய நம்பிக்கையுடன் சொல்லியிருக்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகளால் அப்படிக் கூற முடியும் என்றுதோன்றவில்லை. தமிழகமே ஒரு பெரிய கள்ளுக்கடையாக மாறுகிறபோது - அந்த நாட்கள் வெகு தொலைவில் இல்லை - "கள்ளுண்ணாமை" மீண்டும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கலாம்.
இப்படித்தான் பேரிலக்கியங்கள் தங்கள் முகங்களை மாறி மாறி ஒளிரச் செய்து காலத்தைத் தாண்டி வருகின்றன. திருக்குறளைப் பின்பற்றித் தம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக்கொண்டவர்கள் அது பற்றிப் பேசலாம்.
திரு.வி.க.வும் மு.வ.வும் அவர்களைப் போல் எண்ணற்ற தமிழர்களும் திருக்குறள் நெறிகளைக் கடைப்பிடித்துத் தம் வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொண்டவர்கள். அவர்களைப் போன்றவர்கள் அறிவார்கள் திருக்குறளின் வலிமையை. அவர்களைப் போன்றவர்களால்தான் திருக்குறள் மீது ஆழ்ந்த நம்பிக்கையை மக்களிடையே உருவாக்கவும் முடியும்.
திருக்குறளை முழங்கும் பிரச்சாரப் பீரங்கிகளிடம் "நீங்கள் குறள் நெறிக்கு ஏற்ப வாழ்ந்து வருகிறீர்களா?" அல்லது அவ்வாறு வாழவேனும் முயற்சிக்கிறீர்களா? என்று கேட்க மக்களுக்கு உரிமை உண்டு.அவ்வாறு கேட்பவர்கள்தான் திருவள்ளுவரின் நண்பர்கள்.
Posted by Manuneedhi - தமிழன் at 11:54 AM 0 comments (நெற்றிக்கண்)
தனது மரணத்தைத் தானேகூட படம்பிடிக்க நேரும்
தமிழனுக்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தக்கொடுமை??
இந்தத் தாயன்னையின் மடிமீது ரத்த ஆறுகள்தான் ஓடுகின்றது.....
Posted by Manuneedhi - தமிழன் at 1:59 AM 0 comments (நெற்றிக்கண்)
சுவாமி விவேகானந்தரின் 'சிகாகோ' சொற்பொழிவு
Posted by Manuneedhi - தமிழன் at 1:41 AM 0 comments (நெற்றிக்கண்)
April 29, 2007
என் தேசமே!! நீ எப்படியிருக்கிறாய்?
Posted by Manuneedhi - தமிழன் at 11:39 PM 0 comments (நெற்றிக்கண்)
விமான விபத்து - Mid-Air Collision DHL 757 and Tu-154
Posted by Manuneedhi - தமிழன் at 3:29 AM 0 comments (நெற்றிக்கண்)
சுவாமி விவேகானந்தரின் 'சிகாகோ' சொற்பொழிவு
Posted by Manuneedhi - தமிழன் at 3:20 AM 0 comments (நெற்றிக்கண்)
பட்டாபட்டி "ட்ரௌசர்" விவேக் விளக்கம்
Posted by Manuneedhi - தமிழன் at 2:14 AM 0 comments (நெற்றிக்கண்)
மனதை ஒரு நிலைப்படுத்த முடியுமா?
பரவாயில்லை, செய்த பிறகு உங்களுடைய அனுபவத்தை எனக்குச் சொல்லுங்கள்!
- நீங்கள் 'பெஞ்ச்' அல்லது 'நாற்காலி'யின் மீது அமர்ந்திருந்தால் உங்களுடைய வலது காலை சற்று மேலே தூக்கி கடிகாரச் சுற்றில் (Clock-wise) ஒரு வட்டம் போடுங்கள்
- இப்போது காலை நிறுத்தாமல் உங்களின் வலது கையால் காற்றில், அதாவது உங்களின் முகத்திற்கு நேராக எண் ஆறு (6) போடவும்...........
......................................................
- என்ன? தலை சுற்றுமே!!
முயற்சித்துப்பாருங்கள்!! முடியவில்லையா??
சிரித்ததுதான் மிச்சம்… ஆம்…..
உங்கள் காலின் டைரக்ஷன் மாறிவிடும், காலை ஒரு நிலைப்படுத்தினால் கையின் டைரக்ஷன் மாறிவிடும்….
மனதைக் கட்டுப்படுத்த முடிகிறதா? மூளையைக் கட்டுப்படுத்தினாலும் உடலையும் மனதையும் ஒருநிலைப் படுத்த உங்களால் முடிந்தால், கண்டிப்பாக நீங்கள் எதையும் சாதிக்கமுடியும்.
இது அறிவியல் சம்பந்தப்பட்ட உடலியல் கூற்று என்றாலும் ஒரு பெரிய ஆன்மீகத் தத்துவம் அடங்கியிருக்கிறது.
"உங்கள் ஆத்மா உங்களை எங்கு இழுத்துச்செல்கிறதோ அங்கு உங்களால் செல்ல முடியும் என்றால் நீங்கள் பேறு பெற்றவர். ஆத்மா எப்போதுமே நல்ல திசையை நோக்கியே இழுத்துச்செல்லும்"
"உங்களால் அதை நோக்கிச் செல்ல முடியாமல் உடலை நோக்கி ஆத்மாவை இழுக்க முடியும் என்றால் நீங்கள் சாதாரண மனிதர். அதைத்தான் எல்லோருமே செய்கிறோம்"
ஆக அதை ஒரு நிலைப் படுத்தி விட்டோம் எனில் நாம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து விடலாம்.
- கால் செய்வது சாதாரண மனிதன் செய்வது
- கை காற்றில் செய்வது ஆத்மா செய்வது
ஆத்மாவும் உடலும் ஒன்று சேர்ந்தால் மனிதன் உயர்நிலையை அடைவான் - ஒரு மனிதன் ஒரு நேரத்தில் ஒரு பாதையில்தான் செல்லமுடியும். இரண்டு வேறுபட்ட வழிகளில், பாதைகளில் செல்ல முடியும் என்றால், நீங்கள் சாதாரணப் பிறவி இல்லை.
இப்படி இன்றைக்கு இந்தப் ப்ரபஞ்சத்தில் ஒரு சிலரே உள்ளனர். நாமும் முயற்சிப்போம்!! முடியும்!!!
- நவநீ (ஆக்கம்: யாரோ - நன்றி) எங்கோ படித்தது
Posted by Manuneedhi - தமிழன் at 12:18 AM 1 comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
April 28, 2007
Who is God and What?
A speech from Mahatma Gandhi where he reasons the existence of a benevolent god put to a montage of images. speech Mahatma Gandhi god love truth malevolent benevolent good light peace indefinable mysterious unseen power felt defies perceive transcends senses reason who why what know rule god persist pure death life untruth darkness supreme ( more )
Posted by Manuneedhi - தமிழன் at 2:14 AM 0 comments (நெற்றிக்கண்)
கண்டுகொண்டேன்!
கை, கால் என
எல்லாவற்றையுமே
இரண்டாகப் படைத்த
இறைவன்
இதயத்தை மட்டும்
ஏன்
ஒன்றாகப்படைத்தான்?
இன்றுதான் தீர்ந்தது
எனது பல நாள் குழப்பம்
ஆம்…
அந்த இன்னொன்று இருப்பது
உன்னிடத்தில்….
நவின் - சென்னை
Posted by Manuneedhi - தமிழன் at 1:07 AM 0 comments (நெற்றிக்கண்)
April 27, 2007
அழகழகழகழகழகழகே.....
தமிழீழம் பாடல் : அழகே! அழகே!! தமிழழகே!!!
இதுதாங்க நம்ம மொழியோட அழகு
Posted by Manuneedhi - தமிழன் at 4:27 PM 1 comments (நெற்றிக்கண்)
பேரிழப்பு
நேற்று உன் கண்களையே
பார்த்துப் பேசிக்கொண்டிருந்த நான்…..
கையிலிருந்த என்
கவிதைத் தொகுப்பையும்! தவற விட்டேன்
தயவுசெய்து
என் கவிதைத்தொகுப்பை
மாத்திரமாவது திருப்பிக்கொடு….
நவநீ
Posted by Manuneedhi - தமிழன் at 3:24 PM 1 comments (நெற்றிக்கண்)
அசைவச் சாப்பாடு
ரொம்பப் புடிக்கும் - அவள்
அப்பாவுக்கும் எங்களுக்கும்
பறிமாறிவிட்டுச் சட்டியில்
மீதமிருப்பதைச் சின்னவனுக்கு
நாக்கு நீளமென்று - எனக்கு எடுத்துப்
பெரியவனுக்குத் தெரியாமல் பதுக்கிவைப்பாள்
அவள் குடிப்பதென்னவோ
வழக்கம்போல "பழைய கஞ்சி"தான்...
தாய்மை
Posted by Manuneedhi - தமிழன் at 12:16 PM 0 comments (நெற்றிக்கண்)
தமிழனுக்கென்று "ஒரு கொடி" இருக்கக் கூடாதா??
வினா எழுப்புகிறார் - தமிழ்க்கம்பீரம் "வைகோ"
Posted by Manuneedhi - தமிழன் at 12:13 AM 0 comments (நெற்றிக்கண்)
April 26, 2007
இராமகாதை கூறலாம்
மாறும் இந்தப் பூமியில்
மதங்கள் ஒன்று சேரலாம்
என்ன? புரியவில்லையா?
Please click மு. மேத்தா - Mu Mehta - Tamil Language & Literature
Posted by Manuneedhi - தமிழன் at 5:52 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: முடிந்தால் கவிஞர் மு.மேத்தாவின் "கண்ணீர்ப் பூக்கள்" படியுங்கள்
"உன் பிரிவு"
முதன்முதலாய் வந்த
காதலைச் சொல்லத்துடிக்கும்
ஓர் ஊமையின்
உயிர் வலிக்கும் இந்த வலிக்கும்
வித்தியாசம் இருப்பதாக
எனக்குத் தெரியவில்லை...
புரியாமல் தவிக்கிறேன்.
Posted by Manuneedhi - தமிழன் at 4:04 PM 0 comments (நெற்றிக்கண்)
விபத்துக்கள் நேர்வதற்கு முக்கிய காரணங்கள் Please 'Click' 'ME'
Posted by Manuneedhi - தமிழன் at 1:40 AM 0 comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
ஒரு எளிய கவிஞர்
Posted by Manuneedhi - தமிழன் at 1:01 AM 0 comments (நெற்றிக்கண்)
April 24, 2007
"மேஸ்ட்ரோ" - "இசைஞானி"
Posted by Manuneedhi - தமிழன் at 11:42 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
ஓஷோ - இந்த வீடியோவிற்கு விளக்கம் தேவையில்லை
Posted by Manuneedhi - தமிழன் at 8:03 PM 0 comments (நெற்றிக்கண்)
கண்ணில்லை காதலிக்கும்போது மட்டும்
ஒரு வழியாகத்
தண்டவாளங்களைக் கடந்துவிட்ட காதல் இளசுகள்...
வாழ்க்கையை??
Posted by Manuneedhi - தமிழன் at 5:47 PM 0 comments (நெற்றிக்கண்)
சங்கர் - சவூதி
மனசு என்பது என்ன?
மனம்தான் வாழ்வின் நிர்ணய சக்தி. நம் இன்ப துன்பங்களின் கர்ப்பப்பை. வெற்றி தோல்விகளின் விளைநிலம். மனம்தான் வாழ்க்கைப் போராட்டத்துக்கான போர்க்கருவிகளின் பட்டறை, பாசறை, பள்ளியறையும்கூட. வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்தையும் மனம்தான் செதுக்குகிறது. வாழ்வா - சாவா? புகழா - இகழா? வெற்றியா - தோல்வியா? இவையெல்லாம் நம் கையில் இருக்கிறது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. வாழ்வில் எண்ணத்தின் உயரம் நம் உள்ளத்தின் உயரம். உயர்ந்த எண்ணங்கள் உள்ளவர்கள் உயர்வதைக் கடவுளாலும் தடுக்க முடியாது.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
தந்தையின் உடலில் ஓர் உயிர் அணுவாக இருந்த நாம், தாயின் கர்ப்பப்பை நோக்கி பிரயாணம் செய்து, நம்மோடு கூட வந்த லட்சக்கணக்கான உயிர் அணுக்களை ஜெயித்து தாயின் கருவில், சினைமுட்டையில் கலந்தோம். ஓடி ஓடித் தாயின் கருவில் இடம் பிடித்த நாம், ஓடி ஓடிப் பூமித்தாயின் மடியில் இடம்பிடிக்க வேண்டியதும் அவசியம்தானே! இந்த உலக வாழ்க்கையே ஓர் ஓட்டப்பந்தயம்தான்! ஓடுவது நமது இயல்பு. ஜெயிப்பது நமது இயற்கை. ஓடத்தயங்குபவர்களை உலகம் வாரிச்சுருட்டி வெளியில் தள்ளிவிடும். இந்த உலகம் இயங்கவேண்டிய கர்மபூமி. இயங்காமல் இருக்க எவருக்கும் உரிமையில்லை.
வாழ்க்கைப் பயணத்தில் கடுமையாக ஓடி ஓடி உழைத்து மேலே வரவேண்டியதுள்ளது. மேலே வந்துவிட்டோமே என்று உழைப்பை நிறுத்திவிட்டால் கண்டிப்பாக விபத்து நேரிடும். உழைப்பே உணவு, உழைப்பே ஓய்வு, உழைப்பே உயிர். எல்லோரும் ஒரு நாள் சாகத்தான் போகிறோம். சாகிறவரை வாழவேண்டாமா? அதற்காக வாழ்வில் உழைப்பை விடமுடியுமா? இந்த வாழ்க்கை வளையத்துக்குள், சுழற்சிக்குள் புகுந்து விளையாடி எதிர் நீச்சல் போடவேண்டும்.
வாழ்க்கையில் ஜெயிக்க கடவுளின் கருணை இயல்பானது. ஆனால் மனித முயற்சி, கடும் உழைப்புதான் ஜெயத்தை நிர்ணயிக்கிறது. பஞ்சபூதங்களும் நமது பாதுகாவலர்கள்தான். அவற்றைக்கண்டு சோர்வடைய வேண்டாம். மனதைக் கவிழ்த்து வைத்திருப்பவர்களுக்கு, கடவுளின் அருள் ஒருபோதும் கிடைப்பதில்லை. கவிழ்த்து வைத்த பாத்திரத்தில் தண்ணீரைச் சேமிக்க முடியுமா? திறந்த மனத்தோடு பிரபஞ்சத்தோடு தொடர்புகொண்டால் பஞ்சபூதங்களும் நமக்குச் சாதகமானவைகளே!
நமக்கு எதிரான எண்ணங்களைத் தவிர்த்து, எதிர்ப்பனவற்றைக்கூட சாதகமாக்கிக் கொண்டால் வாழ்க்கையில் வெற்றிதான். இப்படி இருந்திருந்தால், அப்படி நடந்திருந்தால் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். இல்லாத ஒன்றைக் காரணம் காட்டி தோல்வியை நியாயப் படுத்தவேண்டாம். எதுவும் நம்மை தோற்கடிக்கக் கூடாது என்ற வைராக்யம் இருந்துவிட்டால் பாதகமான குறைகள், சாதகமான நிறைகள் ஆகிவிடும். நம்முடைய குறைகள் 1. மாற்றக்கூடியது. 2. மாற்ற முடியாதது. மாற்றவே முடியாத குறைகளை ஒருபோதும் குறைகளாகக் கருதாமல் அவற்றை மூலதனமாக்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள். இதனால் வெற்றி உறுதியாகிறது. எல்லோரையும் மாற்றவேண்டும் என்று நாம் துடிக்கிறோம். மாறவில்லையே! என்று மன அமைதி இழக்கிறோம். ஆனால் நாம் அதற்குத் தகுந்தாற்போல் மாறியிருக்கிறோமா? வலிமை வாய்ந்த இரும்பத்தூணை வெளியிலிருந்து எதுவும் வீழ்த்துவதில்லை. அதனுள் உருவாகும் ஷஷதுருதான் தூணை சாய்த்து விடுகிறது.
நம்மிடம் இருக்கும் நல்லதும், கெட்டதும்தான் நம் வாழ்வைத் தீர்மானிக்கின்றன. மனிதன் தன்னைத்தானே பார்க்கிறபோது வேகம் குறைகிறது. விவேகம் பிறக்கிறது. வாழ்வில் உயர உங்களை நீங்களே உற்றுப்பாருங்கள். தன்னையே தான் உற்றுப்பார்க்கும் முயற்சி சுயவிமர்சனத்தால் வெற்றிபெறும்.
நம்மை உயர்த்த, நம்மைக் கவனிக்க நேரமில்லை என்றால், நம்மீது நமக்கு அக்கறை இல்லையா? அவ்வளவு அலட்சியமா? நம்மீது நமக்கு ஈடுபாடு இருந்தால் நம்மை உயர்த்த எப்படியாவது நேரத்தை ஒதுக்குவோம். அமெரிக்க ஜனாதிபதி தொடங்கி அமைதியான பிச்சைக்காரன்வரை 24 மணிநேரம்தான் இருக்கிறது. நிற்கவே இடமில்லாத டவுன்பஸ்ஸில் கண்டக்டர் திரும்பத் திரும்ப போய் வர இடம் கிடைக்கிறதே எப்படி? நம்மை மாற்றியமைப்பது மிக முக்கியமான, அவசியமான அவசர வேலை என்றால் அதற்கான நேரம் கிடைத்துவிடும்.
மனசுக்கு இயல்பான இன்ப நாட்டம் உண்டு. கஷ்டத்தை அது விரும்பாது. இன்பம் விழையும் இயல்பு. எது இன்பம் எனத் தோன்றுகிறதோ அதையே திரும்பத் திரும்பச் செய்யத் தோன்றும். புதிய புதிய வரவுகளை அது தேடுவதேயில்லை. குழந்தைப்பருவம் தொடங்கி சாகிறவரை இந்த இன்பம் விழையும் இயல்பை யாரும் விடமாட்டோம். வளர வளர நாம் செயல்களை மாற்றியிருப்போம். செயல்களை மாற்றியிருப்பதால் வளர்ந்து விட்டோம் எனத் தவறாக நினைக்கிறோம். ஆனால் உண்மையில் நாம் வளர்வதே இல்லை.
இன்பம் விழையும் மன இயல்பு துன்பத்தில்தான் முடிகிறது. இடையிடையே விளம்பரங்கள் இல்லாமல் எப்படி டி.வி. சீரியல் பார்க்கமுடியாதோ அது போலத்தான் க~;டங்கள் இல்லாத வாழ்க்கை என்பது நடைமுறைக்கு வராது. சோதனையும், வேதனையும் இல்லாமல் சாதனை பிறக்கவே முடியாது. பிரச்சினையே இல்லாத வாழ்வு அர்ச்சனையே இல்லாத கோவில் மாதிரி. நாம் பிறப்பதற்கு முன்பும் பிரச்சினைகள் இருந்தன. நம் மரணத்திற்குப் பின்பும் அவை இருக்கப் போகின்றன. நாம்தான் இடையில் வந்து இடையில் போகிறோம். நமக்குப் பிரச்சினைகள் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் பிரச்சினைகளுக்கு நாம் அவசியம் தேவை. எனவே அவற்றை அனுசரித்து வாழப் பழகிக்கொள்ளவேண்டும். நமது பிரச்சினைகளின் அகல ஆழம் தெரிந்தவர்கள் நாம்தான். நாம் மட்டுமே உறுதியான முடிவை எடுக்கமுடியும். அதனைத் தீர்க்கமுடியும். கனமான பறவைகளை அதன் லேசான இறக்கைகள்தான் மேலே தூக்குகின்றன.
நமது பிரச்சினைகளுக்கு பிறருடைய கருத்துக்களைக் கேட்கலாம். பரிசீலனை செய்யலாம். அவைபற்றி ஆலோசனைகூட செய்யலாம். ஆனால் அவைதான் தீர்ப்பு என்று முடிவெடுக்கக்கூடாது. பேண்ட் முதல் பெண்டாட்டிவரை நண்பர்களின் அபிப்ராயப்படி தேர்ந்தெடுக்கும் ஆண்கள் தோற்றுப்போவது நிச்சயம். புடவை முதல் புரு~ன் வரை தோழிகளிடம் யோசனை கேட்கும் பெண்கள் நிம்மதியாக வாழமுடியாது. எல்லோரையும் ஓர் எல்லையில் நிறுத்தவும். எதற்கும் பிறரையே சார்ந்திருக்க ஊனமுற்றவர்கள்கூட விரும்புவதில்லை. ஆரோக்யமாக இருக்கிற நாம் ஏன் பிறரைச் சார்ந்திருக்கவேண்டும்? இந்த மன ஊனம் சகிக்க முடியாதது. பிறரைச் சார்ந்து வாழ்வது என்கிற ஊன்றுகோலை உதறி எறிய வேண்டும். இல்லையென்றால் மந்திர தந்திர மதவாதிகள், குட்டிச்சாமியார்கள், ராசிபலன் பார்ப்பவர்கள் நம்மை வசப்படுத்தி நிரந்தர ஊனமாக்கி விடுவார்களென்பது நிச்சயம்.
வாழ்க்கை விசித்திரமானது. நாம் தயாரித்து வைத்துள்ள பதில்களுக்கேற்ப வாழ்வில் கேள்விகள் பிறப்பதில்லை. எல்லா கேள்விகளுக்கும் யாராவது பதில் சொல்லமாட்டார்களா? என்று தடுமாற வேண்டாம். பிறரது அபிப்ராயங்களால் பாதிக்கப்படக்கூடாது. நாம்தான் விடைகாணவேண்டும். அதுதான் உண்மையான தன்னம்பிக்கை.
“தன்னைத் தன்னாலே உயர்த்திக்கொள்க!
நாம் பரபரப்புடனும், அவசரத்துடனும், கவலையுடனும் எதைத் தேடினாலும் கிடைக்கப்போவதில்லை. கிடைத்தாலும் கிடைத்தது தெரியாது. தெரிந்தாலும் ருசிக்காது. எண்ணங்களே வாழ்வை உருவாக்குகின்றன. எண்ணங்களை நம் மனம்தான் உருவாக்குகிறது. எனவே மனம் நம் வசம் இருக்கவேண்டும்.
"வாழ்க்கை ஒரு உற்சவம்,
ஆக்கம் - சங்கர் (க.சங்கரநாராயணன் : சவூதி அரேபியா)
Posted by Manuneedhi - தமிழன் at 11:17 AM 3 comments (நெற்றிக்கண்)
"மேஸ்ட்ரோ"
Posted by Manuneedhi - தமிழன் at 12:11 AM 0 comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
April 22, 2007
"கிராமம்"
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு முருகையா கையில் எட்டு மாத கைக்குழந்தையோடு தன் மனைவி இருளாயியை அழைத்துக்கொண்டு, கொட்டும் மழையில், இடி மின்னலோடு கூடிய அந்த கும்மிருட்டில் தன் வீட்டுக்கதவைத் தட்டியது தன் கண் முன்னே வந்தது, இவையெல்லாம் ஏதோ நேற்று நடந்தது போல இருந்தது பாலுவுக்கு. “கதவத்தெறந்து, யாருன்னு பாருய்யா, ரசம் அடுப்புல கெடக்கு, கொதிச்சுப்போய்ட்டா ரசம் வாய்க்கி வெளங்காது” என்ற அம்மாவின் குரலையடுத்து, பாலு கதவைக் கஷ்டப்பட்டு திறந்தான். அப்போது பாலுவுக்கு ஒரு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். இருட்டில் யாரோ நிற்பது தெரிந்தது, பாலுவைப் பார்த்தவுடன், “மச்சான் இல்லையா? மருமயனே!” முருகையா. “இல்ல மாமா” பாலு. “யாருடாது இந்த அடமழையில?” அம்மா குரல் அடுப்படியிலிருந்து ஒலித்தது. “நாந்தாக்கா முருகையா, அக்கோவ்! செத்த இங்குட்டு வந்துட்டு போக்கோவ்! அம்மா வெளியே வந்தாள், முருகையா, ஒரு கிழிந்த சாக்கை மடித்து தன் எட்டுமாதப்பெண் குழந்தை நனையாமல் இருக்க மேலே கொங்கானியாகப் போட்டுக்கொண்டு மனைவியோடு நனைந்து நடுங்கிக்கொண்டு நின்றதைப் பார்த்த அம்மா, “அடப்படுபாவி, என்னடா புத்தியா கெட்டுப்போச்சு ஒனக்கு, பச்சப்புள்ளய நனையவிட்டுக்குட்டு அங்கன நிக்கிற, உள்ள வாடா மொதல்ல, இந்தா தலைய தொவட்டுறா” என்று தன் முந்தானையை எடுத்துக்கொடுத்த தன் கூடப்பிறக்காத அக்காவைப் பார்த்த உடன் முருகையா கதறி அழுதே விட்டான். “அக்கா ஙப்பன் என்னயும், எம்பொண்டாட்டி, புள்ளையும் வீட்ட விட்டு வெளில போடான்னு அடிச்சு வெரட்டிட்டாருக்கா, இருளாயிக்கும் அவருக்கும் என்னமோ பெரச்சனைக்கா, நான் எங்கக்கா போவேன், எனக்கு யாருக்கா இருக்கா?” மச்சான் வந்த ஒடனே ஒரு முடிவு பண்ணனும்க்கா, அதுக்குத்தாங்க்கா இங்க வந்தேன்” என்று புலம்பிக்கொண்டிருந்தான். “சரி சரி நீ உள்ள வா, மச்சான் வெள்ளெனதேண்டா வருவாரு, நீ ஒன்னும் கவலப்படாமெ இரு! இந்தாடி இருளாயி அங்கன கொடில யாம்புட்டு பழய சீலை கெடக்குடி எடுத்துக் கட்டிகிட்டு இந்த ஈரத்துணிய மாத்துடி சட்டுனு, பச்சப்புள்ளக்காரி ஒடம்புக்கு எதுகும் வந்துறப்போகுது”. பொழுது விடிந்தது, அடைமழை விட்டு வானம் வெளுத்திருந்தது, “ஏலே! பாண்டி நம்ம பனமரத்துல கொஞ்சம் ஓலை வெட்டியாடோவ்! டேய்! முருகையா! இங்கன கெழக்குப் பக்கத்துல எரவாரத்துல ஓலைய மோஞ்சு குடிசயப் போட்டுக்கடா!” சீதாராமன் சொல்லி முடித்தார்.
அக்காவின் அதிகாலை டீயை உறிஞ்சிக்கொண்டே “மச்சான் எனக்கும் குடும்பம் கொஞ்சம் பெரிசாயிருச்சு, இந்தக்குடிசையில கொஞ்சம் செரமமா இருக்கு, நம்ம கம்மாக்கரையில் இருக்கற வரகாம்புஞ்சயில ஒரு குடிசையப் போட்டுக்கிறனே, கூடவே புஞ்சயப் பாத்துக்கிறேன் மச்சான்” என்றான் முருகையா. பதிலுக்கு சீதாராமன் சிரித்துக்கொண்டே, “கேட்டியா சங்கதிய, ஒந்தம்பி வரகாம்புஞ்சயப் பாத்துக்கறேன்னு சொல்றாம் பாத்தியா?” என்று கொட்டத்தில் பசுவுக்குத் தவிடு வைத்துக்கொண்டிருந்த தன் மனைவியிடம் சொன்னார். “சரி அவெஞ்சொல்றது நாயந்தானே! கையில எட்டுமாசக் கொழந்தையோட வந்தான், இப்ப கூட ரெண்டு பயலுகளாயிப்போயிட்டாங்கெ, நம்ம புஞ்சையும் பூதிலதானே கெடக்கு, அவந்தான் பாத்துக்கிறேன்னு சொல்றானே, பாத்துக்கிறட்டும்” என்றாள் பதிலுக்கு.
“முருகையா மாமா முன்னாடி மாதிரி ஏம்மா நம்ம வீட்டுக்கு வர்றதில்ல?” பாலு, எப்போது விடுமுறைக்குத் தன் சொந்த ஊருக்குச் சென்றாலும் கேட்பதுண்டு. “அவனுக்குப் பேரன் பேத்தி ஆயிப்போச்சுய்யா, மூத்தவ பாண்டியம்மாளுக்கு இது மூணாவது பெரசவமாம், இருளாயி அங்கெ பொய்ட்டா, இவன் மயம்புட்டு புள்ளயல வச்சுகிட்டு அல்லாடறான் பாவம், இதுல எங்கெ இங்கெ வர்றது?” என்றாள் அம்மா பதிலுக்கு.
பாலுவுக்கு விடிந்ததே தெரியவில்லை, அப்படியே சோபாவில் சாய்ந்தவன் கண்ணயர்ந்துவிட்டான். மனசு கேட்கவில்லை, மறுபடியும் போனை எடுத்தான், இப்போது இந்தியாவில் பொழுது சாயும் நேரம்தான், அம்மா தூங்கியிருக்கமாட்டாள். எதிர்முனையில் அம்மா அரசல்புரசலாக, பதட்டத்துடன் போனை எடுத்து “யாரு பேசறது”, “நாந்தாம்மா! பாலு” சொல்லி முடிப்பதற்குள், “அய்யோ! அந்த வகுத்தெரிச்சலெ ஏய்யா கேக்குறே! அந்தப் பாதகத்தி மருந்தக்குடிச்சது தாங்காமெ, ஊர ஒன்னுகூடி அங்கனெ நிக்கையில, இந்தப்பய முருகையா, எல்லாரு கண்ணுலயிம் மண்ணெத்தூவிப்புட்டு சுடுகாட்டு ஊரணி வேம்புல கயத்துல தொங்கிட்டான்யா.. நான் என்ன செய்யிவேன், இந்தா... ஊரே அலறியடிச்சு ஓடுதே!” என்று அலறி அம்மா போனை வைத்தாள். பாலு உறைந்துபோய் நின்றான்.
Posted by Manuneedhi - தமிழன் at 10:28 AM 3 comments (நெற்றிக்கண்)
Labels: சிறுகதை - நவநீ
April 21, 2007
"ஆதங்கம்"
என்னதான்
உனக்கு நான்
மிகநெருக்கமானவனாக
இருந்தாலும் - என்னை
உன் வீட்டு வாசல்வரைதானே
அனுமதிக்கிறாய்...
செருப்பு
பாலா - சென்னை
Posted by Manuneedhi - தமிழன் at 12:19 PM 0 comments (நெற்றிக்கண்)
"தேசியகீதம்"
என்னைப் புல்லரிக்கவைத்த ஒரு வீடியோ இங்கே!!
Posted by Manuneedhi - தமிழன் at 11:47 AM 0 comments (நெற்றிக்கண்)
April 20, 2007
நம்ம ஊருங்க..
வெளிநாடுகளில் வாழக்கூடிய எத்தனையோ நண்பர்கள், குடும்பங்கள் இன்னும் நம் சிங்காரச் சென்னையை, தமிழகத்தை மறந்திருக்கமாட்டார்கள்....
மறந்து போன மறத்தமிழர்களுக்கு...
இந்த வீடியோ தமிழகத்தை நினைவூட்டும் என நினைக்கிறேன்
Posted by Manuneedhi - தமிழன் at 7:32 PM 0 comments (நெற்றிக்கண்)
Night Life in Chennai: IT நண்பர்களின் வாதம் சரியா??
இரவு நேரங்களில் நடக்கக்கூடிய அவலங்களை நியாயப்படுத்தி வாதாடலாம், ஆனாலும் இதெல்லாம் கலாச்சாரச் சீரழிவுக்கு அடிகோலும் தொடக்கமென்றுதான் நான் கருதுகிறேன்...
உங்களின் கருத்துக்களை நீங்களும் இங்கு தெரிவிக்கலாம்...If you are not able to view here, Please double click "YouTube" and put the heading in search box and view..(Sorry for this issue)
Posted by Manuneedhi - தமிழன் at 7:20 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி "விஜய் டிவி"
"மேஸ்ட்ரோ"
இசைஞானி இளையராஜாவின் இசையில்....
கொஞ்சம் நனைவோமா?
Posted by Manuneedhi - தமிழன் at 12:16 AM 0 comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
April 19, 2007
"நீ"
உன்னை
நினைக்கவே கூடாதென்றுதான்
நினைக்கிறேன் - ஆனாலும்
என் பொழுதுகளில் சில நிமிடங்களிலாவது
வந்து செல்லும்........நீ
லைகா - சென்னை
Posted by Manuneedhi - தமிழன் at 9:05 PM 0 comments (நெற்றிக்கண்)
April 18, 2007
பி.சுசீலா
எப்பொழுது கேட்டாலும் மனதுக்கு இதம் தரக்கூடிய சில பாடல்கள் உண்டு என்றால் அவற்றில் இவைகளும் அடங்கும்.. நீங்களும் கேட்டுப்பாருங்கள்!
Posted by Manuneedhi - தமிழன் at 10:56 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
"தேடல்"
எங்கு தேடியும்
கிடைக்காமல்போன
அந்த வார்த்தைகளை
அலங்கரிப்பதற்காகவேணும் - நாம்
இன்னொருமுறை சந்தித்தே ஆகவேண்டும்.......
லைகா - சென்னை
Posted by Manuneedhi - தமிழன் at 11:56 AM 0 comments (நெற்றிக்கண்)
April 13, 2007
நல்லதோர் வீணை செய்தே!!
எத்தனையோ பல்வேறு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு பல திட்டங்களையும், சலுகைகளையும் செய்து வரும் அரசு மற்றும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், நம் மண்ணில் கேட்பாரற்றுக் கிடந்த அனாதைகளையும், பிச்சைக்காரர்களையும் இன்று அடையாளம் கண்டு அவர்களைச் சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் திருப்தியளிக்கிறது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி. இது போன்ற பணிகள் தொடர எங்களது வாழ்த்துக்கள்! For details please click down..
Welcome To Dinamalar.com - Leading National Tamil Daily
Posted by Manuneedhi - தமிழன் at 12:30 AM 0 comments (நெற்றிக்கண்)
April 10, 2007
தமிழனுக்குப் பிரச்சினையே வாழ்க்கையானால்???
பெரியார் சிலை நிறுவுவது பற்றி திரு.சோ, திரு.கி.வீரமணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி திரு.எல்.கணேசன் அவர்களின் பேட்டியைப்பார்த்துவிட்டு உங்களின் கருத்துக்கணிப்புகளையும் இங்கே பதிவு செய்யவும். Please click down to view
Video | Exclusive Videos | Indiainteracts.com
Video | Exclusive Videos | Indiainteracts.com
Video | Exclusive Videos | Indiainteracts.com
Video | Exclusive Videos | Indiainteracts.com
Video | Exclusive Videos | Indiainteracts.com
Video | Exclusive Videos | Indiainteracts.com
Video | Mr.L.Ganesan (BJP) remarks Part-1 | Indiainteracts.com
Video | Mr.L.Ganesan (BJP) remarks Part-2 | Indiainteracts.com
Video | Mr.L.Ganesan (BJP) remarks Part-3 | Indiainteracts.com
ஒரு மனிதனுக்கு பிரச்சனை என்பது பெரிய விஷயமல்ல. பிரச்சினைகளுக்கிடையே வாழ்வது என்பது போய், பிரச்சினையே வாழ்க்கையாகிப் போனதுதான் ஒவ்வொரு தமிழனின் நிலைமையும்....கவனம் செலுத்த நாட்டில் எவ்வளவோ விஷயங்களிருந்தும்...இதெல்லாம் அவசியம்தானா? ஒவ்வொரு தமிழனும் சிந்திக்கவேண்டும்!!
Posted by Manuneedhi - தமிழன் at 8:16 PM 1 comments (நெற்றிக்கண்)
April 09, 2007
Kamal Interview Part-I
டாக்டர் கமலஹாசன்: மலேசியா தொலைக்காட்சி பேட்டி
Posted by Manuneedhi - தமிழன் at 11:02 PM 0 comments (நெற்றிக்கண்)
Kamal Interview Last Part
ஒரு மாபெரும் கலைஞனைப் பேட்டியெடுத்த நபர்கள் சரியில்லை, இது என்னுடைய Personal Opinion! நீங்க என்ன நெனைக்கிறீங்க? Please Leave your comments...
Posted by Manuneedhi - தமிழன் at 10:58 PM 0 comments (நெற்றிக்கண்)
April 08, 2007
அப்போதெல்லாம்
என்னை உன்னுடன்
அழைத்துப்போகாமல் செல்லும்
உன் பயணத்திற்காக
நான் அழுது புரண்டிருக்கிறேன்
என் தேம்பல் தீர்வதற்குள் நீ
திரும்பி வந்துவிடுவாய்....
ஆனால்
இப்போதும் அலறித்துடிக்கிறேன்....நீ
வரவேயில்லை....
எப்போது அப்பா வருவீர்கள்?
????????????????????????????
நாங்கள் பார்க்காத
நீண்டநாள் பயணம் இதுதானாம்...
அம்மா சொல்கிறாள்....
"தந்தையின் மரணம்"
- வேதனையுடன் உங்கள் வாரிசுகள்।
பாலா - சென்னை
Posted by Manuneedhi - தமிழன் at 1:13 PM 1 comments (நெற்றிக்கண்)
"சோதனை"
இங்கு
அச்சகம் வைத்திருப்பவனின்
"பால் கணக்கு"க் கோடுகளெல்லாம்
படைப்பபுகளாகிவிடுகின்றன....
பாவம்...
தவிக்கிறாள் தமிழ்த்தாய்!
பாலா - சென்னை
Posted by Manuneedhi - தமிழன் at 1:15 AM 0 comments (நெற்றிக்கண்)
April 06, 2007
"Scent of a Woman"
திரு.Al Pacino "Scent of a Woman" என்ற படத்தில் ஒரு பார்வையற்றவராக நடித்து, தனது எதார்த்தமான, பிரமிக்கத்தக்க நடிப்பால் ஆஸ்கர் விருது பெற்ற நடிகர். அது மட்டுமின்றி அவருடைய பல படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவை. எத்தனையோ பல விருதுகளுக்குச் சொந்தமானவர். அவர் நடித்த அந்த "Scent of a Woman" படத்திலிருந்து ஒரு காட்சி, பள்ளியில் படித்துக்கொண்டு வார விடுமுறை நாட்களில் வேலைக்குச் சென்று சம்பாதித்து தன் செலவுகளில் தானும் பங்களித்துக்கொள்வது அமெரிக்க இளையதலைமுறையிடையே இன்றும் பழக்கத்திலுள்ள ஒன்று. தான் பார்வையற்ற, ஓய்வுபெற்ற ஒரு முன்னால் காவல்துறை உயர் அதிகாரி, அதைப்போல விடுமுறை நாட்களில் தனக்கு உதவியாக இருக்கும் ஒரு ஏழை மாணவன் மீது சுமத்தப்பட்ட ஒரு பிரச்சினைக்காக பெற்றோர் இடத்திலிருந்து பேசப்படும் காட்சி..இது
மற்றும் அவர் 'Motivational Speech' கொடுக்கும் இன்னொரு Video Clip'பையும் உங்களுக்குத் தருகிறேன். குறிப்பாக நமது இந்தியக் கிரிக்கெட் அணிக்கு இப்படியொரு பயிற்சியாளரையோ அல்லது அவ்வப்போது இப்படி ஊக்கப்படுத்த ஒருவரையோ நியமிக்கவேண்டும் என்பது என் போன்றவர்களின் கருத்து...Now Let us watch these...
Posted by Manuneedhi - தமிழன் at 4:43 PM 0 comments (நெற்றிக்கண்)
April 05, 2007
ஜெயகாந்தன்
‘எனக்கு தமிழ் தான் தெரியும் வேறு மொழி தெரியாது. தொட்டிலில் குழந்தையாக தவழ்ந்தபோதே எனக்குத் தமிழ் தெரிந்தது. எனது தாய் தமிழில் தாலாட்டியதால் தமிழ் அறிந்தேன். இந்தியாவைச் சேர்ந்த தமிழன் என்று கூறிக் கொள்ளவே ஆசைப்படுகிறேன் நான்."
"புது செருப்புக் கடிக்கும்" 1971 - களில் எழுதப்பட்ட இக்கதை ஏழுமுறை பதிப்பு செய்யப்பட்டிருக்கிறது..நீங்களும் படியுங்கள்..Please click Heading (ஜெயகாந்தன்) to visit..
www.tamilnation.org/literature/modernwriters/jeyakantan/19.htm">
Posted by Manuneedhi - தமிழன் at 9:59 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : tamilnation.org
"தலைகுனிவு"
கிரிக்கெட் : நாட்டைக் காட்டிக்கொடுக்கும் நயவஞ்சக நரிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? அளவுக்கு மீறி வருமானம் வரும்போது கவனம் நாட்டைப்பற்றியா இருக்கும்? இந்தத் தலைகுனிவுக்குப் பிறகாவது இந்தியக் கிரிக்கெட் வாரியம் ஒழுங்கான முடிவை எடுக்குமா? அனைத்துக் கேள்விகளுடன், உலகக்கோப்பையை எதிர்பார்த்ததைவிட அதிக ஆர்வத்துடன் நாடே முடிவை எதிர் நோக்கியிருக்கிறது மேலும் விபரங்களுக்கு...Please visit here..
Dinamalar -
Posted by Manuneedhi - தமிழன் at 8:28 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தினமலர்
Charlie Chaplin Optic Illusion
மனிதருள் ஒரு மகத்தான, மாபெரும் கலைஞன்...
Posted by Manuneedhi - தமிழன் at 4:48 PM 0 comments (நெற்றிக்கண்)
ஒரு பெண் ஆணிடம் எதிர்பார்ப்பது…
வயது 16
1. அழகு
2. குறைந்தபட்சம் ஒரு கார்
3. அவளை விரும்ப வேண்டும்
வயது 21
1. அழகு
2. Charming and polite.
3. Financially successful.
4. Caring and sympathetic.
5. Witty.
6. Athletic.
7. Stylish dresser.
8. Appreciates finer things in life.
9. Full of thoughtful surprises.
10. An imaginative, Romantic lover.
வயது 32
1. Decent looking, preferably with hair.
2. Opens car doors, holds chairs.
3. Has enough money for a nice dinner.
4. Laughs at my jokes.
5. Carries bags of groceries with ease.
6. Owns at least one suit.
7. Appreciates a good home-cooked meal.
8. Remembers birthdays and anniversaries.
9. Wants romance at least once a week.
10. Bathes.
வயது 40
1. Not too ugly, balding is OK.
2. Steady job.
3. Takes me out to dinner occasionally.
4. Nods head when I'm talking.
5. Usually remembers punch lines of jokes.
6. Is in good enough shape to rearrange the furniture.
7. Wears a shirt that covers his stomach.
8. Knows not to buy champagne with screw-top lids.
9. Remembers to put the toilet seat down.
10. Shaves most weekends.
வயது 55
1. Keeps nose and ear hair trimmed.
2. Doesn't belch or scratch in public.
3. Has at least a little money saved.
4. Doesn't nod off to sleep when I'm venting.
5. Doesn't re-tell the same joke too many times.
6. Is in good enough shape to get off couch on weekends.
7. Usually wears matching socks and fairly clean underwear.
8. Appreciates a good TV dinner.
9. Usually remembers names.
10. Shaves occasionally.
வயது 65
1. Doesn't scare small children.
2. Remembers where bathroom is.
3. Doesn't require much money for upkeep.
4. Does not snore too loudly.
5. Remembers why he's laughing.
6. Is in good enough shape to stand up by himself.
7. Usually wears some clothes.
8. Remembers where he left his teeth.
10. Remembers who I am.
வயது 75
1. Breathing.
2. Doesn't miss the toilet.
Posted by Manuneedhi - தமிழன் at 4:28 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
நான் ரசித்தவை....
Posted by Manuneedhi - தமிழன் at 4:09 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: ஒங்களுக்கும் புடிக்கும்னு நெனைக்கிறேன்.... from Collections of Nawin
50 Romantic things
1. Watch the sunset together.
2. Whisper to each other.
3. Cook for each other.
4. Walk in the rain.
5. Hold hands
6. Buy gifts for each other.
7. Roses.
8. Find out their favorite cologne/perfume and wear it every time you're together.
9. Go for a long walk down the beach at midnight.
10. Write poetry for each other.
11. Hugs are the universal medicine.
12. Say only when you mean it and make sure they know you mean it.
13. Give random gifts of flowers/candy/poetry etc.
14. Tell her that she's the only girl you ever want. Don't lie!
15. Spend every second possible together.
16. Look into each other's eyes.
17. Very lightly push up her chin, look into her eyes, tell her you love her, and kiss her
lightly.
18. When in public, only flirt with each other.
19. Put love notes in their pockets when they aren't looking.
20. Buy her a ring.
21. Sing to each other.
22. Always hold her around her hips/sides.
23. Take her to dinner and do the dinner for two deal.
24. Spaghetti? (Ever see Lady and the Tramp?)
25. Hold her hand, stare into her eyes, kiss her hand and then put it over your heart.
26. Dance together.
27. I love the way a girl looks right after she's fallen asleep with her head in my lap.
28. Do cute things like write I love you in a note so that they have to look in a mirror to read
it.
29. Make excuses to call them every 5 minutes
30. Even if you are really busy doing something, go out of your way to call and say I love you.
31. Call from your vacation spot to tell them you were thinking about them.
32. Remember your dreams and tell her about them.
34. Tell each other your most sacred secrets/fears.
35. Be Prince Charming to her parents.
36. Brush her hair out of her face for her.
37. Hang out with his/her friends.
38. Go to Temple/church/pray/worship together.
39. Take her to see a romantic movie and remember the parts she liked.
40. Learn from each other and don't make the same mistake twice.
41. Describe the joy you feel just to be with him/her.
42. Make sacrifices for each other.
43. Really love each other, or don't stay together.
44. Let there never be a second during any given day that you aren't thinking about them,
and make sure they know it.
45. Love yourself before you love anyone else.
46. Learn to say sweet things in foreign languages.
47. Dedicate songs to them on the radio.
48. Fall asleep on the phone with each other.
49. Stand up for them when someone talks trash.
50. Never forget the kiss goodnight and always remember to say, "Sweet dreams."
Posted by Manuneedhi - தமிழன் at 11:23 AM 0 comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
"பதிலடி"
செஸ்டன் என்ற எழுத்தாளர் ஒருமுறை பெர்னாட்ஷாவை சந்திக்க வந்தார். ஷா ஒல்லியாக இருந்தார், செஸ்டன் உடல் பருத்தவர், ஷா'வைப்பார்த்து "தங்களைப் பார்த்தால் இந்த நாட்டில் பஞ்சம் வந்துவிட்டது போல் தெரிகிறது" என்றார் கிண்டலாக. பெர்னாட்ஷா அமைதியாக, "தங்களைப் பார்த்தால் இந்தப் பஞ்சத்துக்கு காரணமே நீங்கள்தான்" எனத்தோன்றுகிறது என்றார்.
அறிஞர் அண்ணா ஒருமுறை மேடையில் "நம் நாட்டை அந்நிய சக்திகளிடமிருந்து காக்க இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் மிலிடரிக்குச் செல்லவேண்டும்" என்று உரக்கப் பேசிக்கொண்டிருந்தார். உடனே கூட்டத்திலிருந்த ஒருவன் "மொதல்ல நீங்க போங்க, அப்பறம் நாங்க போறோம்" என்றான். அண்ணா மிக நிதானமாக, "நாலரையடி மனிதனை மிலிடரியில் எடுத்துக்கொள்வார்களென்றால் நான்தான் அங்கு முதல் ஆளாக இருப்பேன்" என்று சொன்னாராம். என்ன நிதானம், பொறுமை, பக்குவம்!
Posted by Manuneedhi - தமிழன் at 11:18 AM 0 comments (நெற்றிக்கண்)
April 04, 2007
Charile Chaplin-Modern Times 02
ஒவ்வொரு மனிதனும் பிரமித்துப்போகும் மாபெரும் கலைஞன்...
Posted by Manuneedhi - தமிழன் at 7:48 PM 0 comments (நெற்றிக்கண்)
Charlie Chaplin - The Cure
ஒவ்வொரு மனிதனும் பிரமித்துப்போகும் மாபெரும் கலைஞன்...
Posted by Manuneedhi - தமிழன் at 7:32 PM 1 comments (நெற்றிக்கண்)
Charlie Chaplin
ஒவ்வொரு மனிதனும் பிரமித்துப்போகும் மாபெரும் கலைஞன்...
Posted by Manuneedhi - தமிழன் at 7:27 PM 0 comments (நெற்றிக்கண்)
Charlie Chaplin - The Kid (1 of 7)
Posted by Manuneedhi - தமிழன் at 5:05 PM 0 comments (நெற்றிக்கண்)
Charlie Chaplin - The Kid (2 of 7)
Posted by Manuneedhi - தமிழன் at 4:57 PM 0 comments (நெற்றிக்கண்)
Charlie Chaplin - The Kid (3 of 7)
Posted by Manuneedhi - தமிழன் at 4:56 PM 0 comments (நெற்றிக்கண்)
Charlie Chaplin - The Kid (4 of 7)
Posted by Manuneedhi - தமிழன் at 4:56 PM 0 comments (நெற்றிக்கண்)
Charlie Chaplin - The Kid (5 of 7)
Posted by Manuneedhi - தமிழன் at 4:52 PM 0 comments (நெற்றிக்கண்)
Charlie Chaplin in KID AUTO RACES AT VENICE, CAL.
Posted by Manuneedhi - தமிழன் at 4:46 PM 0 comments (நெற்றிக்கண்)
April 03, 2007
“Loose One”
To realize the value of a sister: Ask someone Who doesn't have one.
To realize the value of ten years: Ask a newly divorced couple.
To realize the value of four years: Ask a graduate.
To realize the value of one year: Ask a student who Has failed a final exam.
To realize the value of nine months: Ask a mother who gave birth to a still born.
To realize the value of one month: Ask a mother who has given birth to A premature baby.
To realize the value of one week: Ask an editor of a weekly newspaper.
To realize the value of one hour: Ask the lovers who are waiting to Meet.
To realize the value of one minute: Ask a person Who has missed the train, bus or plane.
To realize the value of one-second: Ask a person Who has survived an accident.
To realize the value of one millisecond: Ask the person who has won a silver medal in the Olympics
You will treasure it even more when you can share it with someone special.
“To realize the value of a friend: Lose one”
Posted by Manuneedhi - தமிழன் at 7:17 PM 0 comments (நெற்றிக்கண்)
April 02, 2007
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
Dr.S.Jayabarathi
Posted by Manuneedhi - தமிழன் at 5:15 PM 0 comments (நெற்றிக்கண்)
"கவிதைப்பக்கம்"
தன்னம்பிக்கையாளனுக்கு மின்மினிப் பூச்சிகூட
இன்னொரு சூரியன்தான்
புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால் ஒவ்வொரு
மனிதனின் இதயமும் கல்லறைதான்
வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால்
மீன்களின் எண்ணிக்கை குறைந்து போவதில்லை
பாறைகள் தடுக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதமில்லை
பாலா - சென்னை
Posted by Manuneedhi - தமிழன் at 11:41 AM
"உயிர் உண்டியல்"
அமைதிக்காக
ஆலயத்தினுள் அறிவு ஜீவிகள்
வயிற்றுக்காக வாசலில்
வறுமைக்கோடுகள்
பிச்சைக்காரர்கள்....
நவநீ - சென்னை
Posted by Manuneedhi - தமிழன் at 10:07 AM
"கவிதைப்பக்கம்"
நம்பிக்கையோடு
வெறுந்தரையில்
நீரூற்றினால்கூட
முளைவிடக் காத்திருக்கிறது
சில விதைகள்....
- பாலா, சென்னை
Posted by Manuneedhi - தமிழன் at 9:48 AM 1 comments (நெற்றிக்கண்)
April 01, 2007
alisha chinai made in india
இந்திய இதயம் மட்டுந்தான் வேணுமாம்.....கேட்டுப்பாருங்க.
Posted by Manuneedhi - தமிழன் at 11:41 PM 0 comments (நெற்றிக்கண்)
titanic remix tamil 1
சும்மா ஒரு காமெடி...எஞ்சாய் பண்ணுங்க...
Posted by Manuneedhi - தமிழன் at 11:26 PM 0 comments (நெற்றிக்கண்)
Tamil / Singhalese / Hindi Video Remix
இதக்கேட்டுப்பாருங்க...ஏதோ இனம் தெரியாத ஒரு சுகம் தெரியும்...
Posted by Manuneedhi - தமிழன் at 11:17 PM 0 comments (நெற்றிக்கண்)