December 07, 2007

கடமை

(திண்ணையில் பிரசுரமான எனது சிறுகதை....) குருவிக்கூடு போல ஒரு சிறிய அழகான வீடு. அருகே உருளைக்கிழங்கு விளையக்கூடிய செழிப்பான ஒரு ஏக்கர் நிலம். பக்கத்தில் ரம்மியமான ஒரு நீரோடை. அங்கு கணவன், மனைவி, மகன் என மூவரும் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து கொண்டிருந்தபொழுது, திடீரென அந்தத் தாய் தூக்கத்திலேயே இறந்து விடுகிறாள். தன் மகனோடு வாழ்ந்து கொண்டிருந்த அந்தப் பெரியவர் தாயைச் சின்ன வயிதிலேயே தன் மகன் இழந்துவிட்டதால் அவனை மிகச் செல்லமாக வளர்த்ததன் விளைவு, அவன் செய்த சில தவறுகளுக்குத் தண்டனையாகச் சிறையில் அடைக்கப்பட்டான். தன் தந்தையோடு இருக்கும்போது அவன் தந்தைக்கு மிகவும் உதவியாகவும், பாசமாகவும் இருந்தான். தன் வீட்டுக்கருகாமையில் இருந்த ஒரு உருளைக்கிழங்குத் தோட்டத்தைத் தவிர அவர்களுக்கு வேறு எந்தச் சொத்தோ வருமானமோ இல்லை. ஒவ்வொரு பருவத்திலும் செழிப்பாக இருக்கும் அந்தத் தோட்டத்தோடு தன் மனைவியின் ஆத்மாவும் கூட இருப்பதாகவே அந்தப் பெரியவர் நினைத்து வாழ்ந்துகொண்டிருந்தார். ஆனால் இந்த முறை மகன் இல்லாததால் தான் தனியாளாக அந்த நிலத்தைத் தோண்டி, உருளை பயிரிட முடியாத ஒரு நிலை. இதையெல்லாம் நினைத்து வருந்திய அந்தப் பெரியவர் சிறையில் இருக்கும் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில்... தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க.. http://www.thinnai.com/?module=displaystory&story_id=10712065&format=html

No comments: