October 31, 2007

இன்றைய குறள்

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

யுகேந்திரன் - மலேசியா வாசுதேவன்

பாபர் மசூதி விவகாரம் - விசாரணைக் குழுவுக்கு மீண்டும் காலநீட்டிப்பு

  • தில்லியில் உலக கழிவறை வசதி மாநாடு துவங்கியது : உலக மக்களுக்கு சுகாதாரமான கழிவறை வசதி வழங்கும் சவாலை எப்படி எதிர்கொள்வது, 2015-ம் ஆண்டில் அனைவருக்கும் சுகாதாரமான கழிவறை வசதி செய்து கொடுப்பது என்று ஐ. நா. மன்றம் நிர்ணயித்துள்ள புத்தாயிரமாண்டின் வளர்ச்சி இலக்கை அடைவது எப்படி என்பது குறித்து விவாதிப்பதற்காக, உலக கழிவறை வசதி மாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் புதன்கிழமை துவங்கியது
  • பாபர் மசூதி விவகாரம் - விசாரணைக் குழுவுக்கு மீண்டும் காலநீட்டிப்பு : அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சூழ்நிலை குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் கமிஷனுக்கு 42-வது முறையாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது
  • யுத்தச் செய்தி தணிக்கை வர்த்தமானியை இலங்கை அரசு விலக்கிக்கொண்டது : இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தின்கீழ் உணர்ச்சிபூர்வமான இராணுவச் செய்திகளை வெளியிடுவதற்கும், பிரசுரிப்பதற்கும் தடைவிதிக்கும் நோக்குடன் இலங்கை அரசாங்கம் இராணுவ யுத்த செய்தித் தணிக்கையை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றினை மேற்கொண்டிருந்தார்
  • மட்ரிட் ரயில் குண்டுவெடிப்பு: 20 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு : மட்ரிட் நகரில் 2004 ஆம் ஆண்டில் சுமார் இருநூறு பேர்வரை பலியாகக் காரணமான ரயில் குண்டுவெடிப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று, பெரும்பாலும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 20 பேரை ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம் ஒன்று குற்றவாளிகளாகக் கண்டுள்ளது
  • இன்றைய (அக்டோபர் 31 புதன்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

நான் மகிழ்ந்து பிறரை துன்புறுத்தியிருக்கிறேன் - ஜெயகாந்தன்

''நான் மகிழ்ந்திருக்கிறேன். பிறரை மகிழ்வித்திருக்கிறேன். நான் துன்புற்றிருக்கிறேன். பிறரை துன்புறுத்தியிருக்கிறேன். நான் மகிழ்ந்து பிறரை துன்புறுத்தியிருக்கிறேன். பிறரை மகிழ்வித்து நான் துன்புறுத்தியிருக்கிறேன். இதெல்லாம் எதற்காக? நான் இந்த வாழ்க்கையோடு என்னைச் சம்பந்தப்படுத்திக் கொண்டுள்ளேன். இந்த வாழ்க்கை என்னைப் பாதிக்கிறது. நானும் இந்த வாழ்க்கையைப் பாதிக்கிறேன். வாழ்க்கை எனக்கு முடிவும் தொடக்கமுமற்ற நெடுங்கதையாக காட்சி தருகிறது. அவ்வப்போது சிதறிச் சிதறி அலைகளாய் என் மீது மோதும் சிறுகதைகளாகவும் பொருள் கொள்கிறது'' - ஜெயகாந்தன்

"நான் நினைக்கிறததான் எடுப்பேன்" - 'கற்றது தமிழ்' திரைப்படத்தின் இயக்குநர் ராமின் பேட்டி

எண்பது, தொண்ணூறுகளில் எஸ்.பி.முத்துராமன்களும், ஜெகன்னாதன்களும் வணிகப்படங்களை கொளுத்திப் போட்டுக் கொண்டேயிருக்க, மகேந்திரன், பாலுமகேந்திரா வகையறாக்களிடமிருந்து வெளிப்படும் கலாபூர்வமான மென்மையான படங்களின் வரவு அபூர்வமாகத்தானிருந்தது. இன்றைய சூழ்நிலையிலும் வணிகப்படங்களின் ஆதிக்கத்தில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லையெனினும் சேரன், பாலா, அமீர், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் என்று நம்பிக்கை தரக்கூடிய இயக்குநர்கள் தட்டுப்பட்டு அவர்களின் படைப்புகளும் பொருளாதார ரீதியாக ஒரளவிற்கு வெற்றிகரமாகவே பயணிக்கிறது. அந்தவரிசையில் இன்னொரு இயக்குநராக 'கற்றது தமிழ்' இயக்குநர் ராம்- ஐ சொல்லாம் என்று நினைக்கிறேன். இவரின் படத்தை இன்னும் நான் பா¡க்கவில்லை. பத்திரிகைகளின், நண்பர்களின் விமர்சன ஆரவாரங்கள், பரபரப்புகள் போன்றவைகள் அடங்கிய பின்பே "நல்லபடம்" என்று சுட்டப்படுபவைகளை நான் பார்ப்பது வழக்கம். புதியபார்வை (நவம்பர் 1-15) இதழில் இவரின் ஆரோக்கியமான 'திமிருடன்' கூடிய உரையாடல் பதிவை வாசித்த போது மகிழ்வாக இருந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உத்தேசம். சற்று நேரம் செலவு செய்து படித்து விடுங்கள். (நன்றி: புதிய பார்வை) இயக்குநர் ராம் உடன் புதிய பார்வைக்காக தொலைபேசியில் நடந்த உரையாடல்..........
"ஹலோ ராம்... எப்படியிருக்கீங்க... புதிய பார்வைக்காக கொஞ்ச நேரம் பேசலாமா?"
"பத்து நிமிஷம் போதும் இல்லையா?.. உங்க பேர் என்ன சொன்னீங்க?"
"பரசுராம்"
"ஓ.. பரசுராம்.. கேள்விப்பட்ட மாதிரி இருக்குது. எங்கேயாவது பாத்திருக்கமா?"
"ஆமாம். படம் வெளிவர்றதுக்கு முன்னால, ஒரு ஹோட்டல்ல மதிய சாப்பாட்டுக்குப் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தோம்"
" சரி. கேள்வி கேளுங்க"
"எப்படி இந்தப் படத்தை ஆரம்பிச்சீங்க?"
"எனக்கு வசதியா எந்தப் படம் இருக்குமோ அதைத்தான் என்னால எடுக்க முடியும்"
"எப்படி இருக்கு படத்துக்கு இருக்கற வரவேற்பு?"
"நான் அதைப் பத்தி எல்லாம் கவலைப்படல. படம் எடுத்தாச்சு. அவ்வளவுதான். பாலுமகேந்திரா சார் பாத்துட்டு ஆசியாவிலேயே ஐந்து சிறந்த திரைப்படத்தை வரிசைப்படுத்தினா அதுல கற்றது தமிழ் வரும்னார். அவருக்கு கண் கலங்கிடுச்சு. வண்ணதாசன் இந்த வயசுல என்னைத் தேடி வந்து படத்தைப் பத்தி நிறைய பாராட்டிப் பேசி ஒரு இராத்திரி என்னோடவே தங்கிட்டுப் போனார். சாருநிவேதிதா ஒரு பத்திரிகையில படத்தைப் பத்தி பதினைந்து பக்கம் எழுதியிருக்கிறதா சொன்னார். ஊர் ஊரா கூப்பிட்டுப் பாராட்டறாங்க"
"பத்திரிகை விமர்சனங்களை எல்லாம் பார்த்தீங்களா?"
"நீங்க எத்தனை தடவை படம் பார்த்தீங்க?"
"ஒரு தடவை"
"எநதத் தியேட்டர்ல?"
"உதயம்"
"ஒரு நாவலை விமர்சனம் பண்றதுக்கு எத்தனை தடவை படிப்பீங்க?"
"இரண்டு மூன்று தடவை"
"அப்பப் படத்தை மட்டும் ஒரே ஒரு தடவை பாத்திட்டு விமர்சனம் எழுத முடியுமா?"
"கஷ்டம்தான்"
"அதான். பத்திரிகையில வர்றது எல்லாமே வெறும் பதிவுதான். ஒரு தனிநபரால எழுதப்படுகிற பதிவு. என்னை கற்றுக் கொள்ள வைக்கிற விமர்சனம் எதையும் இந்தத்தேதி வரை - இன்னைக்குத் தேதியை குறிச்சுக்கோங்க - வரலை. சில தனிநபர்கள் நேர்ல நான் கத்துக்கற மாதிரி சில விஷயங்கள் சொன்னாங்க. பிரிண்ட்ல இதுவரைக்கும் வந்ததெல்லாம் விமர்சனமே இல்ல"
"ம்.... படம் நீங்க நினைச்சு எடுத்த மாதிரி ரிசீவ் பண்ணப்படுதா?"
"படம் எடுக்கறதுதான் என்னோட வேலை. புரிய வைக்கறதா என்னோட வேலை?"
"எந்த அடிப்படையில் கதாபாத்திரத்தைத் தொடங்க ஆரம்பிக்கிறீங்க?"
"தத்துவத்தின் அடிப்படையில்தான்"
"என்ன தத்துவம்"
"தத்துவத்தை ஒரு வரியில் சொல்ல முடியுமா? சென்னைதான் என் தத்துவம்"
"சென்னையா?"
"ஆமாம். சென்னை என்கிற நகரம்தான். அதற்குள் புறத்திலிருந்து வரும் மாந்தர்கள்தான் என் கதாபாத்திரங்கள். அவர்களின் அக..புறச் சிக்கல்கள், முடிச்சுகள்"
"தமிழ் படிச்சவனோட பிரச்சினையைத்தான் படத்தில் பேசியிருக்கிறதா நிறைய பேச்சு இருக்கு. நீங்க அப்படி நினைச்சு எடுத்தீங்களா?"
"உங்களுக்கு எப்படி தோணுது?"
"எனக்கென்னவோ தமிழ் படிச்சவனோட பிரச்சினையை மட்டுமே பேசற மாதிரி தெரியலை"
"இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு தோணுது. படத்தில் நிறைய sub text வச்சிருக்கேன். அவங்க அவங்களுக்கு என்ன தோணுதோ பேசிக்கட்டும்"
"இந்த ஐ.டி. துறை மேல வச்சிருக்கிற விமர்சனத்துக்கு என்ன ரெஸ்பான்ஸ் வருது?"
"உங்க ஆபிஸ்ல நெட் இருக்கா. இருந்தா கற்றது தமிழ்-னு போடுங்க. ஆயிரக்கணக்குல பேசியிருக்காங்க. படிங்க"
"படம் சுய விவரிப்புல நடக்குது. ஆனா முடியும் போது நீங்க வந்து... ஒரு மூன்றாவது குரல் - பேசுவது எதற்கு?"
"அப்படி வரக்கூடாதுன்னு எந்த சினிமா மேதை எந்தக் கலைக் கோட்பாடுல பேசியிருக்கார். இருந்தா பேர் சொல்லுங்க. இல்ல இது நீங்களே சொல்றதா? சிட்டி ஆப் காட்-னு ஒரு படம் பாத்திருக்கீங்களா? அதுல சுயவிவரிப்பும் வரும். மூன்றாவது குரலின் விவரிப்பும் வரும்"
"ஒரு விவாதத்தை இப்படி ஆரம்பிச்சா முடிவு கிடைக்காது"
"எனக்கு எந்தக் கட்டாயமும் கிடையாது. நான் நினைக்கிறததான் எடுப்பேன்"

மிக மிக மெதுவான கேமரா

October 30, 2007

அஞ்சலி : முதுபெரும் எழுத்தாளரான லா.ச.ரா மரணம்

லா.ச.ரா என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட முதுபெரும் எழுத்தாளரான லா.ச.ராமாமிருதம், தனது 91-வது வயதில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவ்ர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனி இடம் பெற்று விளங்கியவர் லா.ச.ராமாமிருதம். லா.ச.ரா என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வருபவர். அபிதா என்ற அவர் எழுதிய நாவல் மிகவும் புகழ் பெற்றது (ஒரு நாவல்தான் எழுதியுள்ளார்). ஏராளமான சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ள இவர், உணர்ச்சி பெருக்கான நடையினால் வாசகர்களை மிகவும் கவர்ந்தவர். தன்னை சௌந்தர்ய உபாகசர் என்று அழைத்து கொண்ட லா.ச.ரா வின் தமிழ்நடை மிகவும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் குடும்பம் மற்றும் பெண்கள் ஆகிய விஷயங்களை மையமாக கொண்டு கதை எழுதியிருக்கும் இவர், சிந்தாநதி என்னும் நூலுக்காக 1989-ம் ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு வென்றார். தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் மதிக்கப்பட்ட லா.ச.ரா, 1916-ம் ஆண்டு திருச்சியின் லால்குடியில் பிறந்தவர். அவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. தந்தை மற்றும் ஊர் பெயரை இணைத்து கொண்டு லா.ச.ராமாமிருதம் என்னும் பெயரில் அவர் கதைகள் எழுதத் தொடங்கினார். அவருடைய முதல் கதை 18-வது வயதில் மஞ்சரியின் சிறுகதை பத்திரிகையில் வெளியானது.அவருடைய மனைவி ஹைமாவதி. அவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் 91 வயதான லா.ச.ரா இன்று அதிகாலை சென்னையில் மரணமடைந்தார். இலக்கிய உலகைச் சேர்ந்த பல முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இன்றைய குறள்

எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி

எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

கவிதையில்தான் மொழியின் சாரம் உயிர்ப் பிடிப்புடன் உள்ளது

"கவிதைகளுக்கும், வழக்கத்தில் உள்ள மொழிக்கும் உள்ள உறவு தினசரி மாறிக் கொண்டே இருக்கிறது. மொழி குறித்த நமது பிரக்ஞையை விடாமல் புதுப்பித்துக் கொள்ள கவிதை உதவுகிறது. கவிதையில் தான் மொழியின் சாரம் உயிர்ப் பிடிப்புடன் உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட அனுபங்களை வெளிப்படுத்துவதே சிறந்த கவிதை. ஒரு சொல்லை கவிஞர் தேர்ந்தெடுக்கிறார் என்பதைவிட அந்த சொல்லை கவிதைதான் தேர்ந்தெடுக்கிறது" - பிரம்மராஜன், எழுத்தாளர்

கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களில் மூவர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்

  • நைஜீரியாவில் கடத்தப்பட்டவர்கள் விடுதலை : நைஜீரியாவில் கடந்த அக்டோபர் 26 ஆம் திகதியன்று, பெட்றோலியம் அகழும் கப்பலில் இருந்து கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களும், இரண்டு போலந்து நாட்டுக்கார்ரகளும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் உள்ள இந்திய துணைத் தூதர் அணில் திரிகுணாயத் தமிழோசையிடம் தெரிவித்தார். விடுவிக்கப்பட்டவர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை, ஆனால் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள் எனவும் அவர் கூறினார். இந்தக் கடத்தல் தொடர்பாக எந்தக் குழுவும் உரிமைகோரவில்லை என்றும் இவர்களை விடுவிக்க பணம் கொடுக்கப்பட்டதாக தங்களுக்குத் தெரியவில்லை என்றும் இந்தியத் தூதர் தெரிவித்தார். கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களில் மூவர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்ட அஜித் காமராஜின் இளைய சகோதரர் சுதர்சனன் தனது அண்ணன் விடுவிக்கப்பட்ட பிறகு தம்மிடம் பேசியதாகவும், கடத்தியவர்கள் தம்மை துன்புறுத்தவில்லை என்று தம்மிடம் கூறியதாகவும் தமிழோசையிடம் தெரிவித்தார். இது குறித்த மேலதிகத் தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
  • நூற்றுக்கும் அதிகமான ஆப்பிரிக்கக் குழந்தைகளை அழைத்துச் சென்ற தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகளை சாட் அரசு கைது செய்துள்ளது : ஆப்பிரிக்காவின் சாட் நாட்டில் இருந்து நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளை பிரான்ஸ் நாட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற தன்னார்வ அமைப்பு ஒன்றின் அதிகாரிகளை சாட் நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
  • நானூறு வயதான சிப்பி : சமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டின் வடக்கு அத்திலாந்திக் பெருங் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒருவகையான சிப்பி, சுமார் 405 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். உலக வரலாற்றில், மிக அதிக நாள் உயிர் வாழ்ந்த உயிரினமாக இந்த கடற் சிப்பி கருதப்படுகிறது. இத்தனை நாள் இந்த சிப்பி உயிர்வாழ்ந்தது எப்படி என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள்
  • இராக்கில் வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளை நீதி விசாரணைக்கு உட்படுத்த வழி செய்யும் சட்டமூலம் : இராக்கில் செயற்படுகின்ற வெளிநாட்டு பாதுகாப்புத்துறை ஒப்பந்ததாரர்கள், குற்றவிசாரணைகளுக்கு உள்ளாக்கப்படுவதிலிருந்து தப்பிக்க வழி செய்யும் தற்போதைய சலுகையை ரத்துச் செய்யும் வகையிலான சட்டமூலம் ஒன்றுக்கு இராக்கிய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது
  • பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள இராணுவத் தலைமையகத்துக்கு அருகாமையில் ஒரு தற்கொலைதாரி குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார். இந்தத் தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டார்கள் என்றும், பலர் காயமடைந்தார்கள் என்றும் கூறப்படுகிறது
  • எலிசபெத் மகாராணியாரைச் சந்தித்த சவூதி அரசர் : லண்டனில் சவூதி மன்னர்பிரிட்டனுக்கு அரசுமுறைப் பயணமாக வந்திருக்கும் சவூதி அரேபிய அரசர் அப்துல்லா அவர்களின் பயணத்தின் முதல் நிகழ்வாக, எலிசபெத் அரசியார் அவரை முறைப்படி வரவேற்றார்
  • இராக்கின் மிகப் பெரிய அணையின் பாதுகாப்புக் குறித்து அமெரிக்கா கவலை : இராக்கில் உள்ள மிகப் பெரிய அணையின் பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
    மோசூல் நகருக்கு வடக்கே 70 கிலோ மீட்டர் தொலைவில் டைக்ரிஸ் நதியின் குறுக்காக இந்த அணைக்கட்டு அமைந்துள்ளது

October 29, 2007

இன்றைய குறள்

எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்

தேரான் பிறனில் புகல்

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப்பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

யுகேந்திரன் - மலேசியா வாசுதேவன்

சம்பாதிக்க வழியா இல்ல.. இவரப்பாருங்க!

முட்டாள்தனம் மனித இனத்தின் அசிங்கம்

"சமூகத்தில் நடக்கிற எல்லா தவறுகளுக்கும் மக்களோட முட்டாள்தனம் தான் மூலகாரணம். அறியாமை மனித இனத்தின் அழகு. முட்டாள்தனம் அசிங்கம்" - நடிகர் பிரகாஷ்ராஜ்

தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு கத்திக்குத்து

  • தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.கிருஷ்ணசாமியை இன்று திங்கட்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சில அடையாளம் தெரியாத நபர்கள் வேல்கம்புகளாலும் கத்தியாலும் குத்தியிருககின்றனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கணிசமான அளவு இரத்த இழப்பு ஏற்பட்டிருககிறது, அவர் தற்போது மதுரை தனியார் மருத்துவமனையன்றில் அனுமதிககப் பட்டிருககிறார். உயிருககு ஆபத்தில்லை என்று கூறப்படுகிறது. நாளை பசும்பொன்னில் நடைபெறவிருககும் முத்துராமலிங்கத்தேவர்அஞ்சலி நிகழ்ச்சி தொடர்பாக ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. முக்குலத்தோரைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவரென நினைத்து கிருஷ்ணசாமி தாக்கப்பட்டிருகககூடும் என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
  • நைஜீரியாவில் 3 தமிழர்கள் உட்பட 4 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர் : எஃப்.பி.எஸ்.ஓ. மிஸ்ட்ராஸ் என்ற இத்தாலிய நிறுவனத்திற்காக நைஜீரியாவின் எண்ணைக் கிணறு ஒன்றில் வேலைபார்த்துவந்த நான்கு இந்தியர்கள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு பிடித்துச்செல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்ட வடக்கான் குளம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்ளிட்ட நான்கு இந்தியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டனர். நான்காவது நபர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். இவர்களை விடுவிக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று நைஜீரியாவுக்கான இந்தியாவின் துணைத் தூதர் அனில் த்ரிகுணாத் தமிழோசையிடம் விளக்கினார். கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.
    அவர் தெரிவித்த விபரங்களை நேயர்கள் கேட்கலாம்
  • மும்பை பங்கு சந்தையின் புதிய சாதனையும், நிலமற்ற ஏழை விவசாயிகளின் போராட்டமும் : இந்தியாவின் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் இன்று 20 ஆயிரம் புள்ளிகளைக் கடந்துசென்றுள்ளது. பங்குச் சந்தையின் அதிவேக வளர்சியின் காரணமாக இந்திய நிறுவனங்களின் மதிப்பு உயந்துள்ளது
  • வட இலங்கையில் இராணுவத்தினர் புலிகள் இடையில் மோதல் வலுத்துள்ளது : இலங்கையின் வடக்கே மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 14 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மன்னார் தம்பனை பகுதியில் விடுதலைப் புலிகள் புதைத்திருந்த பொறிவெடியில் சிக்கிய இரண்டு இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் மேற்குலக நாடுகளின் ஈடுபாடு போதாது என்கிறார் சவுதியரேபிய மன்னர் : பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தில் போதிய முயற்சி எடுக்கவில்லை என்று தான் நம்புவதாக சவுதியரேபிய மன்னர் அப்துல்லா கூறியுள்ளார்

October 28, 2007

வெளிநாடுகளுக்குச் சென்ற விஞ்ஞானிகள் இந்தியாவுக்கு வரவேண்டும்

"உயரே செல்லச் செல்ல பூமி ஒரு புள்ளியாகிவிடுவது போல், அறிவில் உயர உயர மனிதகுலம் அன்பை இழந்து கொண்டிருக்கிறதா? நம் தொழில்நுட்பம் அமெரிக்காவை அடுத்த வீடு ஆக்கிவிட்டது. ஆனால், அடுத்த வீட்டை அமெரிக்காவாக்கிவிட்டது. வயிறு, மூளை, இதயம் மூன்றுக்கும் சமபந்தி வைப்பது போல்தான் கல்வி. தொழில்நுட்பக் கல்வி பெற்ற பலர் அமெரிக்க, ஐரோப்பியக் கனவுகளில் இருக்கிறார்கள். அவர்கள் தாய்நாடு தந்த அறிவை இந்த தாய்நாடே முதலில் அனுபவிக்கட்டும். வெளிநாடுகளுக்குச் சென்ற விஞ்ஞானிகள் இந்தியாவுக்கு வரவேண்டும்"

- வைரமுத்து

இன்றைய குறள்

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்

நம்பிப் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

சம்பாதிக்க வழியா இல்ல.. இவரப்பாருங்க!!

கறும்புலிகள் புதைக்கப்பட்ட சர்ச்சை தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி கருத்து

  • சமீபத்தில் அநுராதபுர விமானதள தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் சடலங்கள் முறையான நீதிமன்ற உத்தரவின்றி புதைக்கப்பட்டு விட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த பின்னணியில், இந்த சடலங்களை புதைக்கும் முடிவை தாம் எடுத்ததாக பிபிசியிடம் தெரிவித்தார் இந்த சடலங்களை பிரேதப் பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் அஜித் ஜெயசேன. போதுமான குளிர்பதன வசிதியில்லாததன் காரணமாக அனுராதபுரத்தில் இந்த சடலங்களை வைக்க தங்களுக்கு வசதியில்லை என்றும் அதனால் பேரிடர் ஏற்படும்போது சர்வதேச அளவில் ஏற்கப்பட்ட நடைமுறைக்கேற்ப தற்காலிகமாக உடல்களை புதைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சடலங்களை புதைக்க நீதிமன்ற உத்தரவு தேவை என்றும் அது போன்ற உத்தரவு இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கும் அஜித் ஜெயசேன, தாம் உள்ளிட்ட பிரேதப் பரிசோதனை செய்த குழுவினர் இந்த 21 சடலங்களை தற்காலிகமாக புதைக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். இந்த சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பெற்றுக்கொள்ள விடுதலைப் புலிகள் விரும்பினால் அது சாத்தியம் என்றே தாம் நினைப்பதாகவும், இந்த சடலங்களை பொறுப்பானவர்கள் எடுத்துச்செல்லும்வரை அவற்றை குறிப்பிட்ட காலத்துக்கு புதைத்து வைத்த முடிவுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
  • இந்தியாவில் ஆடை தயாரிக்க குழந்தை தொழிலாளர் பயன்படுத்தப்பட்டது குறித்து 'கேப்' நிறுவனம் அதிர்ச்சி : இந்தியாவிலிருந்து 'கேப்' நிறுவனத்துக்கு கொள்முதல் செய்யப்படும் ஆயத்த ஆடைகளை தயாரிக்க சில இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவல் தெரியவந்ததை அடுத்து, இது தொடர்பாக விவாதிக்க இந்தியாவில் இருந்து ஆயத்த ஆடைகளை அனுப்பும் நிறுவனங்களை சர்வதேச ஆடை நிறுவனமான 'கேப்' அவசரப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆடைகளை தயாரிக்க குழந்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்றுவந்த தகவல்கள் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாகவும், அவ்வாறு தயாரிக்கப்பட்ட ஆடைகள் அழிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. பிபிசி நிறுவனத்துக்கு கிடைத்த தொலைக்காட்சி படத்தில்,'கேப்' நிறுவனத்திற்கான ஆடைகளை தயாரிக்கும் ஒரு துணை ஒப்பந்ததாரரின் தொழிற்சாலையில் ஒரு சிறுவன் 'கேப்' நிறுவனத்தின் அச்சு பொறுத்தப்பட்ட உடையை தைப்பது தெரிந்தது.
  • நெஞ்சம் மறப்பதில்லை - ஆறாம் பாகம் : ஒரு மூலக் கதையை திரையில் சுவாரஸ்யமாக அளிக்கும் வகையில் திரைக்கதை அமைப்பதில்தான் ஒரு இயக்குநரின் திறமை அடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். திரைக்கதை அமைப்பதில் கிருஷ்ணன்-பஞ்சு இரட்டை இயக்குநர்கள் மிகவும் கைதேர்ந்தவர்கள்; கதைக்கு ஏற்ப அழகான முறையில் பாத்திரங்களை உருவாக்கி சம்பவங்களைக் கோர்த்து கொடுப்பதில் இவர்கள் வல்லவர்கள் என்கிறார் சம்பத்குமார். அண்ணாதுரையின் கதை வசனத்தில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் உருவான 'நல்லதம்பி' திரைப்படமானது, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு போன்ற பிரச்சாரங்களை செய்வதாகவும் சமதர்ம சமுதாயத்தை இலக்காகக் கொண்ட படமாகவும் விளங்கியது. அவர்கள் இயக்கிய 'பராசக்தி' திரைப்படம் தமிழ் திரையுலகின் மைல்கல். கருணாநிதியின் கணல் தெறிக்கும் வசனங்களும், சிவாஜி கணேசனின் ஆக்ரோஷ நடிப்பும், புரட்சிக் கருத்துகளும் அடங்கிய படமிது. கிருஷ்ணன்-பஞ்சு படங்களில் கனமான கதையம்சம், உணர்ச்சிப்பூர்வமான பாத்திரப்படைப்பு, கண்ணியமான காட்சியமைப்பு இருந்ததை நெஞ்சம் மறப்பதில்லை ஆறாம் பாகம் எடுதியம்புகிறது.
  • நிலச் சீர்திருத்தம் கோரி தில்லியில் பெரும் ஆர்ப்பாட்டம் : இந்தியத் தலைநகர் புதுதில்லியில் இன்று ஞாயிற்றுக்கிழமை 25 ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பெருந்திரளாக கூடியுள்ளனர். நான்கு வார காலம் நடைப் பயணமாக 325 கிலோமீட்டர் தூரம் ஊர்வலம் மேற்கொண்டு வந்துள்ள இவர்கள் விவசாய நிலங்களில் தமக்கும் பங்கு கேட்டு போராடுவதற்காக தில்லி வந்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து நிலமற்ற பழங்குடியின மக்களும் அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளிகளும் அடங்கிய இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், நிலச் சீர்திருத்தம் வரவேண்டும், விவசாய நிலங்களின் மீதான உரிமை குறித்து தெளிவான சட்டங்கள் வரவேண்டும் என்று கோருகின்றனர். தெளிவான சட்டங்கள் இல்லாத காரணத்தினாலேயே தொழிலாளிகளுக்கு நிலம் கிடைப்பதில்லை என்றும் நடைமுறையிலுள்ள விதிமுறைகளும் பெரு நில உரிமையாளர்களுக்கு சாதகமாகவே இருப்பதாகவும் அவர்கள் குமுறுகின்றனர். கிராமத்து ஏழை மக்களிலேயே மிகவும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களடங்கிய இந்த ஊர்வலத்தினர் தமது கோரிக்கையை அதிகார உயர்மட்டத்துக்கு கொண்டுசெல்ல விழைகிறார்கள்.
    மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை அவர்கள் ஏற்கனவே சந்தித்துள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங்கையும் நாளை திங்கட்கிழமை அவர்கள் சந்திக்கவிருக்கிறார்கள். நில மறு பங்கீட்டு கோரிக்கை என்பது இந்திய அரசியல் அரங்கின் வழமையான ஒரு அங்கம்தான் என்றாலும் தற்போது கோரிக்கைகளை செவிமடுக்கும் ஒரு மனோநிலையில் அரசாங்கம் இருப்பதுபோல் தெரிகிறது. நில மறு பங்கீட்டு ஆணைக்குழு இதோ வந்துகொண்டிருக்கிறது என்று அரசு வாக்குறுதியளித்துள்ளது. தில்லி நிலச் சீர்திருத்த ஆர்ப்பாட்டம் பற்றி செய்தியாளர் ஜதிந்தர் சித்து வழங்ய தகவல்களின் தமிழ் வடிவத்தையும் இந்திய விவசாய நிலங்களின் தற்போதைய நிலைமை குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் துரை மாணிக்கம் அவர்களின் செவ்வியையும் நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.
  • இலங்கை மோதல்களில் புலிகள் 14 பேர், இராணுவத்தினர் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் : இலங்கையின் வடக்கே இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்களில் 14 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • இராக்-துருக்கி நெருக்கடி ஆபத்தானது: இராக் வெளியுறவு அமைச்சர்
    இராக் மற்றும் துருக்கி இடையிலான எல்லைப் பகுதியில் குர்த் இன பிரிவினைவாத இயக்கம் பி.கே.கே நடத்திய தாக்குதல் காரணமாக இருநாடுகள் இடையில் ஏற்பட்டுள்ள தகராறு 'மிக ஆபத்தானது' என்று இராக்கி வெளியுறவு அமைச்சர் ஹொஷ்யார் ஸெபாரி கூறியுள்ளார்
  • ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகள் 80 பேரை கொன்றுள்ளதாக அமெரிக்க மற்றும் ஆப்கானிய படைகள் அறிவிப்பு : ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகள் சுமார் 80 பேரை கொன்றுகுவித்திருப்பதாக அங்குள்ள அமெரிக்க மற்றும் ஆப்கானிய படைகள் கூறுகின்றன
  • பாகிஸ்தானில் தொடரும் மோதல் : சமீப காலமாக பதற்றம் நிலவி வரும் பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் தாக்குதல் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் செயல்படும பாகிஸ்தானிய படையினரும் - இஸ்லாமியத் தீவிரவாதிகளும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்திவருகின்றனர்

ஈழக்கிழவனின் கொஞ்சநேரம்



இதயத்தைப் பிழியும், உயிர்வலிக்கும் நம் சகோதரர்களின் சோககீதம்

October 27, 2007

யுகேந்திரன் மலேசியா வாசுதேவன்

இன்றைய குறள்

அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்

பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு

  • ஜனதாதளத்தில் திடீர் மாற்றம் : கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு மூன்று வாரங்கள் ஆன நிலையில் இரு கட்சிகளும் மீண்டும் ஆட்சி அமைக்க முனைந்திருக்கின்றன. பாரதீய ஜனதா ஆதரவுடன் இருபது மாதங்கள் ஆட்சி நடத்திய மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒப்பந்தப்படி பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்துவிட்டது. மக்களைச் சந்திக்கத் தயார் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் தெரிவித்தது.
    அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டாலும், சட்டப்பேரவை கலைக்கப்படாமல், இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் அதை மீண்டு்ம் இயக்கத்துக்குக் கொண்டுவர முடியும். இந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட்டிருக்கிறது. பாஜக-வின் யெதியூரப்பா தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து, மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் குடியரசுத் தலைவர் மற்றும் கர்நாடக ஆளுநருக்கு கடிதங்களை அனுப்பியிருப்பதாக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தேசிய தலைவர் தேவகெளடவின் மகனுமான எச்.டி. குமாரசாமி தெரிவித்தார். இந்த திடீர் அரசியல் மாற்றம் குறித்து, கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. கட்டா சுப்ரமணியத்திடம் கேட்டபோது, ஏற்கெனவே ஆதரவு தர மறுத்த மதச்சார்பற்ற ஜனதாதளத்தினர் தற்போது தாங்களாகவே ஆதரவு தர முன் வந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
    கர்நாடக ஆளுநரிடம் தாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரியிருப்பதாகவும், ஆதரவுக் கடிதங்களை ஆய்வு செய்துவிட்டு முடிவு அறிவிப்பதாக அவர் தெரிவித்திருப்பதாகவும் கட்டா சுப்ரமணியம் தெரிவித்தார்.
  • இந்திய காஷ்மீரின் ஸ்ரீநகரில் இந்திய நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் : இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீர் பகுதியின் பிரதான நகரமான ஸ்ரீநகரில் இந்தியப் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடந்துள்ளது
  • பாகிஸ்தானில் கடும்போக்கு மதகுரு ஆதரவாளர்கள் 13 பேரை கொன்றுள்ளனர் : வடமேற்குப் பாகிஸ்தான் பகுதியில் சுமார் 13 பேர் கடும்போக்கு முஸ்லிம் மதகுரு ஒருவருடைய ஆதரவாளர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான அதிகாரிகள் கூறுகின்றனர்
  • மன்னார் மாவட்ட மடு தேவாலயப் பகுதியை பாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்க மன்னார் ஆயர் ஜனாதிபதியிடம் கோரிக்கை : மன்னார் மாவட்டத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் கஷ்டங்களைப் போக்குவது தொடர்பாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், கொழும்பு பேராயர் மற்றும் மடு தேவாலய பரிபாலகராகிய அருட்தந்தை எமிலியாஸ் பிள்ளை ஆகியோருடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்
  • ஜார்க்கண்ட் மாவோயியவாதிகள் தாக்குதலில் 17 பேர் பலி : இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஜார்க்கண்டில் சனிக்கிழமை அதிகாலை மாவோயிய கிளர்ச்சிக்காரர்கள் நடத்திய தாக்குதலில் முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டியின் மகன் உள்பட 17 பேர் கொல்லப்பட்டார்கள்
  • சோமாலியத் தலைநகரில் கடும் சண்டை : சோமாலியத் தலைநகர் மொகதிஷுவில் பலத்த மோதல் வெடித்துள்ளது. நகரின் தென்பகுதியில் ஷெல் குண்டுகள் வீழ்ந்து வெடித்துக்கொண்டுள்ளன
  • இன்றைய (அக்டோபர் 27 சனிக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

October 26, 2007

இன்றைய குறள்

பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்

பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

நான் தமிழன்

"நான் தமிழன்; அதிலும் மதுரைப் பக்கத்துத் தமிழன் என்பதால் அந்தத் தமிழைத்தான் என்னால் அதிகம் பயன்படுத்திப் படம் எடுக்க முடியும். அது நான் வாழ்ந்த சூழல்.. ஒரு கலைஞன் தனக்குள் காட்சிகளும், சப்தங்களுமாகப் பதிந்து போன வாழ்க்கையைத் தான் தனது படைப்புகளில் பதிவு பண்ண முடியும். இங்கிருந்து கொண்டு நான் வாஷிங்டன்னைப் பற்றி ஒன்றும் எடுக்க முடியாது. கி. ராஜநாராயணன் கரிசல் பூமியைப் பற்றி எழுதுகிறார் என்றால் அவர் சார்ந்த கிராமம். அந்த மனிதர்கள், அந்த மொழியில்தான் தோண்டித் துருவி எழுதுகிறார். இன்னும் வாழ்நாள் முழுக்க அவர் எழுதுகிற அளவுக்கு வளத்தைக் கொடுத்திருக்கிறது அந்த மண். அவரைப் போய் ஏன் கோவை மாவட்டத்துக் கொங்குத் தமிழில் எழுதவில்லை என்று கேட்க முடியாது. அது மாதிரி எனக்குத் தெரியாத ஒன்றை நான் படைக்க முடியாது. நான் சார்ந்த மண், நான் சார்ந்த மொழி, பழக்கவழக்கங்கள், தேனி, உசிலம்பட்டிக் காடுகளில் இருக்கிற மனிதர்கள், அந்த வாழ்க்கை தான் நான் அனுபவித்த வாழ்க்கை. மொழியில் சற்று மாறுபட்டிருந்தாலும், அது எல்லோருக்கும் பொதுவான வாழ்க்கைதானே... அதைத் தான் நான் படைக்கிறேன்.
பாரதிராஜா, குமுதம் தீராநதிக்கு (பிப் 2003) வழங்கிய நேர்காணலில்...

இழப்பு ஒன்றரை கோடி அமெரிக்க டொலர்கள்

  • அனுராதபுரம் விமானப்படை தள தாக்குதல்: ஒன்றரை கோடி அமெரிக்க டொலர்கள் சேதம் என்கிறது இலங்கை விமானப்படை
    கடந்த வியாழனன்று அனுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானப்படையின் எட்டு விமானங்கள் சேதமடைந்ததில் ஏற்பட்டுள்ள இழப்பு ஒன்றரை கோடி அமெரிக்க டொலர்கள் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது
  • இந்தியாவில் நெல் கொள்முதல் விலையும் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது : இந்தியாவில் கோதுமைக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுபோல், நெல்லுக்கான கொள்முதல் விலையும் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்று விவசாய அமைப்புக்களும் பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன
  • தவறான செய்தி வெளியிட்டமைக்காக இலங்கை ஏபிசி நிறுவன ஒலிபரப்பு சேவைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது : இலங்கை ஊடகத்துறை அமைச்சர்இலங்கையின் ஏபிசி வானொலி குழுமம் தவறான செய்தி ஒன்றை நேற்று 25ஆம் தேதி ஒலிபரப்பியதாக தெரிவிக்கப்பட்டு அதன் ஒலிபரப்பு உரிமம் ரத்துசெய்யப்பட்டுள்ளது
  • இரான் மீதான அமெரிக்கத் தடைகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று ரஷ்யா கோருகிறது : இரான் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய சர்வதேசத் தடைகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார்
  • சாட் நாட்டில் இருந்து குழந்தைகளைக் கடத்த முயன்றதை யூனிசெஃப் கண்டித்துள்ளது : ஆப்பிரிக்காவின் சாட் நாட்டிலிருந்து பிரான்சுக்கு 103 குழந்தைகளை கடத்த முயன்று, தோல்வியடைந்த சம்பவம் ஒன்றை ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியமான யூனிசெஃப் வன்மையாக கண்டித்துள்ளது

நாம் எங்கிருக்கிறோம்? என்ன கொடுமை இது? என்று தணியும் இந்தக் கோரம்?

Please click the image to enlarge

நான் மூண்டாவது தரமும் காயம் பட்டிட்டன். தொடர்பைத் துண்டிக்கிறன்....." என்ற வார்த்தைகளோடு இளங்கோவின் குரல் அடங்கிப்போகின்றது

'தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும். உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்"

கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது.

விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினர், வான் புலிகளின் உதவியுடன் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத்தளம் மீது மேற்கொண்ட வெற்றிகரமான 'எல்லாளன் நடவடிக்கை" அதிரடித் தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் சிங்கள அரசோ அல்லது சிங்களப் படைத்தரப்போ மீளமுடியாமல் இருக்கின்றது.

தேசியத் தலைவரினால் மிகவும் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு துல்லியமான முறையிலே குறுகிய நேரத்தினுள் சிறப்பு கரும்புலி அணியினரால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல் நடவடிக்கை விடுதலைப் புலிகளின் தாக்குதல் தந்திரோபாயங்களையும் அவர்களது போரிடும் ஆற்றலையும் வல்லமையையும் மீண்டும் ஒரு தடவை சிங்கள அரசிற்கும் உலகத்திற்கும் நிரூபித்துள்ளதாக பல்வேறு படைத்துறை ஆய்வாளர்களும் அனைத்துலகச் செய்தி நிறுவனங்களும் கருத்து தெரிவித்துள்ளன.

கரும்புலிகள் வசப்படுத்திய அந்த நிமிடங்கள்...
அனுராதபுரம் வான்; படைத்தளத்திற்குள் திங்கள் அதிகாலை மூன்று மணியளவில் 21 பேர்களைக் கொண்ட ஆண்கள், பெண்கள் உள்ளடங்கிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் சிறப்புப் படையணியினர் ஊடுருவினர்.
ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகளையும் இயந்திர துப்பாக்கிகளையும் பயன்படுத்தி காவலரண்களிலும் வான் தளத்தினுள்ளும் பாதுகாப்புக் கடமையில் இருந்த சிறிலங்கா படையினரின் மீது தாக்குதல்களை நடத்தி வான் படைத்தளத்தினை தமது கட்டுப்பாட்டின்கீழ் வந்தனர். அதன்பின்னர் புலிகளின் அணியினர், இளங்கோவுடன் ஒரு பகுதியாகவும் வீமனுடன் ஒரு பகுதியாகவும் இரு குழுக்களாகப் பிரிந்து வான் படைத்தளத்துள் தரித்து வைக்கப்பட்டிருந்த வானூர்திகளை அழிப்பதிலும் ரேடார் நிலையங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் பொருத்தப்பட்ட நிலைகளை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

ஒரு மணித்தியால நேர இடைவெளிக்குள் மூன்று கிலோ மீற்றர் நீளத்தையும் இரண்டரைக் கிலோ மீற்றர் அகலத்தையும் கொண்ட அனுராதபுரம் பாரிய விமானப்படைத்தளத்தினை கரும்புலிகள் அணியினர் வெற்றிகரமாக தாக்கி தமது முற்றுமுழுதான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அப்போது விடுதலைப் புலிகளின் வான்படையினரின் இரண்டு வானூர்திகள், அனுராதபுரம் வான்படைத்தளத்தினுள் உள்நுழைந்து இரண்டு குண்டுகளை வீசி அப்படைத்தளத்திற்கு மேலும் பாரிய சேதங்களை ஏற்படுத்தின.

அந்த வான்தளத்தினை திங்கள் முற்பகல் 11.00 மணிவரை தமது கட்டுப்பாட்டிற்குள் கரும்புலிகள் அணியினர் வைத்திருந்ததுடன் அனுராதபுரம் வான்படை தளத்துள் தரித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து வானூர்திகளையும் தாக்கியழித்தனர். அந்த வான்படை தளத்துக்கு உதவி புரிவதற்காக வவுனியாவில் இருந்த அனுப்பப்பட்ட பெல்-212 உலங்குவானூர்தியானது மகிந்தலைப் பகுதியில் வானூர்தி எதிர்ப்பு ஆயுதத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதில் பயணம் செய்த நான்கு வான்படையினர் உலங்குவானூர்தியுடன் வீழ்ந்து உடல் சிதறிப் பலியாயினர்.
இந்த தாக்குதல்களின் போது சிறிலங்கா வான்படையின் எட்டு வானூர்திகள் அழிக்கப்பட்டதாக முதலில் செய்திகள் வெளிவந்தாலும் தற்போது கிடைக்கும் நம்பகமான தகவல்களின் படி 18 வரையிலான வானூர்திகள் அப்படைத்தளத்தின் மீதான தாக்குதலின் போது அழிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன கடந்த 24 ஆம் நாள் புதன்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதாவது 660 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 18 வானூர்திகள் முற்று முழுதாக அழிக்கப்பட்டு அல்லது சேதமாக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

அதாவது
எம்.ஐ-24 உலங்குவானூர்திகள்- 02
எம்.ஐ-17 உலங்கு வானூர்தி - 01
பெல்-212 - 01
பீச் கிராப்ட்- 01,
மு-8 பயிற்சி வானூர்தி - 01
Pவு-6 பயிற்சி வானூர்தி - 03
ஆளில்லா வேவு வானூர்தி - 03
செஸ்னா வானூர்தி - 06

ஆகியன இத்தாக்குதலின் போது புலிகளினால் அழிக்கப்பட்டதாக தெரிவித்த செனிவிரட்ன இது தவிர மேலும் மூன்று வானூர்தி அழிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெற்றதும் வெளியிடப்படும் என்றும் லக்ஸ்மன் செனிவிரட்ன தெரிவித்தார்.

இத்தாக்குதல்களின் போது சிறிலங்காப் படையினர் 14 பேர் கொல்லப்பட்டதாகவும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் சிறிலங்கா அரச தரப்பினர் செய்திகளை வெளியிட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் விங் கொமாண்டர் அமிலா மொகொட்டி, ஸ்குவார்டன் லீடர் ருவான் விஜயரட்ன மற்றும் இரண்டு பிளையிங் ஒபிசர்கள், நான்கு கோப்பரல்கள், இரண்டு லான்ஸ் கோப்பரல்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

விடியும் வரை விழித்திருந்த அனுராதபுரம் மக்கள் :

அனுராதபுர நகரமானது அதிகாலை 03:20 மணியில் இருந்தே குண்டு சப்தங்களாலும் துப்பாக்கி வேட்டொலிகளினாலும் அதிர்ந்துகொண்டிருந்தது. அந்நகர மக்கள் இச்சத்தங்களினால் நித்திரையில் இருந்து திடுக்கிட்டு எழுந்ததுடன் பயப்பீதி காரணமாக பின்னிரவு முழுவதும் விழித்திருந்தனர்.
விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் மிகவும் இரைச்சலுடன் தாழப்பறந்து குண்டுவீசியதை தாம் கண்டதாக பல மக்கள் செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்திருந்தனர். மேலும் முகாம் பகுதியில் பாரிய நெருப்புக்கோளங்களையும் தீச்சுவாலைகளையும் கண்டதாக முகாமிற்கு அருகில் வசித்தவர்கள் தெரிவித்தனர்.

அனுராதபுர வான்படைத்தள தாக்குதலின் முக்கியத்துவம்

சிறிலங்கா அரசும் சிங்கள படைத்துறையும் விடுதலைப் புலிகளை போரில் வென்று வருவதாகவும் விரைவில் புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருக்கும் வன்னி பிராந்தியத்தினையும் சிங்களப்படைகள் கைப்பற்றும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிக்கைகளை வெளியிட்டு தென்னிலங்கையிலே வாழுகின்ற சிங்கள மக்களையும் மற்றும் அனைத்துலக சமூகத்தினையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்ற காலப்பகுதியில்தான் இத்தாக்குதல் நடவடிக்கை புலிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இத்தாக்குதலின் மூலம் பல செய்திகளை விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசிற்கும் அனைத்துலக சமூகத்திற்கும் உணர்த்த முயன்றிருக்கின்றார்கள்.

  • இலங்கைத்தீவின் அரசியல் மற்றும் படைத்துறை தொடர்பான விடயங்களை தீர்மானிப்பதில் விடுதலைப் புலிகள் செல்வாக்கு செலுத்துகின்ற பாரிய சக்தியாக தொடர்ந்தும் விளங்குகின்றார்கள் என்பது முதலாவது.
  • சிறிலங்கா அரசின் பாதுகாப்பு கட்டமைப்புக்களுக்கெல்லாம் தண்ணி காட்டியபடி தென்னிலங்கையின் எப்பகுதிகளுக்குள்ளும் ஊடுருவி தம்மால் வெற்றிகரமாக தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது இரண்டாவது.
  • சிங்களப் படைத்துறையின் வடபோரரங்கு தாக்குதல் நடவடிக்கைக்கான பிரதான பின்தள மையமாக அனுராதபுரம் படைத்தளம் விளங்குவதால் அங்கு மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதல் மூலம் சிங்களப் படைத்தரப்பின் எதிர்கால மூலோபாய நடவடிக்கைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியமை மூன்றாவது.
  • சிங்களப் படையினர் தமிழீழத்திலே அகலக்கால் வைப்பதனால் தமிழீழத்தில் மட்டுமல்லாது தென்னிலங்கையில் காணப்படுகின்ற சிங்கள படை முகாம்கள் எல்லாமே புலிகளினால் இலகுவாக தாக்கியழிக்கப்படும் என்ற செய்தியை தெரிவித்துள்ளமை நான்காவது.
  • விடுதலைப் புலிகளின் தரைப்படையுடன் வான்படையும் இணைந்து நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்ற மரபுவழி போரியல் ஆற்றலை வெளிப்படுத்தியமை ஐந்தாவது.
  • இந்த வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கையின் மூலம் தாயகம், மற்றும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்களின் மனங்களிலே வெற்றிக்களிப்பினையும் உற்சாகத்தினையும் ஏற்படுத்தியமை ஆறாவது.

இளங்கோவனின் இறுதிக் குரல்....

விடுதலைப் புலிகளினால் முற்றுமுழுதான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த அனுராதபுரம் வான்படைத் தளத்தை மீளக் கைப்பற்றுவதற்காக பலமுறை சிறிலங்கா அரச படைகளானது முயற்சித்தபோதும் கரும்புலிகளின் மூர்க்கத்தனமான எதிர்த்தாக்குதல் காரணமாக அது சாத்தியமாகவில்லை.


வான்படைத் தளத்தின் கள நிலைமைகளைத் தெளிவாக வன்னியின் கட்டளைப்பீடத்திற்கு தொடர்ச்சியாக தெரிவித்துக்கொண்டிருந்த கரும்புலிகள் அணியின் தலைவர் லெப். கேணல் இளங்கோ, மூன்றாவது முறையாகவும் காயமடைகின்றார். அந்நிலையில் தனக்கு கீழ் செயற்பட்ட கரும்புலி வீரர்களுக்குரிய கட்டளைகளைச் சரிவர வழங்கி, தலைவன் நினைவைச் செயலில் முடித்த அந்த வீரன் கட்டளைப் பீடத்திற்கு தனது இறுதி வரிகளை கூறுகின்றான்.


"தலைவர் நினைச்சதை நாங்கள் செய்து முடிச்சிட்டம். நீங்களும் தலைவரின் திட்டத்தை சரியாகச் செய்யுங்கோ. தலைவர்தான் கவனம். அவர கவனமாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கோ. நான் மூண்டாவது தரமும் காயம் பட்டிட்டன். நான் தொடர்பைத் துண்டிக்கிறன்....." என்ற வார்த்தைகளோடு இளங்கோவின் குரல் அடங்கிப்போகின்றது.


இந்த கரும்புலிகளின் உயரிய அர்ப்பணிப்பு, தற்கொடை, தமிழ் மக்களின் மீதும் தேசியத் தலைவரின் மீதும் அவர்கள் வைத்திருந்த பாசம், அன்பு எல்லாமே போற்றுதற்குரியது. அந்த வீரர்களின் உயரிய விருப்பமான தமிழீழம் என்ற இலட்சியத்தினை அடைவதற்கு நாம் எல்லோரும் தலைவரின் பின்னால் அணிதிரண்டு சிங்கள படைகளுக்கு எதிராகப் போராடி சுதந்திர தமிழீழத்தினை விரைவில் அமைக்கவேண்டும். இதுவே இந்த மண்ணுக்காக தமது இன்னுயிர்களை ஈந்த அந்த கரும்புலி மாவீரர்களின் தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புக்களுக்கும் நாம் செய்யும் மரியாதையாக அமையும்.

குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ

அகமதாபாத்: குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது. குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50-க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இவரையும் குஜராத் வன்முறையில் நேரடியாகப் பங்கு கொண்ட 7 பேரையும், மோடிக்கு மிக நெருக்கமான அரசு வழக்கறிஞரையும் மேலும் 5 பேரையும் தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது. அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களில் படம் பிடித்தது. ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் இவர்கள் பேசியுள்ளனர். தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது.

வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி..

கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை, தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார். மேலும் நரோடா பாட்டியாவில் பெரிய அளவில் கொலைகள் நடந்த பின்னர் அதற்காக எங்களை மோடி அழைத்துப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் பட்.

போலீஸ் உதவியோடு பாம் தயாரித்தோம்...

விஎச்பியைச் சேர்ந்த அனில் படேல், தாபல் ஜெயந்தி படேல் ஆகியோர் கூறுகையில், விஎச்பி தொண்டர்கள் எனது தொழிற்சாலையில் தான் குண்டுகளைத் தயாரித்தனர். ராக்கெட் லாஞ்சர்களைக் கூட தயாரித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதற்கு போலீசாரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.

பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்....

பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் அந்த கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார். மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார். நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார். இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார்.இவை அனைத்தும் வீடியோவில் அப்பட்டமாக அப்படியே பதிவாகியுள்ளன. குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ரத்தோட் என்பவர் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏ மாயா பென் வீதி வீதியாக சென்று முஸ்லீம்களை விரைவாக கொல்லுங்கள், யாரையும் விடாதீர்கள் என்று வேகப்படுத்தினார் என்று கூறியுள்ளார். சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் கூறுகையில், போலீஸார் எங்களை அழைத்து சில இடங்களை சுட்டிக் காட்டி இங்கு முஸ்லீம்கள் சிலர் ஒளிந்துள்ளனர். அவர்களை விடாதீர்கள் என்று எங்களுக்கு வழி காட்டினர். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று வெளியிலிருந்து கதவுகளை மூடி உள்ளேயே வைத்து அவர்களை எரித்துக் கொன்றோம் என்று தெரிவித்துள்ளார்.விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ரமேஷ் தவே கூறுகையில், இதை நாங்கள் இப்போது செய்யவில்லை. கடந்த 20, 25 வருடங்களாகவே எங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் (முஸ்லீம்கள்) கொன்று குவித்துள்ளோம் என்று கூறியுள்ளார் தவே.

அரசு, நீதித்துறை, காவல்துறையின் கூட்டுச் சதி:

குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி ஷா கமிஷன் முன்பு ஆஜரான அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா கூறுகையில், கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. முதல்வர் நரேந்திர மோடி உயர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு வாய் மொழியாக உத்தரவிட்டார். கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மோடி மிகவும் அப்செட் ஆக இருந்தார். அகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால் முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். முஸ்லீம்களைக் கொன்ற தினத்தை ஆண்டுதோறும் இந்துக்கள் பெரிய அளவில் கொண்டாட வேண்டும். அதே சமயம் அவர்களைக் கொல்வதை விட நசுக்குவதுதான் மிகவும் சிறந்தது. இதன் மூலம் முஸ்லீம்கள் காலம் பூராவும் இந்துக்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள். முஸ்லீம்களைக் கொல்வதைப் போல அவர்கள் மீது பொருளாதார நெருக்கடியைத் திணிக்க வேண்டும் என்று கூறியுள்ள பாண்ட்யா இதை விட பயங்கரமாக, இந்த சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஷா கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டன பாஜக மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் என்றும் தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், நீதிபதி நானாவதியுடன் கூட்டாக விசாரித்த கே.ஜி.ஷா (இவர்தான் கமிஷனின் தலைவர்) ஒரு பாஜக அனுதாபி என்றும் கூறியுள்ளார் பாண்ட்யா. வி.எச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்கு சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக அவர்கள் வாதாடினர் என்றார்.

October 25, 2007

கற்றது தமிழ் / தமிழ் எம்.ஏ. இயக்குனர் ராம்

இன்றைய குறள்

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்

உயர்ந்தோர் ஏற்றுக்கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தாலும் கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்
அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் சட்டம் குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு

  • இந்தியாவில் திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்குள் உரிய சட்ட விதிகளை ஏற்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்துக்கு வந்த ஒரு விவாகரத்து வழக்கு, தற்போது தேசிய அளவில் இதுபோன்ற உத்தரவை நீதிமன்றம் பிறப்பிப்பதற்கு வழி ஏற்படுத்தியிருக்கிறது. சீமா என்பவர், தனது கணவர் அஸ்வினிகுமாரிடமிருந்து விவாகரத்து கோரி கடந்த 2005 ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்தபோது, திருமணம் நடந்ததற்கான ஆதாரத்தை நீதிமன்றம் கேட்டது. அதை அவர்களால் தர முடியவில்லை. இதையடுத்து, திருமணங்கள் பதிவு செய்வதைக் கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார் சீமா. இந்திய திருமணம் ஒன்றில் குதிரையில் வரும் மணப்பெண்அதே நேரத்தில், குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும், இருதரப்பினரின் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் திருமணங்களைத் தடுக்கவும், குறைந்தபட்ச திருமண வயதை உறுதி செய்யவும் திருமணப் பதிவுகள் உதவிகரமாக இருக்கும் என்று தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளும் கருத்துத் தெரிவித்திருந்தன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அனைத்து மதத்தினரும் திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும், அது தொடர்பாக மாநிலங்கள் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. மூன்று மாதங்களுக்குள் அதைச் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், அந்த வழக்கு மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் நீதிமன்ற உத்தரவின்படி செயல்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அந்த உத்தரவைச் செயல்படுத்தவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், திருமணப் பதிவைக் கட்டாயமாக்கும் வகையில் உரிய சட்டத்திருத்தம் செய்து, அதற்குரிய விதிமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என்று நீதிபதி அரிஜித் பசாயத் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. பல மாநிலங்கள், திருமணப் பதிவை இந்துக்களுக்கு மட்டும் கட்டாயமாக்கியிருப்பது குறித்து சுட்டிக்காட்டிய நீதிமன்றம்,இந்த திருமணப் பதிவுகள் இந்துக்களுக்கு மட்டுமன்றி, அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
  • இராணுவ அரசின் பிரதிநிதியை சந்தித்துள்ளார் அங் சான் சூ சீ: பர்மாவின் ஜனநாயக ஆதரவு தலைவி அங் சான் சூ சீ கடந்த இருபது ஆண்டுகளில் பெரும்பான்மையான காலத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தன் வீட்டிலிருந்து இராணுவ அரசின் உறுப்பினர் ஒருவரை சந்திப்பதற்காக வெளியில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்
  • பிபிசி செய்தியாளர் கடத்தப்பட்ட அனுபவம் குறித்த பெட்டகம் : மத்திய கிழக்கின் காசா பிராந்தியத்தில் செயற்படுகின்ற ஜிகாத் அமைப்பான இஸ்லாத்தின் இராணுவம் என்னும் அமைப்பால் கடத்தப்பட்ட பிபிசியின் முன்னாள் காசா நிருபர் அலன் ஜோண்ஸ்டன் அவர்கள், தான் கடத்தப்பட்டபோது தனக்கேற்பட்ட அனுபவங்களை முதல் தடவையாகப் பேசியுள்ளார்
  • இரான் மீது அமெரிக்கா புதிய தடைகள் : இரான் மீது அமெரிக்கா ஒருதலைபட்சமான மேலதிக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இரானிய இராணுவத்தின் சில பிரிவுகள் மீதும், மூன்று வங்கிகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள இத்தடைகள் அமெரிக்காவின் நலன்களை காப்பதாக இருக்கும் என்று அரசுத்துறைச் செயலர் கொண்டலீசா ரைஸ் தெரிவித்தார்
  • பிகேகேயின் நடவடிக்கைகளை சகிக்க முடியாது என்கிறார் துருக்கிய அதிபர் : வட இராக்கில் இருந்து செயல்படும் துருக்கிய குர்து இன இயக்கமான பிகேகே துருக்கி பிரதேசத்துக்கள் நடத்தும் எவ்வித தாக்குதலையும் தன்னால் சகித்துக்கொள்ளமுடியாது என்று துருக்கிய அதிபர் அப்துல்லா குல் கூறியுள்ளார்
  • பாகிஸ்தான் தாக்குதலில் 33 பேர் பலி : பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு வாகனம் ஒன்றை இலக்குவைத்து நடத்தப்பட்டுள்ள குண்டுத் தாக்குதலில் 29 படையினர் உட்பட குறைந்தபட்சம் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
  • இன்றைய (அக்டோபர் 25 வியாழக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

சர்க்கரை குறைபாடு

வயதான சங்கரன் பல வருடங்களாக நீரிழிவு நோய்க்கு மருந்துகள் எடுத்து வருகிறார். அமெரிக்காவில் பிள்ளை வீட்டில் தங்கி இருக்கும் போது, ஒரு நாள் மதிய உணவு சற்று தாமதமானது. நினைவு தப்பிவிடுகிறது! உடனடியாக குளூகோ மீட்டரில் சர்க்கரை அளவு பார்க்கப்படுகிறது. சர்க்கரையின் அளவு 30.54 வயது சரஸ்வதி அம்மாளுக்கு, கடந்த இரண்டு வருடங்களாக சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கிறது. குறிப்பாக, காலை வேளையில் மிகவும் குறைந்து அடிக்கடி மயக்கம் ஏற்படுகிறது. இதனுடன், எடை குறைதலும் வெகுவாக ஏற்படுகிறது. எப்போதும் கையில் சர்க்கரையும் பழச்சாறு மாகவே பயணிக்கிறார். பலமுறை பரி சோதனை செய்தபின் சர்க்கரை அளவு குறைவாகவும், இன்சுலின் அளவு மிக மிக அதிகமாகவும் இருப்பது தெரிய வருகிறது. இதற்குப் பின்னர் செய்யப்பட்ட MRI ஸ்கான் செய்ததில் கணையத்தில் (pancreas) கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. 35 வயது குமாருக்கு, சாப்பிட்டு 2 அல்லது 3 மணி நேரத்திற்குப் பிறகு தலை சுற்றல் ஏற்படுகிறது. வியர்வை பெருகுகிறது. சர்க்கரை அளவு குறைவாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, பின்னர் பல பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஏனென்று தெரியாமல், ஆனால் உடனடித் தீர்வுக்கு இனிப்புப் பண்டங்களுடன் வாழ்க்கையை வாழ்கிறார். 5 வருடங்களுக்குப் பின்னர், குமாருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. 45 வயதான மேரி மருத்துவமனையில் வேலை செய்கிறார். அவ்வப்போது மயங்கி விழுந்துவிடுவார். பரிசோதனையில் நீரிழிவு நோயாளிக்கான மருந்துகளின் அளவு ரத்தத்தில் அதிகமாக இருப்பது தெரிய வருகிறது. 75 வயதான வெங்கடேசன், ஒரு நாள் திடுமென்று மயங்கி விழுகிறார். சர்க்கரை அளவு 40. தெரியாமல், தனது நீரிழிவு நோய் மாத்திரைகளை இரண்டு முறை எடுத்துக் கொண்டது தெரிய வருகிறது. 65 வயதான அம்புஜம் அம்மாள் பல வருடங்களாக இன்சுலின் எடுத்து வருகிறார். வழக்கத்திற்கு மாறாக, காலை முக்கால் மணி நேரம் நடந்து சென்றார். மதியம் ஒரு மணி சுமாருக்கு, தொலைக்காட்சி பார்த்த வண்ணம் பேச்சு மூச்சின்றி விழுகிறார். ஒரு பக்கம் பக்கவாதம் போல் இழுத்துக் கொள்கிறது. 911 அழைத்ததில், சர்க்கரை அளவு 20. உடனடியாக இரத்த நாளங்களில் 'dextrose' செலுத்தப்படுகிறது. பக்கவாதம் முற்றிலும் குணமாகிவிடுகிறது.
மேற்கண்ட எல்லோருக்கும் பொதுவாக ஏற்பட்டது ஒன்றுதான்: ரத்தத்தில் சர்க்கரை குறைந்துவிடுதல். நீரிழிவு நோய் பற்றி அறிந்தவர்கள் சர்க்கரை குறைபாடு பற்றியும் அறிய வேண்டும். இரத்தத்தில் சர்க்கரை குறைவாக இருக்குமே யானால் அது hypoglycemia என்று சொல்லப்படுகிறது. இது பெரும்பாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மருந்துகளின் மூலம் ஏற்படும். ஒரு சிலருக்கு நீரிழிவு நோய் இல்லாமலேயே இந்த அறிகுறி ஏற்படுவதுண்டு. இந்த அறிகுறி வேறு சில நோய்களின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். இதைப் பற்றி இப்போது விவரமாகக் காணலாம்.
சர்க்கரை குறைபாட்டின் அறிகுறிகள் உடலில், குறிப்பாக மூளையின் அணுக்கள் சர்க்கரையின் உதவியிலேயே வேலை செய்கின்றன. உடலின் அணுக்களுக்கு சக்தி தருவதற்குச் சர்க்கரையின் அளவு சரியாக இருப்பது அவசியமாகிறது. ஆகவே, சர்க்கரை அளவு குறைந்தால் மூளை வேலை செய்வது பாதிக்கப்படுகிறது.
அதற்கான அறிகுறிகள்:
  • குழறலாகப் பேசுதல்
  • தலை சுற்றல்
  • மயங்கி விழுதல்
  • கண் பார்வை மங்குதல்
  • வலிப்பு ஏற்படுதல்
இவை தவிர வேறு சில அறிகுறிகளும் ஏற்படலாம்.
  • இதயத் துடிப்பு அதிகரித்தல்
  • படபடப்பு
  • கை உதறுதல்
  • வியர்வை பெருகுதல்
  • பசித்தல்
இந்த அறிகுறிகள் ஏற்படுமேயானால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு பார்த்தல் உசிதம்.
சர்க்கரை அளவு குறைவது எப்படி? நாம் உண்ணும் உணவு வகைகளை மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, புரதச் சத்து என்று மூவகையாகப் பிரிக்கலாம். இதில், மாவுச் சத்தாகிய கார்போஹைட்ரேட்கள் சர்க்கரை அணுக்களாகச் செரிக்கப்படுகின்றன. இந்த சர்க்கரை பேரணுக்கள் (molecule) உடலின் சதையில் உள்ள செல்களுக்குச் சக்தியைத் தருகின்றன. இந்த சர்க்கரையை செல்கள் உபயோகப்படுத்த இன்சுலின் என்ற இயக்கு நீர் (hormone) தேவைப்படுகிறது. இன்சுலின் அதிகமானால் சர்க்கரை வேகமாக உபயோகப்படுத்தப்பட்டு அளவு குறையலாம். ஆக, hypoglycemia ஏற்படுவதற்கு இன்சுலின் அளவு அதிகமாதல் ஒரு முக்கியக் காரணம். இன்சுலின் அளவு குறைவாக இருப்பவர்களுக்கும், இன்சுலினைச் சரியாகப் பயன்படுத்த முடியாதவர்களுக்குமே நீரிழிவு நோய் உருவாகிறது.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு hypoglycemia ஏற்படக் காரணங்கள்:
  • மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி போட்ட பின்பு சாப்பிடத் தாமதமாதல் வழக்கத்தை விட அதிகமாக உடற்பயிற்சி செய்தல்
  • சரியான சமயத்தில் சாப்பிடாமல் இருத்தல் (இன்சுலினில் அதிக நேரச் செயல்பாடு உடையவை உண்டு)
  • சிறுநீரகக் கோளாறு
  • ஈரல் கோளாறு (liver failure)
  • அதிகமாக மது அருந்துதல்
இவை தவிர நீரிழிவு நோய் இல்லாதவர்களிலும் இந்த வகை அறிகுறிகள் ஏற்படலாம்.
  • கணையம் என்ற நாளமில்லாச் சுரப்பியில் கட்டி ஏற்படுதல் (Insulinoma).
  • பிட்யூட்டரி, அட்ரினல், தைராய்டு போன்ற சுரப்பிகள் குறைவாக வேலை செய்தல்
நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இந்தக் கோளாறு காணப்படலாம். இதை impending Diabetes என்று சொல்வதுண்டு. வயிறு காலியாக இருக்கும் காலை வேளையில் சர்க்கரை அளவு குறைவதுண்டு. ஆனால் ஒரு சிலருக்கு, சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சுரக்கப்பட்ட இன்சுலினின் அளவு தேவைக்கு அதிகமாகி, 'reactive hypoglycemia' ஏற்படுவதுண்டு. Whipple's Triad
1. அறிகுறிகள் ஏற்படுதல்
2. இரத்ததில் அளவு குறைவாக இருத்தல்
3. சர்க்கரை கொடுக்கப்பட்ட பின்னர் அறிகுறிகள் சரியாகுதல்
இந்த மூன்றும் ஒரு நோயாளிக்கு இருக்குமேயானால், மேலும் பரிசோதனைகள் தேவைப்படலாம்.

பரிசோதனைகள்:
1.வெறும் வயிற்றில், 8-12 மணி நேர பட்டினி இருந்தபின் எடுக்கப்படும் இரத்தத்தின் சர்க்கரை அளவு
2.Glucose Tolerance test: சர்க்கரைத் தண்ணீர் அருந்திய பின்னர் 2 மணி நேரத்தில், 30 நிமிடங்களுக்கு ஒரு முறை சர்க்கரை அளவு எடுக்கப்படலாம்.
3.அதே நேரத்தில் இன்சுலின் அளவு எடுக்கப்படும்.
4.தைராய்டு, அட்ரினல் போன்ற மற்ற நாளமில்லாச் சுரப்பிகளின் அளவுகள்
5.நீரிழிவு நோயின் நிவாரண மருந்துகளின் அளவுகள்
6.வயிற்றுப் பகுதியின் CT ஸ்கேன் அல்லது MRI தேவைப்படலாம்.
நோய் தீர்க்கும் முறைகள்:
உடனடித் தீர்வு: சர்க்கரையின் அளவு குறைவது, மிகவும் ஆபத்தானது. அளவு அதிகரிப்பதை விடவும், குறைவது குறுகிய காலக்கட்டத்தில் உடலில் பாதிப்பு ஏற்படுத்த வல்லது. ஆகையால், இதற்கு உடனடியாக சர்க்கரையை வாய் வழியாகவோ, இரத்த நாளங்கள் வழியாகவோ செலுத்த வேண்டும். உடனடித் தேவைக்கு இனிப்புப் பண்டங்களும், குளிர் பானங்களும் பயன்படும். மாவுச் சத்து உணவு உண்பதால், ஒரு சில மணி நேரத்திற்குப் பலன் ஏற்படும்.
சிகிச்சை: உடனடியாகச் சர்க்கரையின் அளவை அதிகரித்த பின்னர், இந்த அறிகுறிகளுக்கான காரணத்தை ஆராய்ந்து, அதற்கான தீர்வை மருத்துவர் கண்டறிவர். மருந்துகள் காரணமாக இருந்தால், அவற்றை மாற்ற வேண்டி வரும். கணையத்தில் கட்டி இருந்தால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். குறிப்பாக Endocrinologist என்ற நாளமில்லாச் சுரப்பிகள் மருத்துவரின் ஆலோசனை தேவைப்படும்.
மேலும் விவரங்களுக்குப் பார்க்க வேண்டிய வலைதளங்கள்: www.mayoclinic.com/hypoglycemia www.hypoglycemia.org

நம்முடைய தனித்துவம்

"நம்முடைய தனித்துவம், 60 சதவீதம் கலை, கலாசாரம் மூலமும், 30 சதவீதம் வரை உணவு மூலமும், 10 சதவீதம் உடை மூலமும் பிரதிபலிக்கப்படுகிறது. இதைப் பேணிக் காக்க வேண்டும்" - பேராசிரியர் T.E.S. ராகவன்

October 24, 2007

இன்றைய குறள்

ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்

அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 31 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை, பாப்ரி மசூதி இடிப்பு : 15 இந்துக்களுக்கு ஆயுள் தண்டனை

  • தமிழகத்தின் கோயம்புத்தூரில் 1998 ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் கோவை அமர்வு நீதிமன்றத்தினால் இன்று அறிவிக்கப்பட்டது. கூட்டுச் சதி, கொலை மற்றும் கொலை முயற்சி, வெடிமருந்துகள் தடைச் சட்டத்தை மீறியது ஆகியவற்றுக்காக குற்றவாளிகளாகக் காணப்பட்ட 70 பேரில், 35 பேருக்கு இன்று தண்டனைகள் அறிவிக்கப்பட்டன. அல் உமா அமைப்பின் தலைவர் பாஷா மற்றும் செயலாளர் அன்சாரி உட்பட 31 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஏனைய நால்வருக்கு ஏற்கனவே அனுபவித்த தண்டனைக்காலம் போதுமானது என்று கூறி, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். எவருக்கும் மரண தண்டனை கிடையாது
  • இந்தியாவில் 15 இந்துக்களுக்கு ஆயுள் தண்டனை : இந்தியாவில், 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் இருந்த சர்ச்க்குரிய பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட பிறகு நடந்த கலவரங்களில் பங்கேற்று, கொலை மற்றும் பிற குற்றங்களை செய்தமைக்காக 15 இந்துக்களுக்கு வட இந்தியாவில் உள்ள ஒரு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
    பதினோரு முஸ்லீம்களை இவர்கள் உயிருடன் கொளுத்தியதாக நீதிமன்றம் குற்றம் கண்டுள்ளது. கொலை செய்தது, கலவரத்தில் ஈடுபட்டது, தீ வைத்தது போன்ற குற்றங்களைப் புரிந்ததாக 25 பேர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சுமார் 15 ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டவர்களில் ஒருவர் இறந்து விட்டார். மற்ற 9 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும் என்று தண்டனை பெற்றவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் யோகேஷ் பாஷின் கூறியுள்ளார்
  • குரானின் தங்கத்தால் ஆன பிரதி : இஸ்லாமியர்களின் புனித மறையான, திருக்குரானின் 800 ஆண்டு பழமை வாய்ந்த பிரதி ஒன்று லண்டனில் நடைபெற்ற ஏலத்தில், இருபது லட்சம் டாலர்கள் விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது
  • விடுதலைப்புலிகளின் சடலங்கள் அநுராதபுரத்திலேயே அடக்கம் : இதற்கிடையே, அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதலின்போது கொல்லப்பட்ட 20 கரும்புலிகளின் சடலங்களும் அநுராதபுரம் மாவட்ட நீதவானின் உத்தரவுக்கமைய அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது
  • ஆசியாவில் ஒரு புதிய விண்வெளிப் போட்டி : சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்கு செய்மதி ஒன்றை காவிச் செல்லும் திட்டத்துடன் இன்று சீனா ராக்கட் ஒன்றை வெற்றிகரமாக ஏவியுள்ளது.
    சீனாவின், விண்வெளித் திட்டத்தில் தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சாதனை இது

கருணை கொலைக்காக காத்திருக்கும் எய்ட்ஸ் நோயாளி

பதேஹாபாத் : அரியானா மாநிலத்தில் பதேஹாபாத் நகரில் அரசு மருத்துவமனைக்கு எதிரே தெருவின் ஓரத்தில் மெத்தை ஒன்றின் மேல் நோயாளி ஒருவர் படுத்து இருக்கிறார். அவருக்கு உதவி செய்ய யாரும் முன் வரவில்லை. எய்ட்ஸ் நோயால் கடுமையாக பீடிக்கப்பட்டுள்ள அந்த நபர் தன்னை கருணை கொலை செய்துவிடும்படி கதறி அழுது வருகிறார்.

அரியானாவை சேர்ந்தவர் நந்த் கிஷோர் (70). இவரது மகன் மோகன் (30). லாரி டிரைவர். பஞ்சாபில் லாரி ஓட்டி வந்தார். பல பகுதிகளுக்கு சரக்கு ஏற்றி சென்று வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன் சந்தோஷ் என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.கடந்த ஆண்டு மோகனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பல டாக்டர்களை பார்த்தும் நிலைமை சீரடையவில்லை. வருமானத்துக்கு வழியில்லாததால், மூதாதையர் வீட்டை விற்று நந்த் கிஷோர், மகனுக்கு சிகிச்சை அளித்தார். அதன் பிறகும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் தென்படவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு தான் மோகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிய வந்தது. இதன் பிறகு அவரது மனைவி சந்தோஷ் தனது மகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.பதேஹாபாத் அரசு மருத்துவமனையில் மோகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத் தில், மோகனுக்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லை என்று கூறி, டாக்டர் கள் கைவிரித்து விட்டனர். மருத்துவமனையை விட்டு மோகனை அழைத்து செல்லும்படியும் கூறி விட் டனர். இந்த நகரில் உள்ள ஒரு தர்மசாலாவில் தான் நந்த் கிஷோர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். எனவே, தனி வீடு பார்த்து மகனை கவனித்து கொள்ள வசதி இல்லை.எனவே, மருத்துவமனை வெளியே வெட்டவெளியில் சாலை ஓரம் ஒரு மெத்தையை போட்டு மோகனை படுக்க வைத்துள்ளார். மோகனின் உடலின் மேற்புறத்தில் கொப்புளங்கள் தோன்றியுள்ளன. அவரால் நடந்து செல்லக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு நிலைமை மோசம் அடைந்துள்ளது. அவர் அருகே கூட செல்ல யாரும் விரும்புவதில்லை. அதையும் மீறி அருகே வரும் நபர்களிடம் தன்னை கருணை கொலை செய்து விடும்படி மோகன் கதறி அழுகிறார். ஆனால், அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் மோகன் தங்கள் பகுதியில் படுத்து இருப்பதை மிகவும் அசவுகரியமாக கருதுகின்றனர். எனவே, மோகனை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என நந்த் கிஷோருக்கு கெடு விதித்துள்ளனர். தனது மகன் விரைவில் இறந்து விடுவான் என்பது நந்த் கிஷோருக்கு நன்கு தெரியும். டாக்டர்களும் இதை உறுதி செய்துள்ளனர். மரணம் தனது மகனுக்கு நிம்மதியை அளிக்கும் என்ற நம்பிக்கையில், தள்ளாத வயதில் நந்த் கிஷோர் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்து வருகிறார்.

October 23, 2007

பார்வையற்றோர் பயன்படுத்த வசதியாக கம்ப்யூட்டர் மென்பொருள் கண்டுபிடிப்பு

சென்னை: பார்வையற்றோர் கம்ப்யூட்டர் நிபுணராக வளர பயன்படும் மென்பொருளை மும்பையைச் சேர்ந்த் கம்ப்யூட்டர் நிபுணர் தயாரித்துள்ளார். இதுகுறித்த விளக்க கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. பார்வையற்றோரும் கம்ப்யூட்டரை பயன்படுத்துவதற்கான புதிய மென்பொருளை கண்டுபிடித்த மும்பை கிருஷ்ணகாந்த் மானே, சென்னையில் உள்ள பார்வையற்றோர் மத்தியில் மென்பொருளை பயன்படுத்துவது குறித்து நேற்று விளக்கினார். இந்த நிகழ்ச்சிக்கு `எல்காட்' ஏற்பாடு செய்திருந்தது. சென்னை நந்தனம் ` எல்காட்' வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் `எல்காட்' மேலாண் இயக்குனர் உமாசங்கர் பேசுகையில் கூறியதாவது: மும்பை, டாடா அடிப்படை ஆய்வு மைய ஆலோசகர் கிருஷ்ணகாந்த் மானே பார்வையற்றவர். இவர் தனது முயற்சியால் தற்போது பார்வையற்றவர்கள் எளிதில் கம்ப்யூட்டரை பயன்படுத்துதல், `புரோகிராமிங்' செய்தல், இ- மெயில் அனுப்புதல் உள்ளிட்ட பணிகளை செய்வதற்கான பிரத்யேக மென்பொருளை கண்டுபிடித்துள்ளார். தற்போது பூந்தமல்லி அரசு உயர் நிலைப்பள்ளி பார்வையற்ற மாணவர்கள் மற்றும் லிட்டில் பிளவர் பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் என 70 மாணவ, மாணவியருக்கு இங்கு புதிய மென்பொருளை பயன்படுத்துவது பற்றி பயிற்சியளிக்கிறார். கம்ப்யூட்டர் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் இந்த மென்பொருளை மேம்படுத்துவதற்கான பணிகளில் இவர்களும் ஈடுபட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்' என்றார்.

முஸ்லிம் அமைப்புகள் ஒரே அணியில் செயல்பட வேண்டும்: ஒசாமா அழைப்பு

கெய்ரோ: "ஈராக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் அமைப்புகள் ஒரே அணியில் இணைந்து செயல்பட வேண்டும்" என அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் வேண்டுகோள் விடுத்துள்ள `ஆடியோ டேப்' வெளியாகி உள்ளது. அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பேசிய `ஆடியோ டேப்' அல்-ஜசீரா `டிவி'யில் ஒளிபரப்பானது. அதில், பின்லேடன் பேசியிருப்பதாவது: ஈராக்கில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு முஸ்லிம்கள் அமைப்புகள் தனித்து செயல்படுவது கவலையளிக்கிறது. கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, அனைவரும் ஒரே அணியில் இணைந்து செயல்பட வேண்டும். அவர்கள் தவறு செய்கின்றனர். உங்களில் சிலர் கடமைகளை மறந்து செயல்படுவது கவலையளிப்பதாக உள்ளது. இது சரியான நடவடிக்கை அல்ல. இதனால், நமது சகோதரர்களுக்கு இடையே பிரிவினை ஏற்படும். தனித்தனியாகச் செயல்படுவோர் ஒரே அணியில் இணைவதைக் காண முஸ்லிம்கள் காத்திருக்கின்றனர். உங்களுக்கான கடமையிலிருந்து தவற வேண்டாம். அனைத்து இடங்களிலும் உள்ள அல்-குவைதா அமைப்பின் சகோதரர்கள் குழுக்களாக பிரிந்து பயங்கரவாதத்தைச் செயல்படுத்தக் கூடாது. தலைவர்கள் தங்களது தனிப்பட்ட செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக போராடக் கூடாது. அதற்கு பதிலாக முஜாகிதீன்களின் வழியை பின்பற்ற வேண்டும். முஜாகிதீன்கள் இந்த நாட்டின் செல்வங்கள். இறைவன் கட்டளையை மீறுவோர் அதற்கான தண்டனையை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு பின்லேடன் பேசியுள்ளார். சமீபகாலமாக ஈராக்கில் போராடி வரும் முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர். குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் அமெரிக்க ராணுவத்தோடு இணைந்து கொண்டு, அல்-குவைதாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டே, பின்லேடனின் பேச்சு அடங்கிய `டேப்' வெளியிடப்பட்டுள்ளது என அமெரிக்க ராணுவ தரப்பில் கூறப்படுகிறது. இந்த `ஆடியோ டேப்' எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது பற்றிய விவரங்களை அல்-ஜசீரா வெளியிடவில்லை. இது பற்றி அமெரிக்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் வீட்டுக்குள் தெரியாத நபர் நுழைந்தது சரியா? : சட்டம் ஒழுங்கு எங்கே?

விடுதலைப்புலிகள் விசயத்தில் திமுக மற்றும் அதிமுக-வின் நிலை

கற்றது தமிழ் / தமிழ் எம்.ஏ : இயக்குனர் ராம்

இன்றைய குறள்

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்

நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும், தீயொழுக்கம் தீராத துன்பம் தரும்

அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்தில் அவரை இந்தச் சமுதாயம் அங்கீகரிக்கவில்லை

"சாமானிய மக்களையும் சிந்திக்க வைக்கும் வகையில் கதைகளை எழுதியவர் புதுமைப்பித்தன். அவர் வாழ்ந்த காலத்தில் அவரை இந்தச் சமுதாயம் அங்கீகரிக்கவில்லை. அவர் எழுதியது வட்டாரத் தமிழ், சுத்தத் தமிழ் அல்ல என்று விமர்சனம் செய்தனர். ஆனால் பேச்சுத் தமிழ்தான் ஜீவ சக்தி என்று புதுமைப்பித்தன் அனைவருக்கும் உணர்த்தினார். இளைய தலைமுறையினர் புதுமைப்பித்தன் எழுதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும்" - ஆர். நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழாவில்...

கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்துகொண்டிருக்கும் காட்டுத்தீ : கலிபோர்னியா மாகாணம், சான்டியாகோ - 1

கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்துகொண்டிருக்கும் காட்டுத்தீ : கலிபோர்னியா மாகாணம், சான்டியாகோ - 2

கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்துகொண்டிருக்கும் காட்டுத்தீ : கலிபோர்னியா மாகாணம், சான்டியாகோ - 3

படியில் பயணத்தைத் தவிர்க்க தமிழக அரசு புதிய அதிரடி நடவடிக்கை


"Please Click to Enlarge"

October 22, 2007

உறவின் கதை - குறும்படம்

இன்றைய குறள்

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவ ரெய்தாப் பழி

நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும், இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்

அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

தமிழ்நாட்டில் அனைத்தும் அரசியலாக்கப்படுகிறது - மருத்துவர் இராமதாசு

"அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் எந்தப் பிரச்சினை என்றாலும் அங்கு அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுகிறார்கள். ஒரே குரலில் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். முழங்குகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை. இங்குதான் அனைத்தும் அரசியலாக்கப்படுகிறது. இதற்குக் காரணம் அரசியல்வாதிகள்தான். முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையையும் இப்படிதான் அரசியலாக்கினார்கள். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே அனைத்துப் பிரச்னைகளிலும் அப்போதிருந்தே இப்படித்தான் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும்" - மருத்துவர் இராமதாசு, நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி

தமிழ் நாட்டைச் சேர்ந்த ரோஸ் என்கிற அரவாணி, தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக செயல்பட இருக்கிறார்

  • வழக்கமாக ஆண் அல்லது பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மாத்திரமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழி நடத்தி வருகிறார்கள். போட்டி நிறைந்த இந்த துறையில், ஆணாக பிறந்து பால் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய அரவாணியான ரோஸ் நுழைந்திருப்பது, ஒதுக்கப்பட்ட பாலினத்தவரின் முன்னேற்றத்தில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. தமிழ் சமூகத்தில் மூன்றாம் பாலினமான அரவாணிகள் குறித்து மிகவும் மலிவான கருத்துருவாக்கம் நிலவுவதாக கூறும் ரோஸ் அவர்கள், இந்த தவறான புரிதலைப் போக்குவதற்காகவே, தாம் ஊடகத்துறையை தேர்ந்தெடுத்ததாக தமிழோசையிடம் தெரிவித்தார். தாம் வழி நடத்த இருக்கும் வாராந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி, சமூகத்தின் அனைத்து விதமான பிரச்சினைகளைப் பற்றியும் விவாதிக்கும் என்றாலும், அரவாணிகள் மற்றும் பாலினமாறிகள் தொடர்பான பிரச்சினைகள் முக்கியமாக இடம்பெறும் என்கிறார் ரோஸ். தமிழோசைக்கு ரோஸ் அவர்கள் அளித்த பிரத்யேக செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம். http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2007/10/071018_transrose?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1
  • தமிழகத்தில் உயர்நிலைப்பள்ளிகளில் ஒரே மாதிரியான பாட நெறிக்கான பரிந்துரைகள் : மாணவிகள்தமிழகத்திலுள்ள உயர்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருந்த கல்வியாளர் முத்துகுமரன் தலைமையிலான குழுவின் அறிக்கை இன்று சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது
  • அநுராதபுரம் விமானப் படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகள் பெரும் தாக்குதல் : இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் புராதன நகராகிய அனுராதபுரத்தில் அமைந்துள்ள வடபகுதிக்கான கேந்திர முக்கியத்துவம் மிக்க விமானப்படைத்தளத்தின் மீது தரையிலும், வான்பரப்பிலும் ஊடுருவிய விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர்
  • குர்து போராளிகள் பிரச்னைக்கு ராஜீய தீர்வுக்கு துருக்கி முயற்சி : துருக்கி நிலப்பரப்பில் குர்த் இன போராளிகளின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவதற்காக இராக்கிற்குள் துருப்பினரை அனுப்புவதற்கு முன்பாக ராஜீய முறையில் பிரச்சினைக்கு தீர்வுகாண அனைத்து வழிகளையும் துருக்கி முயன்று பார்க்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி பாபகன் கூறியுள்ளார்
  • கென்ய நாடாளுமன்றம் கலைப்பு, 90 நாட்களில் தேர்தல் : கென்யாவின் அடுத்த நாடாளுமன்றத்தேர்தல்கள் நடப்பதற்கு வழிசெய்யும் முகமாக அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கென்ய அதிபர் ம்வாய் கிபேகி அவர்கள் இன்று கலைத்திருக்கிறார்
  • நியூயார்க் பங்குச்சந்தையில் பங்குகளின் விலை மீண்டும் சரிவு : அமெரிக்க பொருளாதாரத்தின் ஆரோக்கியம் குறித்து கவலைகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து நியூ யார்க் பங்கு சந்தையில் பங்குகளின் விலை மீண்டும் சரிந்துள்ளது. இன்று திங்கட்கிழமை காலை டவ் ஜோன்ஸ் பங்கு சந்தை திறந்தபோது தொழிற்சாலை பங்குகள் சராசரி கிட்டத்தட்ட ஒரு சதவீதம் வீழ்ச்சி கண்டது. கடந்த வெள்ளிக்கிழமை இது 2.6 ஆறு சதவீதம் சரிந்திருந்தது

October 21, 2007

ஜீசஸ் கிறிஸ்ட் பல்லி

இன்றைய குறள்

ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து

மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்
அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

எனது ஆட்சியை விரும்பாவிட்டால் நான் ஒதுங்கிக் கொள்ளத் தயார் - தமிழக முதல்வர்

"அரசின் நல்ல திட்டங்களுக்கு முட்டுக் கட்டைகள் போடும் கூட்டணி நண்பர்கள், அரசியல் கட்சிகள் எனது ஆட்சியை விரும்பாவிட்டால் நான் ஒதுங்கிக் கொள்ளத் தயார். எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். எங்களால் முடியாவிட்டால், இவ்வளவுதான் முடிந்தது என்று உங்களிடம் விடை பெற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம். இதற்கு மேல் வேறு ஏதாவது செய்ய வேண்டுமென்றால் வேறு யாராவது வந்து செய்யட்டும். நான் தாராளமாக அவர்களை வாழ்த்த, பாராட்ட, அவர்களுக்குப் புகழ்மாலை சூட்டக் கடமைப்பட்டுள்ளேன்" - மு. கருணாநிதி, தமிழக முதல்வர்

மேற்குலக நாடுகளின் ஆபத்தான கழிவுகளுக்கு இந்தியா குப்பைக்கூடையா?

  • அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் நச்சுத்தன்மை படைத்த கழிவுப்பொருட்களை கொட்டும் இடமாக இந்தியாவைக் கருதுகின்றனவா என்ற கேள்வி இப்போது மீண்டும் எழுந்திருக்கின்றது. காகிதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கழிவுப்பொருட்கள் என்று கூறி கேரள மாநிலம் கொச்சியில் ஒரு தனியார் நிறுவனம் இறக்குமதிசெய்த சரக்குப்பெட்டகங்களை சோதித்துப்பார்த்தபோது, 60 டன் பொருட்களில் ஏறத்தாழ 40 டன்கள், மருத்துவமனை மற்றும் இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கழிவுகளாக இருந்ததாக நேற்று முன்தினம் அம்மாநில நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஸ்ரீமதி செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். வந்த சரக்குப்பெட்டகங்கள் திருப்பி அனுப்பப்படுவது மட்டுமல்ல, சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்திருந்தார். இதனிடையே மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இவ்வாறு ஆபத்தான கழிவுப்பொருட்கள் இந்தியாவுககு அனுப்பப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் சம்பவம் பற்றி ஆய்வுசெய்து விவரங்களை திரட்டி பின்னர் அரசாங்க மட்டத்தில் நடவடிக்கை எடுககப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். குஜராத் மாநிலத்தில், மேலை நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படாத பழைய கப்பல் உடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு நச்சுப்பொருட்களை உள்வாங்கி, தொழிலாளர்கள் பல்வேறு நோய்களால் பீடிககப்படுவது குறித்து அடிக்கடி இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாவது உண்டு.
    ஓரிரு சந்தர்ப்பங்களில் அத்தகைய கப்பல்கள் திருப்பி அனுப்பட்பட்டாலும் அத்தொழில் தொடரவே செய்கிறது. ஆனால் காகிதக் கழிவென கூறி ஆபத்தான மருத்துமனை கழிவுப்பொருட்களை அனுப்பிவைப்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் தூய்மை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் நிலையில், மேலை நாட்டு நிறுவனங்கள் நச்சுத்தன்மைபடைத்த இயந்திர தொழிற்சாலை அல்லது மருத்துவமனை கழிவுகளை இந்தியா உள்ளிட்ட பல்வேறு வளரும் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த சுற்றுப்புறச்சுழல் ஆர்வலர் நித்தியானந்தன் ஜெயராமன். இது தொடர்பான அவரது செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.
  • இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்கள் : இலங்கையின் வடக்கே, மன்னார் தம்பனை, பெரியதம்பனை மற்றும் யாழ்ப்பாணம் நாகர்கோவில் ஆகிய இராணுவ முன்னரங்க பகுதிகளில் நடந்த மோதல்களில் ஒன்பது விடுதலைப்புலிகளும், இரண்டு ராணுவத்தினரும் கொல்லப் பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது
  • நெஞ்சம் மறப்பதில்லை - பாகம் ஐந்து : தமிழ் திரையுலகில் புராண பக்தி கதைகள் ராஜா ராணிக் கதைகள் மட்டுமே வந்துகொண்டிருந்த நிலை மாறி சமுதாய விழிப்புணர்வு, பகுத்தற்றிவுக் கொள்கைகள் ஆகியவற்றைக் கதைக்களமாக கொண்ட திரைப்படங்கள் வரத்தொடங்கியது தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் வேரூன்றிய காலகட்டமான ஐம்பதுகளின் துவக்கத்தில்தான்
  • இராக் தாக்குதலில் 49 சந்தேக நபர்களை கொன்றுள்ளதாக அமெரிக்க ராணுவம் கூறுகிறது : இராக் தலைநகர் பாக்தாதில் நடந்த ஆக்ரோஷமான சண்டையில் தீவிரவாத சந்தேகநபர்கள் 49 பேரை கொன்றிருப்பதாக இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவம் கூறுகிறது.
    ஷியா போராளிகள் வலுவாக உள்ள இடமென்று அறியப்படும் சதர் நகர் பகுதியில் நடந்த மூன்று வெவ்வேறு சம்பவங்களில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என அது தெரிவிக்கிறது

அதிசயம் : இரண்டு கன்றுகள் பிரசவித்த பசு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகிலுள்ள கொன்னையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், சாந்தாமணி தம்பதியர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பால் கறப்பதற்காகக் கடந்த வருடம் வாங்கி வந்த சிந்து இனப்பசு ஒன்று கடந்த புதன் இரவு பத்துமணியளவில் அனைவரும் வீட்டிற்குள் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் புதைந்து மெகாசீரியல்களில் அழுதுகொண்டிருக்கும்போது, திடீரெனச் சத்தம் கேட்டு அனைவரும் ஓடிவந்து பார்த்தனர். வெளியில் உள்ள தெருவிளக்குக் கம்பத்தில், கட்டாந்தரையில் லேசான தடுமாற்றத்தோடு துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்த கன்றுகளைப் பார்த்ததும் தன்னை மறந்து அனைவரும் சந்தோசக்களிப்பில் துள்ளிக்குதித்தனர். அந்தச்சுற்றுவட்டார மக்கள் அனைவரும் ஆச்சர்யத்தோடு வந்து பார்த்துச் செல்கின்றனர். கன்றுகளில் ஆண் ஒன்று பெண் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக ஒரு பசு ஒரு கன்று ஈனுவதே வழக்கம். செய்தி : நண்பர் விஜய் - திருச்செங்கோடு

October 20, 2007

தமிழகத்தின் கோவையில் வீடு இடிந்து வீழ்ந்து 13 பேர் பலி

  • தமிழகத்தில் கோயம்புத்தூர் நகரில் வெள்ளிக்கிழமை இரவு, 24 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்ததில் மூன்று பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தார்கள்
  • காஷ்மீரில் பள்ளி ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் : இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா பகுதியில் பள்ளி ஆசிரியர் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்
  • இரான் அணுசக்தி விவகார தலைமை பேச்சாளர் அலி லாரிஜானி பதவி விலகல் : இரானின் அணு விவகாரங்களுக்கான தலைமை பேச்சாளரான அலி லாரிஜானி எதிர்பாராதவிதமாக இராஜினாமா செய்துள்ளார்
  • குர்த் கிளர்ச்சிக்காரர்களை துருக்கி தாக்க எத்தனிப்பதற்கு சிரியா ஆதரவு தெரிவித்திருப்பதை இராக் அதிபர் விமர்சித்துள்ளார் : வடக்கு இராக்கிலுள்ள குர்த் இன கிளர்ச்சிக்காரர்களுக்கெதிராக நடக்ககூடிய துருக்கியின் ராணுவ நடவடிக்கைக்கு சிரியா ஆதரவு தெரிவித்திருப்பதை இராக் அதிபர் ஜலால் தாலிபானி விமர்சித்துள்ளார்
  • இராக்கில் அல்கொய்தா சந்தேகநபர்கள் 11 பேரைக் கொன்றதாக கூறுகிறது அமெரிக்க இராணுவம் : இராக்கின் சமர்ரா நகரத்தில் கடந்த சில நாட்களாக நடத்திய வான்தாக்குதலில் பதினோரு அல்கொய்தா சந்தேகநபர்களை கொன்றிருப்பதாக இராக்கில் இருக்கின்ற அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது
  • ரஷ்யாவில் புதிய அரசியல் இயக்கம் தொடங்கியுள்ளார் முன்னாள் சோவியத் ஒன்றியத் தலைவர் கோர்பசேவ் : புதிய இயக்கம் தேர்தலில் போட்டியிடப்போவதில்லைமுன்னாள் சோவியத் ஒன்றியத் தலைவர் மிக்காயல் கோர்பசேவ் ரஷ்யாவில் ஜனநாயகத்துக்கெதிரான துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ளார்

பின்னனிப் பாடகர் ரஞ்சித் - 1

பின்னனிப் பாடகர் ரஞ்சித் - 2

October 19, 2007

பின்னனிப் பாடகர் ரஞ்சித் - 3

பின்னனிப் பாடகர் ரஞ்சித் - 4

கற்றது தமிழ் / தமிழ் எம்.ஏ : இயக்குனர் ராம் - 1

நம்ம சென்னை

இன்றைய குறள்

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு

பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது

அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்திலுள்ள பழமைவாத சக்திகள் மீது பெனாசிர் பூட்டோ பழி

  • 130 பேர் பலியான கராச்சி குண்டுவெடிப்பு - தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்திலுள்ள பழமைவாத சக்திகள் மீது பெனாசிர் பூட்டோ பழி : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தன் மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சியை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கூறி கண்டித்துள்ளார். நாடு கடந்த நிலையில் வாழ்ந்துவந்த பெனாசிர் பூட்டோ பாகிஸ்தான் திரும்பியதை கொண்டாடும் முகமாக கராச்சியில் நடந்த வரவேற்பு ஊர்வலத்தில் ஏராளமான ஆதரவாளர்கள் மத்தியில் நடந்த தாக்குதலில் 130 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். தன் மீதான இஸ்லாமியவாதிகளின் கொலைத் திட்டங்கள் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தான் ஏற்கனவே தெரிவித்திருந்ததாகவும் ஆனாலும் தான் அரசாங்கத்தின் மீது குற்றம்சுமத்தவில்லை என்றும் பூட்டோ இன்று செய்தியாளர்களிடம் கூறினார். தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார். தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளன என்று எச்சரிக்கைகள் வந்தும் நாள் முழுக்கவுமாக பூட்டோ ஏன் ஊர்வலம் சென்றார் என்று கேள்விகள் கேட்கப்படுவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்
  • விடுதலைப்புலிகளிடம் இருந்து தப்பவே இந்தியா செல்ல முற்பட்டதாகக் கூறுகிறார் வியாழக்கிழமையன்றைய மன்னார் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத் தலைவர் : இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் பேசாலை கடற்பரப்பில் வியாழக்கிழமையன்று கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத் தலைவரான ஜேசுதாஸ் ஜீன் மக்சிமச அவர்கள், விடுதலைப்புலிகள் தனது பிள்ளைகளை பலவந்தமாக இயக்கத்துக்கு ஆட்சேர்த்துவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாக தனது பிள்ளைகளை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல விளைந்தபோதே தம்மீது இலங்கைக் கடற்படை சுட்டுவிட்டதாக தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்
  • துருக்கி தாக்குதலை எதிர்கொள்ளத் தயார்: வடக்கு இராக்கில் தளமமைத்துச் செயற்படும் குர்து இன பிரிவினைவாதப் போராளிகளை தாக்குவோமென்ற தமது எச்சரிக்கை துருக்கி நடைமுறைப்படுத்த முற்பட்டால், தமது பிராந்தியத்தைப் பாதுகாக்க தமது மக்கள் தயாராக இருப்பதாக, வடக்கு இராக்கின் குர்து இன பிராந்தியத்தின் அதிபர் தெரிவித்துள்ளார்
  • மணிலா குண்டுவெடிப்பில் 8 பேர் பலி : பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் மக்கள் நடமாட்டம் நிறைந்த கடை வளாகம் ஒன்றில் குண்டொன்று வெடித்துள்ளதை அடுத்து நாட்டின் பொலிஸ்துறையும் ராணுவமும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நாட்டின் அதிபர் கிளோரியா அர்ரோயோ கூறியுள்ளார்
  • இன்றைய (அக்டோபர் 19 வெள்ளிக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

"நான் பாட்டெழுத வந்தகாலம்" - கவிஞர் வைரமுத்து

"நான் பாட்டெழுத வந்தகாலம் - திரையுலகில் சுதந்திரப் போராட்டத்தின் சூடு குறைந்துபோன காலம்; பொதுவுடைமைச் சித்தாந்தம் வெளிநடப்புச் செய்த காலம்; திராவிட இயக்கத்தின் தீவிரம் தீர்ந்துபோன காலம்; வீரியத் தமிழ் பேசும் இதிகாசப் படங்கள் சரிந்துபோன காலம்; அண்ணன்-தங்கை, அன்னை-பிள்ளை, அண்ணன்-தம்பி என்ற உறவுகளை உள்ளடக்கம் கொள்ளலாம் என்றால் கூட்டுக் குடும்பங்கள் கலைந்து வந்த காலம், என் கையில் திணிக்கப்பட்டதும், என் பேனாவில் நிரப்பப்பட்டதும் காதல், காதல், காதல். அதுவும் நுகர்வுக் கலாசாரத்தில் நொறுங்கிப் போன காதல்" - கவிஞர் வைரமுத்து

கானல் குறும்படம்

October 18, 2007

இன்றைய குறள்

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக்கொள்ளமுடியும். ஆனால் பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்

அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

சமுதாய அளவில் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன

நம் சமூகம் குழப்பத்தில் இருக்கிறது. சமூக நீதியைக் காப்பதா? திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு திறமையானவர்களை ஊக்குவிப்பதா? என்பதே அது. சமுதாய அளவில் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன, சமூகத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களை மேலே கொண்டு வர இடஒதுக்கீடு அவசியம்தான். அதே நேரத்தில் மிகச் சிறந்த மேதைகளை உருவாக்குவதற்குத் திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட சீர்மிகு மையங்களை ஏற்படுத்தவேண்டும். - ஐராவதம் மகாதேவன், தொல்லியல் வல்லுநர், தினமணியின் முன்னாள் ஆசிரியர்

தவறு செய்தவனே தண்டனை பெறவேண்டும்?!

October 17, 2007

ஷூட்டிங் ஸ்டார்

இன்றைய குறள்

ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிபிறப்புக்கு எடுத்துக்காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்

அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை