December 07, 2007

அப்துல் கலாமின் ஆதரிசக் கனவுகளை இதுபோன்ற சிறுவர்கள் கட்டாயம் நிறைவேற்றுவார்கள்!

சாதரணமாக எட்டு வயதுச் சிறுவனென்றால் விளையாட்டில்தான் கவனமாக இருப்பான். ஆனால் பெங்களூருவைச் சேர்ந்த கரன் டிராவிட் சற்று வித்தியாசமானவன். பழைய கம்ப்யூட்டர் இருப்பவர்களிடம் அவற்றைத் தானமாகப் பெற்று அதன்மூலம் ஏழைச் சிறுவர்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தருகிறான். சிறு வயதில் பிச்சை எடுப்பதையும் வீட்டு வேலை செய்வதையும் வெறுக்கும் இவனுக்கு விடுமுறை நாட்களில் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள பழங்குடிச் சிறுவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவதுதான் பொழுதுபோக்கு. ஆறு மொழிகளில் எழுதப் பேசத் தெரியுமாம் இவனுக்கு. ஏழைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது இந்தச் இறுவனுக்கு? ஒரு முறை அப்பாவிடம், "ஏன் சில சிறுவர்கள் மட்டும் ஆங்கிலம் தெரியாமல் இருக்கிறார்கள்?" என்று கேட்டபோது அவர்களுக்கு ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கப் பண வசதியில்லை என்று சொன்ன வார்த்தைகள்தான் தூண்டுகோலாக அமைந்தன. அப்துல் கலாமின் ஆதரிசக் கனவுகளை இதுபோன்ற சிறுவர்கள் கட்டாயம் நிறைவேற்றுவார்கள்!

No comments: